கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை:
எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்கு பிறந்து
எட்டாது உயரம் சென்றார் கவியில் மலர்ந்து
அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையை தந்து
அழகுடனே சொன்னார் வைர வார்த்தைகளில் ஆராய்ந்து
இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெரிந்து
எதுகை மோனையுடன் பாடல்களைத் தெரிந்து
இதயத்தை வருடினார் நல்ல வரிகளுடன் கலந்து
இவ்வுலகம் போற்றும் என்றென்றும் வியந்து
ஞானத்தால் அமைந்த சிந்தனை வெகு சிறப்பு
ஞாலத்தில் நிலைத்து நிற்கும் படைப்பு
பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வியப்பு
பாடல்களில் தெரியும் தத்துவ அமைப்பு
வண்ண மலர்களை ரசிக்க எவருக்கும் ஓசை
கண்ணதாசன் பாடல்களில் வருமே அந்த ஆசை
என்ன அழகாய் வார்த்தைகளை கோர்த்து
உன்னதமாய் அமைப்பார் உள்ளம் சிலிர்த்து
கவியரசரிடம் போற்றப்பட வேண்டிய கற்பனை வளம்
கடவுளுக்கு கேட்கும் கிருஷ்ண கானம் தனியிடம்
உயிரும் மெய்யுடன் உயிர்மெய் எழுத்து
உயிரோடு என்றும் இருக்கும் இவர் உயர் கருத்து
முருக. சண்முகம்

