அக்னி சிறகுகள்!!

அக்னி சிறகுகள்!!/ மாணவர்கள் பகுதி
சிறு கதை

” செல்வி எழுந்திருமா ஸ்கூலுக்கு நேரம் ஆகுது”
” சரிமா அஞ்சு நிமிஷத்துல எழுந்திடுறேன்”
எழுந்திடுறேன்னு சொல்லிட்டு திரும்பவும் போர்வைக்குள் ஆமை அதன் தலையை அதனுடைய ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல செல்வியும் அவளுடைய தலையை போர்வைக்குள் இழுத்துக் கொண்டாள்.

திரும்பவும் அவளுடைய அம்மா குரல் கொடுக்க செல்வி சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்திருந் தாள். பிறகு அவள் செய்ய வேண்டிய அனைத்து காலைக்கடன்களையும் முடித்துக்கொண்டு குளித்து முடித்துவிட்டு பள்ளி சீருடை அணிந்து கொண்டு அம்மா கொடுத்த சிற்றுண்டி விட்டு அவள் தோழி ரேவதி வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
ஒன்று இரண்டு நிமிடங்களில் அவள் தோழி ரேவதியும் வந்து வாசலில் ‘செல்வி ‘என்று குரல் கொடுத்தால் செல்வி உடனே ‘வந்துட்டேன் டி ‘என்று கூறி அம்மாவிடம் விடை பெற்று ஸ்கூலுக்கு கிளம்பினாள் செல்வி. ந
” எப்படி நீ மட்டும் சுறுசுறுப்பா இருக்க என்னால காலையில எழுந்தவே முடியலடி ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள். செல்வி. உடனே ரேவதி” அய்யய்யோ இன்னைக்கு நமக்கு நிறைய வேலை இருக்குடி. .அறிவியல் கிளாஸ் டெஸ்ட் இருக்கு அதுவும் இல்லாம ப்பி. ட் டி கிளாஸ் இருக்கு. நீ என்னடா இப்பவே மந்தமா டயர்டா இருக்க. “
” டெஸ்ட்க் கு ரெடியா ஆயிட்டியா இல்லையா சரி சரி சீக்கிரம் நட டைம் ஆயிடுச்சு.பெல் அடிச்சிட்டாங்கன்னா நம்ம வெளியில நிக்க வச்சுடுவாங்க. அந்த பி.டி சார் வேற ரீமார்க் எழுதுவாரு. அசிங்கமா போயிடும்”, என்றாள் ரேவதி.
செல்வியும் ரேவதியும் சரியான நேரத்திற்குள் பள்ளிக்கூடம் வந்து அவர்களுடைய வகுப்புக்கு சென்று அமர்ந்தார்கள். ஆசிரியை சுசி வகுப்பறைக்குள் நுழைந்ததும் அனைத்து மாணவ மாணவர் களின் அட்டெண்டென்ஸ் எடுத்தார் “குட்மார்னிங் “என்று சொல்லிவிட்டு “ஸ்டுடென்ட்ஸ் நான் இப்பதான் நம்ம ஹெட் மாஸ்டர் பாத்துட்டு வரேன். அவர் என்ன சொன்னார் என்றால் இந்த வருஷம் ஸ்போர்ட்ஸ் டே ஆகஸ்ட் 10ஆம் தேதி வைக்க போவதாக சொன்னார்.
அதுவும் இல்லாம ஆகஸ்ட் 15ல் நமது விளையாட்டு துறை மாதிரி பரிசு விழாவில் கலந்துகொள்கிறார் என்றும் சொன்னார்.அதனால ஸ்டுடென்ட் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த போட்டியில் கலந்து கொள்ளனுமோ அவங்கெல்லாம் வந்து நம்ம லஞ்ச் டைம்ல நேம் ரெஜிஸ்டர் பண்ணுங்க.இதை கேட்ட
ரேவதி “செல்வி இந்த வருடம் நீயும் போட்டிக்கு கலந்துகொள்’ அதற்கு செல்வி “நான் எந்த போட்டியில் கலந்து கொள்வது எனக்கு எதுவும் தெரியாது.என்னால முடியுமா” என்றாள். அதற்கு ரேவதி” உன்னால் நிச்சயம் முடியும் செல்வி. ஸ்போர்ட்ஸ் டே காம்பெடிஷன் நடக்க நீண்ட நாட்கள் இருக்கு.அதனால தினமும் காலையில 5 மணிக்கு எல்லாம் எழுந்திருச்சு. எந்திரிச்சி கிரவுண்டுக்கு வந்துரு.நான் எனது அப்பாவும் அங்கே இருப்போம். வரும் நாட்களில் நீ பயிற்சி செய்தால் உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும்.நீ படிப்புல மிகவும் கெட்டிக்காரி.படிப்பு எவ்வளவு முக்கியமோ அது போல விளையாட்டு ரொம்ப முக்கியம். விளையாட்டு நம்ம தேகத்தை வலிமையாக வைத்திருக்கும்.
செல்வி மேலும் ஒரு விஷயம் என் அப்பா என்னிடம் எப்பவும் ஒரு விஷயம் சொல்லுவார் ம்.அது என்னன்னா நீ ஓட்டப்பந்தய த்தில் சாதிக்கணும்னு சொல்லுவாங்க.
ஓட்டப்பந்தயத்தில் பிடி உஷா, அஞ்சு ஜார்ஜ் மாதிரி உலக அளவில் நடக்கும் ஏசியன் கேம்ஸ் காமன் வெல்த் கேம்ஸ் ஒலிம்பிக் கேம்ஸ் போன்ற போட்டிகளில் கலந்து தங்க மெடல் வாங்கணும்னு சொல்லுவாரு.நீ என் கூட சேர்ந்து பயிற்சி செய்தால் எனக்கு ஒரு நல்ல உறுதுணையாக இருக்கும்.நம்ம இருவரும் இணைந்து இந்த தரணியில் சாதிக்கலாம்.
செல்வியும் ரேவதி சொல்வதைக் கேட்டு
“சரிடி இப்போ போய் நாம இருவரும் போட்டில் கலந்து பெயர் கொடுப்போம். நாளை காலைல இருந்து நான் பயிற்சிக் கு வரேன்.
மறுநாள் செல்வி அதிகாலை 5 மணிக்கு எல்லாம் எழுந்து தயாராகி கிரவுண்டுக்கு சென்றாள். அங்கே ரேவதியும் அவருடைய தந்தை இருந்தனர். பிறகு அவர் தந்தை செல்வி ரேவதி இருவருக்கும் ஓடுவதற்கு முன் செய்ய வேண்டிய சில பயிற்சிகளை கற்றுவித்தார். பிறகு விசில் ஊதி இருவரையும் ஓடச் சொன்னார்.ரேவதி,செல்வி இருவரும் ஓடத் தொடங்கினர்.அந்த கிரவுண்ட் சுற்றளவு 500 மீட்டர் இருந்தது செல்வி இரண்டு முறை சுற்றி ஓடி வந்ததும் அவளுக்கு மூச்சிரைத் து நின்றுவிட்டாள். ரேவதி மட்டும் மேலும் இரண்டு சுற்று ஓடி முடித்து செல்வியிடம் வந்து சேர்ந்தாள். பிறகு ரேவதி செல்வியிடம் “நீ சிறப்பாக ஓடுகிற முதல் நாளே இரண்டு முறை சுற்றி வந்துட்ட. தொடர்ந்து பயிற்சி செய்தால் எனக்கு இணையாக ஓடுவ. ரேவதி சொன்னது போலவே அடுத்த ஒரு வாரத்தில் செல்வியும் ரேவதிக்க இணையாக அந்த கிரவுண்டை நாலைந்து முறை சுற்றி ஓடி வந்தாள்.
பயிற்சி முடிந்ததும் ரேவதி எப்போதும் ஐந்து நிமிடம் அமைதியாக தியானம் செய்வாள். செல்வியையும் அதுபோல செய்யச் சொன்னாள். செல்வி அதற்கு “ஏன் நான் தியானம் செய்யணும்” ரேவதி” உடல் பலம் இருந்தால் மட்டும் போதாது. மனமும் பலத்துடன் ஒரு நிலைப்படுத்தவும் செய்யணும். அது நமக்கு போட்டியில் வெற்றி பெற பெரிய உதவியாக இருக்கும்.” என்றாள்.

எதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 10ஆம் தேதி ஸ்போர்ட்ஸ் டே போட்டிகள் ஆரம்பித்தன.100 மீட்டர் போட்டியில் செல்வியும் ரேவதியும் பங்கு பெற்றனர். அதில் ரேவதியும் முதலாவது செல்வி இரண்டாவதுமாக பரிசுகளை வென்றனர். 400 மீட்டர் ரிலே போட்டியில் செல்வியும் ரேவதியும் குழுவாக செயல்பட்டு முதல் பரிசை பெற்றனர். செல்வி மிக மகிழ்ச்சி அடைந்தாள். செல்வியி ன் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ந்து செல்வியையும் ரேவதியும் பாராட்டினார்கள்.
பரிசு கொடுக்கும் விழா ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்றது. விளையாட்டுத்துறை மந்திரி விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற எல்லா மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
15 வயதிற்குள் உட்பட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ரேவதி மற்றும் செல்வி இருவருக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு விளையாட்டுத்துறை மந்திரி பேசிய போது” போட்டியில் பங்குபெற்று அனைத்து வீரர்களும் தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் செய்தால் நீங்கள் வருங்காலங்களில் இந்திய தேசிய அளவில் பெரிய வெற்றி வீரர்களாக சாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய தேசிய போட்டிகள் மட்டும் இல்லாமல் ஏசியன் கேம்ஸ் காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் ஒலிம்பிக் கேம்ஸ் எல்லாம் இருக்கு. நீங்க விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தால் நீங்கள் சாதிக்க பல வாய்ப்புகள் இருக்கு” என்றார்.
விழா முடிந்தவுடன் செல்வி ரேவதிக் கு நன்றி கூறி” நீ இல்லனா நான் இந்த போட்டியில் பங்கு பெற்று இருக்க மாட்டேன். வெற்றியும் பெற்றிருக்க மாட்டேன். நான் சும்மா இருந்திருப்பேன். உன்னால தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது இனி நான் இன்னும் தொடர்ந்து பயிற்சி செய்து இது மாதிரி பல போட்டிகளை வெற்றி பெற வேண்டும் என ரொம்ப ஆர்வமா இருக்கேன். ரேவதியும் அதை ஏற்றுக்கொண்டு “நீ என் நல்ல பிரண்ட் டி என்று சொல்லி இருவரும் ஒருவர் தோலின் மேல் ஒருவர் கை போட்டு அவர்கள் கழுத்தில் மாட்டிய மெடலுடன் தெருவில் நடந்து சென்றனர் .தெருவில் இருந்த அனைவரும் செல்வியையும் ரேவதியும் கண்ணிமைக்காமல் உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நாம் நினைத்தால் எதுவும் சாதிக்கலாம். அதுக்கு உழைப்பு. முயற்சி தேவை. அல்லவா.
நம்முடைய சக்தியை வெளிப்படுத்த நமக்கு தெரியவில்லை. ஆனா யாரவது நம்மை ஊ க் குவிக்கும் போது அது வெளிப்படுகிறது. இங்கே செல்வியின் ஆற்றலை உணர்ந்து ரேவதி அவளை புதுப்பித்தாள். இருவரும் பரிசு வாங்கி நமது பள்ளிக்கும் நல்ல பெயர் கிடைத்தது. நீங்களும் இவர்களைப் போல் முயற்சி எடுத்து போட்டிகளில் கலந்து கொண்டு நமது பள்ளிக்கு பேர் வாங்கி கொடுங்க. நீங்களும் அகில இந்திய அளவில் பரிசுகள் வென்று தமிழ் நாட்டுக்கு பேர் வாங்கி கொடுங்க என்று மறு நாள் பி டி. சார் P. T. வகுப்பில் சொல்ல அனைத்து மாணவர்களும் நாம் வெல்லுவோம் சார் என ஒரு முழக்கம் இட்டனர்.

- Divanya Prabhakaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!