வேர்ல்ட் கிஸ்ஸிங் டே டுடே! காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினத்திற்கு இணையாக மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது இந்த சர்வதேச முத்த தினம். உண்மையில் அன்பின் வெளிப்பாடுதான் முத்தம். கொடுப்பவரையும், பெறுபவரையும் பொறுத்து இதற்கு அர்த்தம் மாறும். அன்பையும், பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகரிக்க உதவுவது இந்த முத்தம். இதை வலியுறுத்தியே இந்த முத்த தினம் கொண்டாடுகிறார்களாம். ஆனா முன்னொரு காலத்தில் இந்த முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இப்போதோ நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை வாய் விட்டு கேட்டு சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே…
- ஆண்கள் பெண்களுக்கு தரும் முத்தங்களை பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
- தங்களது அன்பையும், மகிழ்ச்சியை வெளிபடுத்தும் போதும் முத்தத்தின் மூலமே அவற்றை பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்
- பெண்கள் முத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம். நீங்கள் இந்த விஷயத்தில் எப்படி?
- செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர்களிடையே சுமூக உறவு இருக்க வேண்டுமானால் அவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தம்பதிகளிடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
- ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின் போது ஒரு சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.
- மேலும் ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுதால், செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு முத்தமிடுகிறார்களாம். மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.
- முத்தம் விஷயத்தில் ஆண்களைவிட இன்பத்தை அணு அணுவாய் ரசித்து டாப் கியர் வரை போவது பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனராம்.
- ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பழமொழியின்படி, முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அவர்கள் சிப்படையாமல் இருக்க காரணம்.
- மிக முக்கிய விஷயம் தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், தனது துணையை முத்தமிடாமலேயே ‘கிளைமாக்ஸை’ வெற்றிகரமாக முடித்துவிட முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். முத்தம் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் அவர்கள் களமிறங்கினால் கூட தங்களை மறந்து ஆணுக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.
- பெண் தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெற்று கொள்ள முடியும்.
-இன்னும் பல முத்த ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. எவ்வளவு ஆராய்ச்சிகள் நடத்தி முடிவுகளை அறிவித்தாலும் முத்தம் பற்றிய பல உண்மைகள் புதையலை போல் வந்து கொண்டே தான் இருக்கும் இல்லையா?
உலக ஜூனோசிஸ் தினம் (World Zoonoses Day) ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. காட்டு விலங்குகள் மூலம் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி, பறவைகள்மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள்மூலம் பரவுகின்றன. விலங்குகள்மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
சிறுகதை இலக்கியத்துடன் அதிகமாக சம்பந்தப்பட்ட பெயர் – மாப்பசான்! பிரெஞ்சு எழுத்தாளர். ஆரம்ப காலத்தில் கவிதைகள் தான் எழுதினார்; அதில், சிருங்கார ரசத்தை ஏராளமாகக் கலந்தார். இளைய சமுதாயம், அவர் பின்னே நின்றது. பின் அவர் சிறுகதை, நாவல், நாடகம் என, இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் முனைப்புடன் ஈடுபட்டார். நவீன சிறுகதையின் தந்தைகளில் ஒருவர் என்று அவரை உறுதியாக குறிக்கலாம். அப்பாவை இளம் வயதிலேயே இழந்து அம்மாவின் அன்பில் மட்டுமே வளர்ந்தவர் அவர். பள்ளியில் ஆசிரியர் மீது ஸ்கேட்டிங் போர்டோடு ஏறி விளையாடினான் என்று பள்ளியை விட்டு நீக்கினார்கள். அப்படி இருந்தாலும் அவரின் அம்மா அவருக்கு ஊக்கம் தந்து பக்கபலமாக இருந்தார். பிரான்ஸ் நாட்டை சின்னபின்னம் ஆக்கிய 1870 ஆம் ஆண்டின் போரை தன் கண்களால் கண்டது அவரின் எழுத்தில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. அதே போல சிபிலிஸ் என்கிற கொடிய நோயின் தாக்கமும் அவருக்கு இருந்த படியால் அதுவும் அவரின் எழுத்தில் வெளிப்பட்டது. அவரின் முன்னூறு சிறுகதைகளையும் வெவ்வேறு பாணியில் உலகம் முழுக்க பலபேர் பிரதியெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர் எழுத்துகள் ஆண் – பெண் பாலுறவு சம்பந்தப்பட்டதாகவே இருந்ததால், அவரது, ‘லா மெய்சன் டெல்டர்’ என்ற சிறுகதைத் தொகுப்பை, பிரான்ஸ் நாட்டு ரயில்வே புத்தகக் கடையில் விற்க தடை விதித்தனர். ஆனால், வாழ்க்கை நெறிமுறைகளை வலியுறுத்தி எழுதும் டால்ஸ்டாய், மாப்பசானை போற்றி எழுதியுள்ளார்.’ அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஆபாசக் கதைகளை எழுதி, விற்பனைக்காக மாப்பசான் பெயரை போட்டு விட்டனர். அதனால், பல மோசமான கதைகளில் மாப்பசான் பெயர் தங்கி விட்டது; அதை, பின்னால் அழிக்கவே முடியவில்லை’ என்றும் சொல்கின்றனர். தமிழிலும், மாப்பசான் கதைகள் மொழிப் பெயர்ப்பாகி, வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவரின் குண்டுப்பெண் என்கிற ஸ்டோரி: பிரான்ஸ் நாட்டின் குண்டான விலை மாது ஒருவள் தொடர்வண்டியில் போகிற பொழுது ப்ருஷ்ய தளபதி அவளை தன்னுடைய ஆசைக்கு இணங்க சொல்வான். அதற்கு அவள் தன் தேசபக்தியோடு மறுப்பாள். ட்ரெய்ன் நகர வேண்டும் என்று சக பிரயாணிகள் அவளை ஒப்ப வைப்பார்கள். அவனின் ஆசை தீர்ந்து அவள் வெளியே வந்ததும் எல்லாரும் அவளை கேவலமாக பார்ப்பதும்,அன்னியம் போல விலகிப்போவதையும் மாப்பசான் எழுத்தில் படிக்கும் பொழுதே கண்ணீர் சுரக்கும். போலியான ஆடம்பரம் எத்தகைய ஆபத்துகளை உண்டு செய்கிறது என்பதை ஒரு போலி வைர நெக்லசை கடன் வாங்கி தொலைத்து இருபது ஆண்டுகளுக்கு மேலே உழைத்து தங்களின் மகிழ்ச்சியான இளமைக்காலத்தை இழந்த இணையின் கதையான நெக்லஸ் கதையும் மறக்கவே முடியாத ஒரு கதை. மாப்பசான் நாற்பத்தி மூன்று வயதில் உடல் மற்றும் மனநலம் கெட்டு இறந்து போனார். அவர் ஈஃபில் கோபுரம் எழுந்த பொழுது அதை விரும்பாத எத்தனையோ பேரில் ஒருவராக இருந்தார். அப்படி அதை வெறுத்தாலும் அந்த கோபுரத்தில் இருந்த உணவகத்தில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். “ஏன் இந்த இரட்டை வேடம் ?” என்று கேட்டார்கள் ! அதற்கு அவர் இப்படி பதில் சொன்னார், “இந்த பாரீஸ் நகரத்தில் இங்கே உட்கார்ந்தால் மட்டும் தான் இந்த வெறுப்பைத்தரும் கோபுரம் கண்ணில் படாமல் இருக்கிறது !” அப்பேர்பட்ட மாப்பசான் ,மறைந்த தினம் இன்று
கலைமாமணி,தமிழ் மாமணி மன்னர் மன்னன் நினைவுதினம்* கோபதி என்ற இயற்பெயரைக் கொண்ட மன்னர் மன்னன் தந்தை வழியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்.தந்தையின் முகச்சாயலை அச்சு அசலாகப் பெற்றிருந்தவர் மன்னர் மன்னன். பாரதிதாசன் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் இவரை நேரில் சந்திக்கும்போது சிலிர்ப்புக்குள்ளாவார்கள். பாரதிதாசன் மறைந்து 56 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், அவரை தனது தோற்றத்தின் மூலம் புதுச்சேரியின் வீதிகளில் நடமாடச் செய்தவர் மன்னர் மன்னன்.பாரதிதாசனின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் விழாக்களில் அவரது திருவுருவப் படத்துக்கு பதில் தனது புகைப்படத்தை வைத்தச் சம்பவங்களை சிலேடையாகக் கூறுவார். கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் தன் தந்தையின் வரலாற்றை `கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட மரபுக் கவிதை மற்றும் தொகுப்பு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். புதுச்சேரி வானொலியின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், புதுச்சேரியில் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்து தொடர்ந்து இரண்டு முறை அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதிருக்கும் தமிழ்ச் சங்கக் கட்டடம் இவரது பதவிக்காலத்தில் கட்டப்பட்டதுதான். விடுதலைப் போராட்டத் தியாகியான இவர், மொழிப்போர் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத் தண்டனையைப் பெற்றவர்.தந்தையைப் போல திராவிட இயக்கச் சிந்தனையாளரான இவர், தந்தைப் பெரியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். தமிழக அரசின் கலைமாமணி, திரு.வி.க விருதுகள், புதுச்சேரி அரசின் கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகளையும் பெற்ற இவர் மிகச்சிறந்த பேச்சாளர். இவருக்கு செல்வம், தென்னவன், பாரதி என மூன்று மகன்களும், அமுதவள்ளி என்ற மகளும் இருக்கிறார். மன்னர் மன்னன் – சாவித்திரி இணையர்களின் திருமணத்தில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முன்னின்று நடத்தி சிறப்புரையாற்றினார். 30 ஆண்டுகளுக்கு முன்பே இவரின் மனைவி சாவித்திரி காலமாகிவிட்டார். மன்னர் மன்னன் பெயர் உருவான பின்னணி தமிழ் மீது கொண்ட பற்றினால் தனது 14-வது வயதில் நண்பரும் கவிஞருமான தமிழ் ஒளியை உடன் இணைத்துக்கொண்டு `முரசு’ என்னும் கையெழுத்து இதழை வெளியிட்டார்.அந்த இதழ் அரசுக்கு எதிராக இருப்பதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தியது பிரெஞ்சு அரசு. அப்போது 14 வயது என்பதால் தண்டனையில் இருந்து இவர் தப்பித்துவிட, கவிஞர் தமிழ் ஒளி தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் கோபதி என்ற இயற்பெரில்தான் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அன்றிலிருந்துதான் `மன்னர் மன்னன்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். அறிஞர் அண்ணா தோற்றுவித்த தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலக் கிளையை 1949-ல் தொடங்கிய 5 பேரில் மன்னர் மன்னனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசனைப் பற்றி இவர் எழுதிய இலக்கியப் பாங்கு, பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம் உள்ளிட்ட நூல்கள் முக்கியமானவை. அதேபோல இவரது ’பாட்டுப் பறவைகள்’ என்ற நூல் பாரதியின் பத்தாண்டுகால புதுச்சேரி வாழ்வையும், அப்போது பாரதிதாசனுடன் அமைந்த தொடர்பையும் விரிவாகப் பேசக்கூடியது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’ என்ற எழுச்சிமிகு வரிகள் மூலம் தமிழ் தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன். 92 வயதில் அவருக்கு முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகக் ஜூலை 6 2020ல் காலமானார்
சர்.தாமஸ் மன்றோ நினைவு நாள் சென்னை அண்ணா சாலையில் தீவுத்திடல் அருகே 40 அடி உயரத்தில் குதிரையின் மீது கம்பீரமாக இருப்பவர் சர் தாமஸ் மன்றோ அவர்கள் இவர் 27 05 1761 இல் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் 1780 அன்றைய மதராஸ் மாகாணத்தில் காலாட் படைப்பிரிவின் அலுவலராக பணியாற்ற வந்து தன் திறமையின் காரணமாக பல்வேறு நிலைகளில் 40 ஆண்டுகள் கலெக்டராக பின் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக பணியாற்றினார் அவருக்கு கவர்னர் ஜெனரல் பதவி உயர்வு வழங்க பிரித்தானிய அரசு விரும்பி இங்கிலாந்துக்கு அழைத்தபோது மதராஸ் மாகாணத்தில் கடப்பா ரயலாசிம்மா பகுதியில் கொள்ளை நோய் காலரா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மக்கள் செத்து கொண்டு இருந்தனர் . அரசு பணியாளர்கள் உயிருக்கு பயந்து வெளியேறிய போது கவர்னர் சர் தாமஸ் மன்றோ அவர்கள் ஆட்சியாளர்கள் மக்கள் பாதிக்கப் படும் போது அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அவர் நேரிடையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேயத்துடன் ஊழியர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய தடையை மீறி சென்று அங்கேயே தங்கி உதவி செய்து வந்தார், அப்போது அவருக்கும் காலரா ஏற்பட்டு 06 07 1827 காலமானார் அவரின் மனிதாபிமான பணியை பாராட்டி பொதுமக்கள் நிதி வழங்கி தங்களின் நன்றி கடனாக இந்த சிலையை இங்கிலாந்தில் உருவாக்கி கப்பலில் கொண்டு வந்து இங்கே நிறுவினார்கள் அடிசினல் ரிப்போர்ட் சர், தாமஸ் மதராஸில் பொறுப்பேற்கும் முன்பு, மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள விரும்பிய, கிராமம் கிராமமாக தன் குதிரையில் பயணித்தார். அக்காலத்தில் பிரிட்டிஷ் அரசு, மக்களிடம் நிலத்தீர்வை வரியை வசூலிக்கும் உரிமையை ஜமீன்தார்களிடமும் நிலச்சுவான்தாரர்களிடமும் வழங்கியிருந்தது. பிரிட்டிஷ் நிர்வாகம் நிர்ணயித்ததை விட அதிகமாக மக்களிடம் வரியை உறிஞ்சிய இந்த இடைத்தரகர்கள், வசூலான வரியில் பெரும்பகுதியை தாங்கள் சுருட்டிக்கொண்டு ஒரு பகுதியை மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகத்துக்குத் தந்தார்கள். வரி கட்டமுடியாத மக்களின் நிலங்களைப் பறித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்த ஜமீன்தாரி அவலத்திலிருந்து மக்களை விடுவிக்க நினைத்த மன்றோ, “இனி அதிகாரிகளே மக்களிடம் நேரடியாக வரி வசூலிப்பார்கள்… ஜமீன்தார்களுக்கு இடமில்லை” என்று அறிவித்தார். இந்த வரியை வசூலிக்க கலெக்டர் என்ற நிர்வாகப் பதவியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கலெக்டர் பதவியே சிறிதும் பெரிதுமாக மாற்றத்துக்குள்ளாகி இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. ரயத்துவாரி முறை என்றழைக்கப்படும் இந்த வரிவசூல் முறையால் மக்கள் நிம்மதியடைந்தார்கள். & மன்றோவின் நிர்வாகப் பகுதியிலிருந்த மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்துக்கு 17ம் நூற்றாண்டில் அரசு கொஞ்சம் நிலங்களை வழங்கியிருந்தது. அந்த நிலங்களை மீட்கும் பொறுப்பை மன்றோவுக்கு வழங்கியது பிரிட்டிஷ் நிர்வாகம். மந்திராலயம் சென்ற மன்றோ, அங்கிருந்த சூழலையும் மக்களின் நம்பிக்கையையும் உணர்ந்து, ‘நிலம் மந்திராலய நிர்வாகத்திடம் இருப்பதே சரியானது’ என்று பிரிட்டிஷ் அரசுக்கு அறிக்கையளித்தார். அந்த நிலத்துக்கு வரி வசூலிக்கவும் தேவையில்லை என்று அவர் பிறப்பித்த உத்தரவு மெட்ராஸ் அரசு கெஜெட்டில் பதிவாகியிருக்கிறது. பிறரின் மத உணர்வை மதிக்கும் மகத்தான குணம் கொண்டிருந்த மன்றோ திருப்பதி கோயில் மதிய நிவேதனத்திற்கு என சித்தூர் பகுதியின் சில கிராமங்களின் வருவாயை ஒதுக்கித் தந்தார். அவர் காணிக்கையாக வழங்கிய பெரிய கொப்பரையில்தான் திருமலையில் இப்போதும் பொங்கல் வைக்கப்படுகிறது. ‘மன்றோ கங்கலம்’ என்று அந்தக் கொப்பரையை அழைக்கிறார்கள் பக்தர்கள். மன்றோ பணியாற்றிய ஆந்திர மாநில பகுதிகளில் அவரை நினைவுகூறும் வகையில் இன்றும் குழந்தைகளுக்கு `மன்றோலய்யா’, ‘மன்றோலம்மா’ என்று பெயரிடும் வழக்கம் இருக்கிறது.
