படைத்திறல் பல்லவர்கோன் | 8 | பத்மா சந்திரசேகர்

8. ஆத்திரம் காஞ்சிபுரம் அரண்மனையில் பின்மாலை நேரத்தில் தனது தனியறையில் இருந்தார் மன்னர் நந்திவர்மர். அறையின் மையத்தில் ஒரு பெரிய கட்டில் போடப்பட்டு, இலவம்பஞ்சிலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்பட்டு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அறை தீபங்களின் ஒளியால் நிறைந்திருந்தது. விழிகள்…

படைத்திறல் பல்லவர்கோன் | 7 | பத்மா சந்திரசேகர்

7. வார்த்தைச் சிதறல் நந்திவர்மர் உத்தரவை ஏற்று மறுநாளே மதுரை புறப்பட்டார் குமராங்குசர். மதுரையை அடைந்தவர் கோட்டை வாயிலை நெருங்கினார். பகல் பொழுதாகையினால் அகழிப்பாலம் திறந்தே இருந்தது. அகழிப்பாலத்தை நெருங்கியவரை மறித்தது இரு வீரர்களின் வேல். “ஐயா. தங்களைப் பார்த்தால் வெளியூர்…

படைத்திறல் பல்லவர்கோன் | 6 | பத்மா சந்திரசேகர்

6. சம்மதம் கிட்டுமா..? நந்திவர்மர் மாறன்பாவையை சந்தித்து, தனது மனதை வெளிப்படுத்திய பின்னர், ஏரிக்கரை மண்டபம் நோக்கி நடந்தார். அவரது மனதில் ஒருபுறம் மாறன்பாவையின் உடலிலிருந்து வெளிப்பட்ட சுகந்தமும், மறுபுறம் சங்காவின் காதலின் ஆழமும் போட்டியிட்டு சஞ்சலப்படுத்தின. “ஐயனே. அந்தப் பெண்ணை…

படைத்திறல் பல்லவர்கோன் | 5 | பத்மா சந்திரசேகர்

5. காதல் மனம் தன்னை அணைத்து, தனது இதழ்களில் முத்தமிட்ட நந்திவர்மரை பிடித்துத் தள்ளிய அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்த நந்திவர்மர் அதிர்ந்தார். “யார்.. யார் நீ?” பதிலேதும் வரவில்லை. எனினும், அந்த பெண்ணின் மெல்லிய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில்…

படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்

4. ஏரிக்கரை காஞ்சிபுரம் அரண்மனை பரபரப்பாக இருந்தது. பணிப்பெண்கள் இங்குமங்கும் ஓடியாடி ஏதோ செய்து கொண்டிருந்தனர். வீரர்கள் பணியாட்களிடம் ஏதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். அரண்மனை வாயிலில் ஒரு சிவிகை கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்த அந்த சிவிகையின் இருபக்கமும்…

படைத்திறல் பல்லவர்கோன் | 3 | பத்மா சந்திரசேகர்

3. சினம் கொண்ட சிங்கம் போரைத் தவிர்க்கும் உபாயம் உள்ளதாக சாத்தனார் கூறியதும், போரைத் தவிர்க்கும் எண்ணம் இல்லாவிடினும், அந்த உபாயம் என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி சாத்தனாரின் பேச்சை தொடரச் செய்தார் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். எனினும் அவர் அந்தப் பெயரை…

படைத்திறல் பல்லவர்கோன் | 2 | பத்மா சந்திரசேகர்

2. எதிராலோசனை பல்லவ மன்னன் தனது அமைச்சர் விக்கிரமர் மற்றும் சேனைத் தலைவர் கோட்புலியாருடன் ஆலோசனை செய்த நான்காவது நாள்..! மதுரைக் கோட்டை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது அந்த புரவி. அந்த அஸ்வத்தின் மீது அமர்ந்திருந்தவர் வெண்ணிறப் பட்டணிந்து, நீலவண்ண அங்கவஸ்திரம்…

படைத்திறல் பல்லவர் கோன் – 1 | பத்மா சந்திரசேகர்

1 ஆலோசனை சுக்லபட்ச சதுர்த்தசி சுக்கிரன் பூமிப்பெண்ணைக் காண எண்ணி சற்று விரைவாகவே உதித்திருந்தான். தங்கக்குழம்பை காய்ச்சி, வெள்ளிக் குழம்பில் கலந்து செய்த பெரும் வட்டில் போல, பொன்னும், வெள்ளியும் கலந்த நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தான். ‘நகரேஷு காஞ்சி’ என பாரவியாலும்,…

புதிய சரித்திரத் தொடர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!