10, பிளஸ்2 வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்​பு செய்​முறைத் தேர்​வு​கள் இன்று முடிவடைகின்​றன. தொடர்ந்​து, 10-ம் வகுப்​புக்கு 23 முதல் 28-ம் தேதி வரை செய்​முறைத்தேர்​வு​கள் நடக்கின்றன. இந்தச் சூழலில், பொதுத் தேர்​வுக்​கான ஏற்​பாடு​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் சென்​னை​யில் 16-ம் தேதி நடை​பெற உள்​ளது.

துறைச் செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன் உள்​ளிட்ட அதி​காரி​கள், அனைத்து முதன்மை மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்கள் பங்​கேற்​கின்​றனர்.

பொதுத் தேர்வு விடைத்​தாள், வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​கள் மற்​றும் தேர்வு மையங்​களில் அடிப்​படை வசதி​கள், பாது​காப்​பு, கண்​காணிப்பு அலு​வலர்​கள் நியமனம் உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இ​தில் ஆலோ​சிக்​கப்பட உள்​ள​து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!