ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு

தரு​மபுரி / மேட்​டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடி​யாக உயர்ந்​துள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல்​லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 3,000 கனஅடி​யாக உயர்ந்​தது.

இதனிடையே, மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 38 கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று 50 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணையி​லிருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

தண்​ணீர் திறப்​பை​விட நீர்வரத்து குறை​வாக உள்​ள​தால் நீர்​மட்​டம் சரிந்து வரு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் 88 அடியி​லிருந்து 87.79 அடி​யாக​வும், நீர் இருப்பு 50.40 டிஎம்​சியி​லிருந்து 50.16 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!