தீபாவளியையொட்டி பி.எஸ்.என்.எல். இ-சிம் சேவை தொடக்கம்..!

பழைய வாடிக்கையாளர்கள் தங்களின் இணைப்பை இ-சிம் ஆக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். இ-சிம் சேவையின் தொடக்கம் மற்றும் தீபாவளி போனஸ் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இ-சிம் சேவையை, இ-சிம் வசதி கொண்ட புதிய மற்றும் எம்.என்.பி. வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் தேவைப்படும் பழைய வாடிக்கையாளர்கள் தங்களின் இணைப்பை இ-சிம் ஆக மாற்றிக் கொள்ளலாம்.

அதேபோல் தீபாவளி போனசாக புதிய எம்.என்.பி. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக தற்போது முதல் வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை ஒரு ரூபாய் மட்டுமே கொடுத்து சிம் பெற்றுக் கொள்ளலாம். இதில் 30 நாட்கள் வரை தினசரி 2 ஜி.பி. டேட்டா, காலவரையற்ற குரல் அழைப்புகள் பெற்று பயன்பெறலாம். மேலும் பி.எஸ்.என்.எல். 25-ம் ஆண்டு சில்வர் ஜூபிலி கொண்டாட்டத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய பைபர் இணைய திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!