உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 33 ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம்
சென்னை -600006 ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்தில் இன்று காலை (செப்டம்பர் 28) சங்கத்தின் தலைவர் திருமதி பத்மினி பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை சண்முகம் , விஞ்ஞானி நெல்லை முத்து , வேங்கடாச்சாரி ஆகியோரின் மறைவிற்கும் , நம் சங்கத்தின் பணிகளை நேசித்த நாகலாந்து கவர்னர் பொற்றாமரை இல.கணேசன் , நேற்று கரூரில் நெரிசலில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கலைமாமணி திருமதி. பார்வதிபாலசுப்ரமணியன், திரு ஜெகதீசன் ஆகியோர் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினர்.
உரத்த சிந்தனை அமைப்பின் இணைச் செயலாளர் திரு. கணேஷ் கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார்.
விஷன் அன்லிமிடெட் நிறுவனர் முனைவர் திரு. பாலசாண்டில்யன் அவர்களும் உரத்த சிந்தனை அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.உதயம்ராம் அவர்களும் இணைந்து மேடையில் இருக்கும் மேதகைகளையும்
அரங்கத்திற்கு வந்தவர்களையும் அனைவரும் பாராட்டும் விதமாக மிகமிக அருமையாக அறிமுகம் செய்து வைத்தனர்.
ஏப்ரல் 2025 முதல் இன்று வரை 12 புதிய உறுப்பினர்கள் 4 வாழ்நாள் உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்துள்ளனர்.

இன்று வாழ்நாள் உறுப்பினர்களாக தேனி விஸ்வநாதனும் ,குணசுந்தரியும், ஆண்டு உறுப்பினராக திரு காசி .விஸ்வநாதனும் இணைந்தனர்
உரத்த சிந்தனை அமைப்பின் ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர் திரு. உதயம்ராம் சமர்ப்பிக்க பொதுக்குழு ஒருமனதாக ஆமோதித்து ஏற்றுக் கொண்டது..
31-03-2025 முடிய உள்ள வரவு செலவுக் கணக்கினை உரத்த சிந்தனை பொருளாளர் திரு.தொலைபேசி மீரான் சமர்ப்பிக்க பொதுக்குழு ஒரு மனதாக கைகளைத் தட்டி ஒப்புதலைத் தந்தது
2025-2026 ஆம் ஆண்டிற்கான எழுதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.(விவரம் அடுத்தப் பதிவில் )
அதேபோல் தஞ்சாவூர், திருச்சி, தேனி, ஹைதராபாத் கிளையின் நிர்வாகிகளும் , ஆலோசகர்களும் , தணிக்கையாளரும் பொதுக்குழுவின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டனர்.
உரத்த சிந்தனை துணைத்தலைவர் திரு.N.R.K அவர்கள் உரத்த சிந்தனை சார்பில் மாதாமாதம் சங்கரா தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றம் நடத்தவேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினார்
முனைவர் திரு.மேகநாதன் அவர்கள் உரத்த சிந்தனை சார்பில் 08-11-2025 அன்று ஆஸ்திரேலியாவில் பாரதி உலா முதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பதையும் , அக்டோபர் 14 மதுரையில் தன் தாயார் நினைவாகப் பேச்சுப் போட்டி நடக்க இருப்பதையும் தெரிவித்தார்.
சென்னை சாய்சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் முனைவர் பஞ்சாபகேசன் அவைக்கு வந்தவர்களை சிறப்பாக அறிமுகம் செய்த திரு.உதயம் ராம், திரு.பால சாண்டில்யன் ஆகியோரைப் பாராட்டினார். உரத்தசிந்தனைக்கு இரண்டு கண்கள் உண்டு. அவை இலக்கியக்கண், பாரதியார் உலா ஆகிய இரண்டும் ஆகும்
இளைஞர்கள் சம்பந்தமாக நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் .
பிரபல எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தனது வாழ்த்துரையில்
உரத்த சிந்தனை அமைப்பு சாதனையாளர்களின் சங்கமம் என்றார்.
பிரபல திரைப்பட இயக்குநர் திரு.S.P.முத்துராமன் உரத்த சிந்தனை அமைப்பு இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல் பற்பல சமூக நற்பணிகள் செய்து வருகிறது என்று மனதாரப் பாராட்டினார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
என்ற திருக்குறளின் படி உரத்த சிந்தனை அமைப்பின் எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்று வாழ்த்தினார்.
டெக்னோ திரு.முரளி ஸ்ரீ நிவாசன் எழுத்தாளர் திரு.N.C.மோகன்தாஸ் , வானொலி நிலைய மேனாள் இயக்குநர் டாக்டர் திரு.சேயோன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் வளர்ச்சிக்காக மருத்துவர் அலமேலு ரூ 20000 /- எழுத்தாளர் பாரதிப்ரியா ரூ 100000 /- (ஒரு லட்சம் ) நன்கொடை வழங்கியது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி,
இந்த செயற்குழுவிற்கான செலவுகளை செயற்குழு உறுப்பினர்களே ஏற்றுக் கொண்டது கூடுதல் சிறப்பு.( விவரம் அடுத்தப் பதிவில்)
நிறைவாக உரத்த சிந்தனை அமைப்பின் துணைப் பொருளாளர் திரு
மேலை.பழ. நாகப்பன் நன்றியுரை வழங்க .. அன்னதானச் செம்மல் முனைவர் நா.பஞ்சாபகேசன் ஏற்பாட்டில் நளபாக மாமணி அப்புவின் கைமணத்தில் மதிய உணவுடன் பொதுக்குழு மகிழ்வுடன் நிறைவு பெற்றது.
கூடுதல் நன்றி
வந்த அனைவருக்கும் ஆவி பறக்க கொரியன் டாட் பில்டர் காபி வழங்கிய நடன கலைஞர் கணேஷ் கிருஷ்ணன் , இடையில் சூடான தேநீர் வழங்கிய அப்பு வெங்சுட்ராமன் ஆகியோருக்கு நன்றி
செய்தித் தொகுப்பு ஜி.சுப்பிரமணியன்









