28ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா
இனிய நந்தவனம் 28ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா 28-9-2025 அன்று மாலை சென்னையில் அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தலைமையில் குமுதம் வார இதழ் பொறுப்பாசிரியர் மானா பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கல்வியாளரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான லாவண்யா நாராயணன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறப்பிக்க., முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், உளநல ஆலோசகர் கு. நித்யானந்தன், கல்வியாளர் பிரேமா கிறிஸ்டி ஆகியோ வாழ்த்துரை வழங்கினர்.

இனிய நந்தவனம் இனையாசிரியர் கவிஞர் பா. தென்றல் ஆண்டு மலர் குறித்து ஆய்வுரை நிகழ்தினார். முன்னதாக எழுத்தாளர் பெருமாள் நல்லமுத்து அனைவரையும் வரவேற்றார் இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்வை ஒருங்கிணைத்து ஏற்புரை வழங்கினார்.
மேலும் நிகழ்வில் எழுத்தாளர் நேசா,
கவிஞர் விஜி, ஆர். கிருஷ்ணன், வெற்றித் தமிழன் ராம்குமார், தொழில்முனைவர் சி.தாமோதரன், ரொட்டேரியன் சாய்குமார் தொழில்முனைவர் சம்சூல்ஹதா பானு, கல்வியாளர் பாரதி பத்மா, கவிஞர் வி.ஜி, ஜெயஸ்ரீ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர், இனிய நந்தவனம் சென்னை வாசகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.





