சகோதரி சிவகாமசுந்தரி நாகமணி இறை வணக்கத்தை – இசை வணக்கப் பாடலாக்கி இழைந்து கொண்டிருந்தார்.
மடிப்பாக்கம் வெங்கட் அவர்கள் கம்பன் பாட்டை எடுத்து வரவேற்புரையில் அசத்தினார். எழுத்தாளர் தேவிபாலா நூலை வெளியிட, எழுத்தாளர்கள் சுபா – அவர்களும் – எழுத்தாளர் லாசரா அவர்களின் மகள் சகோதரி காயத்ரி திவாகரன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

சப்தரிஷி லாசரா அவர்கள் வீடியோ பதிவில் தன் வாழ்த்தை தெரிவித்தார்
“இது ஒரு பொன் மாலைப் பொழுது” என்று பாடி தலைமை உரை ஆற்றினார் சாய்சங்கரா மேட்ரிமோனியல் ஐயா பஞ்சாபகேசன்
எழுத்தாளர் தேவிபாலா – நூலின் ஹைலைட்டுகளைச் சுட்டிக் காட்டிப் பேசிவிட்டு – “இதையெல்லாம் சப்தரிஷி லாசரா நூலுக்கான தன் அணிந்துரையில் சொல்லி விட்டார்” என்று தன்னடக்கத்தோடு பேசினார்.
எழுத்து இரட்டையர் சுபா வில் – சுரேஷ் சுபா மட்டும் சுருக்கமாக – திருக்குறள் போல – அர்த்தத்தை அந்தச் சுருக்க உரையில் அடை காத்துத் தந்தார்.
பேனாக்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு.NC.மோகன்தாஸ் Ncm அவர்கள், எழுத்தாளர் கல்கி மேனாள் ஆசிரியர் ரமணன் Vsv அவர்கள் ,குமுதம் பக்தி ஸ்பெஷல் ஆசிரியர் ஜெயப்ரியன் நாகராஜன் வாழ்த்துரை தெரிவித்தார்கள்
நூலைத் திறனாய்வு செய்த டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன் நூலில் இடம் பெற்றுள்ள “காலம்” கதை குறித்துப் பேசிய போது – அதை அலசி அலசி – ஆய்வுரை நிகழ்த்தினார். “ராமன் இருக்குமிடம்” கதை அவர் சொல்லில் ரம்மியமாய் வெளிப்பட்டது.



ஆனந்த் ரவி நூலில் உள்ள “உற்சவன்” கதையின் உள்ளிருப்பை வெளிச்சமிட்டுக் காட்டி – திருப்தியான திறனாய்வுரை நிகழ்த்தினார். “காலடி ஓசை” விவரிப்பில் காவியம் படைத்தார்.
சகோதரி லதா சரவணன் எழுத்தாளர் குப்ஜா, சூர்ப்பனகை, சபரி ஆகிய பெண்கள் கதைகளை – நூல் நெய்கிற ஆர்வத்தோடு – அந்தக் கைவண்ணச் செய்நேர்த்தியோடு – பின்னிப் பின்னி வித்தகம் காட்டினார்.

பதிப்பாளர் உரையை மதிப்பாக ஆற்றி நம் நெஞ்சில் பதிக்க வைத்தார் ஜெயா பதிப்பகம் மகாதேவன் ஸ்ரீநிவாசன்
திருவண்ணாமலை ஜெயகாந்தனான A.கிருஷ்ணமூர்த்தி அருணாச்சலம் – முழங்கினார் – பேச்சிலேயே முப்பரிமாணம் காட்டினார் – “கதை சொல்லி” சகோதரி ரம்யா வாசுதேவன்
தன் கதை சொல்லும் சேவையில் பிடரி கதைகளையும் பேசப் போவதாகத் தெரிவித்தார்.




நன்றியுரையை எழுத்தாளர் ராஜ்குமார் P V அவர்கள்
இத்துணை நிகழ்வுகளையும் பூத்தொடுப்பது போலத் தொடுத்து – மணக்க மணக்க மாலையாக்கி வழங்கினார் சகோதரி கீத்மாலா ராகவன்
விழாவுக்கு வந்திருந்த அனைவருமே எழுத்தாளர்கள்
அருமையாக நடந்தது ‘பிடரி’ புத்தகவெளியீடு
