-அமானுஷ்ய தொடர்- நாகங்களில் ‘ஆதிசேஷன்’ அதீத சக்தி வாய்ந்தவர்.நாக இனமானது, காஷ்யபர்-கத்ரு தம்பதிகள் மூலம் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன. கத்ரு, தனக்கு அதிசக்தி வாய்ந்த ஆயிரம் நாகங்கள் வாரிசாக பிறக்க வேண்டும் என்று தன் கணவரான காஷ்யப முனிவரிடம் வரம் பெற்றாள்.காஷ்யப முனிவரும், தன் மனைவி கத்ரு கேட்ட வரத்தை அளித்தார்.காஷ்யப முனிவரின் வரத்தின்படி, கத்ருவிற்கு ஆயிரம் நாகங்கள் வாரிசுகளாக பிறந்தன.கத்ருவின் முதல் நாக வாரிசு ‘சேஷன்’ என்னும் நாகமாகும்.நாக இனத்தில் முதன் முதலாக ‘சேஷன்’ […]Read More
Tags :ஆன்மீக மர்மத் தொடர்
26. வீட்டுச் சிறையில் மயூரி தொழிலதிபர் சரவணப்பெருமாள் குடும்பம் காலை டிபன் உண்டு கொண்டிருந்தனர். வழக்கம் போல் கனிஷ்கா, பாலில் கார்ன் பிளக்ஸ்-சை மிதக்க விட்டு, ஸ்பூனால் ஒவ்வொன்றாக எடுத்து வாயினுள் தள்ளிக் கொண்டிருந்தாள். தேஜஸ் பேப்பரை படித்துக்கொண்டே, நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், வெறுப்புடன் இடதுகையால் பேப்பரை விசிறி எறிந்தான். “போச்சு..! இனிமே ராஜஸ்தான் ராயல்ஸ் என்னை திரும்பி பார்க்கும்னு தோணலை. புது பையன்க நல்லாவே ஆடிட்டு வராங்க..!” –தேஜஸ் கூற, கனிஷ்கா தந்தையைக் கேள்வியுடன் பார்த்தாள். […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாக வழிபாடு, சூரிய வழிபாடு போலவே உலகம் முழுவதும் பரவியிருந்தது. நம் பாரத நாட்டில் வட மாநிலங்களில் உள்ள காஸ்மீர் பள்ளத்தாக்குகளில் ‘காங்கரா’ மற்றும் ‘சாம்பா’ பகுதியிலுள்ள கோயில்களில் சாந்தன நாகம், இந்துரு நாகம், கார்ஷ் நாகம், கார்க்கோடக நாகம், சாபிர் நாகம், பிரிதம் நாகம், டாகட் நாகம், பசக் நாகம் மற்றும் சேஷ நாகம் முதலிய நாகங்கள் மனித உருவில் வணங்கப்படுகின்றன. நாகங்களில் பெரிய பாம்புகளை விட, சிறிய பாம்புகளே ஆபத்தானவை.பெரிய வகை […]Read More
25. இரண்டில் ஒன்று, என்னிடம் சொல்லு..! போதினியும், சுபாகரும், குகன்மணியிடம் பணிபுரியும், குனோங் மற்றும் குமுதினியின் வாரிசுகள் என்பதை அறிந்துகொண்டதும், எல்லாமே குகன்மணி அரங்கேற்றும் நாடகம் என்பதை உணர்ந்தாள் மயூரி. சுபாகரும், மயூரியும், பண்ணை வீட்டு மாடி அறையில் இவளது குடும்பத்தினர் பேசியதை ரகசியமாக பதிவு செய்ய பட்டன் மைக் எதையாவது பொருத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், குகன்மணியால் இவர்கள் பேசியதை எப்படி சரியாக யூகிக்க முடியும்..? குகன்மணி மிகவும் ஆபத்தானவன். அவனது முருக பக்திகூட, ஒரு புகைத்திரையாகத்தான் […]Read More
-அமானுஷ்ய தொடர்- பாம்புகள் குறித்து பலவிதமான நம்பிக்கைகள் இன்றளவும் நிலவி வருகின்றது. பாம்புகள் அடிக்கடி கனவில் வந்தால் பாலுணர்வு எண்ணம் மேலிடும். அதைப்போலவே பாம்புகள் பின்னிப் பிணைந்து புணரும்போது அதனருகில் தூய்மையான புது வெண்மையான துணியை போட்டு விட வேண்டுமாம். நீண்ட நேரம் குறிப்பிட்ட அந்த இரண்டு நாகங்களும் அந்த வெள்ளைத்துணியில் புரண்டு எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்ற பிறகு, அந்த வெள்ளைத் துணியை எடுத்து பார்த்தால் அது மஞ்சள் நிறமாக மாறியிருக்கும். அந்த துணியை எடுத்து […]Read More
24. முக்கோண மலை கோலாலம்பூரின் சைனா டவுன் பகுதியில் நுழைவதற்கு முன்பே காட்டுப்பாதையில் வலது புறம் திரும்பினால் குகன்மணியின் எஸ்டேட் வந்துவிடும். சைனா டவுன் செல்லும் பாதையில் இருந்து பார்த்தால், வெறும் காடுகள் மட்டுமே இருப்பது போன்று தோன்றும். ஆனால் எஸ்டேட் பாதை இறங்கி சென்று பிரமாண்ட குகன்மணியின் மாளிகையின் முன்பு முடிவடையும். குகன்மணி யார்..? அவன் நோக்கம் என்ன..? எதற்காக அவன் தன்னையே சுற்றி வருகிறான்..? –போன்ற கேள்விகளுக்கு விடை காண, ஏதோ அசட்டு துணிச்சலில் […]Read More
-அமானுஷ்ய தொடர்- உலகிலுள்ள மனிதனின் ஆசைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை மண்ணாசை, பொன்னாசை மற்றும் பெண்ணாசை ஆகும். இந்த பட்டியலில் பதவி ஆசையும் சேர்த்துக் கொள்ளலாம். பதவி ஆசையால் என்னென்ன நிகழ்ந்து வருகின்றது என்பது நான் சொல்லாமலே உங்கள் புரியும்.மண்ணாசை மற்றும் பொன்னாசை என்பது மனம் சார்ந்த ஆசைகளாகும்.இவற்றைக் கூட நாம் நினைத்தால், இவ்வாசைகளை விட்டு விட முடியும். ஆனால், பெண்ணாசை என்பது உணர்வு சார்ந்தது.கவசக் குண்டலத்தோடு பிறந்த கர்ணனைப் போல, மனிதனின் உடலோடு ‘ஆசை’ […]Read More
23. பத்து மலைக்கு ஒரு சாவி கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்தின் பார்க்கிங் ஏரியாவில் இருந்து நழுவி, சைனா டவுனை நோக்கி மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது, அந்தக் கார். காரின் சாரதியாக, பல குழப்பங்களைத் தெளிவுபடுத்தப் போகிற குகன்மணி அமர்ந்திருக்க, அவன் அருகே, குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் அர்ஜுனனாக அமர்ந்துகொண்டிருந்தாள் மயூரி. “இதற்கு மேல் என்னால் பொறுத்திருக்க முடியாது ! நீங்க யாரு ? உங்களை ஒரு விமானின்னு ஜஸ்ட் லைக் தட், கூற முடியலை. சென்னையில எங்க பண்ணை […]Read More
-அமானுஷ்ய தொடர்- உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் எண்ணுகின்றனர்.இதில் தவறொன்றும் இல்லை. ஆனால், நாம் சம்பாதிக்கும் செல்வம் நேர்மையான வழியில் ஈட்டிய செல்வமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் பாவ-புண்ணியங்கள் நம்மை மட்டுமின்றி, நம் வாரிசுகளையும் நம் சந்ததியினரையும் தொடரும் என்பதை மறக்க வேண்டாம்.ஒரு மனிதன்,தன் இறப்பிற்கு பிறகு எதையும் எடுத்துச் செல்ல போவதில்லை ! அவன் செய்த பாவ-புண்ணியங்கள் மட்டுமே அவன் ஈட்டிய உண்மையான சொத்தாகும்.நம் இன்றைய செயல்களே, நம் நாளைய […]Read More
22. மயூரியைக் காணோம்..! மடியில் கிடந்த ‘கருரார் ஜலத்திரட்டு’ சுவடித் தொகுப்பை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள், மயூரி. இவள் உறங்கிக்கொண்டிருக்கும்போது இவள் மடியில் யாரோ அதனைப் போட்டு விட்டிருக்க வேண்டும். தான் கண்ட கனவுக்கும், அந்த சுவடிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடுமோ..? யோசித்தபடியே அவள் அமர்ந்திருக்க, தோழி இமேல்டா அந்தப்பக்கமாக வந்தாள். உறங்காமல் யோசித்தபடி அமர்ந்திருக்கும் மயூரியை வியப்புடன் பார்த்தாள் . “வாட்ஸ் ராங் ? தூங்காம ஆந்தை மாதிரி முழிச்சுக்கிட்டு இருக்கே..?” — இமேல்டா கேட்க, அவளை […]Read More