வேர்ல்ட் டீ டே! டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா, காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, லெமன் டீயா வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம். இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் எனப்படும் டீ உள்ளது. தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயி-லையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேயிலை தினம் டிசம்பர் 15 என்று சொல்வோருமுண்டு எக்ஸ்ட்ரா ரிப்போர்ட் : •உலகம் முழுவதும் 1500 தேநீர் வகைகள் உள்ளன. •சீனாவில் உள்ள ஹூனான் பிரதேசம்தான் தேயிலையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அங்கு கிடைத்த 800 ஆண்டுகள் பழமையான தேயிலைச் செடிகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். *சீனாவில் கிரீன் டீ தேசிய பானமாகும். •உலகிலேயே அதிகமாகத் தேநீர் பருகுபவர்கள் உள்ள நாடு இந்தியாதான். நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் ருசிப்பவர்கள் இந்தியர்கள்தாம். •இந்தியாவில் அசாம், டார்ஜிலிங், வட வங்காளம் மற்றும் நீலகிரி டீ வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. •சாதாரண டீயுடன் சேர்ந்து இப்போது ஆர்கானிக் டீ, கிரீன் டீ, ஒயிட் டீ, ஹுலாங் டீ, ஃபிளேவர்டு டீ, டீ காஃப் டீ, ஹெர்பல் டீ போன்ற மருத்துவப் பயன்பாடுள்ள தேநீர் வகைகளும் இப்போது கிடைக்கின்றன. •ஷன்ஷா, கியமாகரோ, ஜென்மாய்ஷா, மேட்ஷா, பன்ஷா, குகிஷா, ஹங்ஜிஷா இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஜப்பானில் கிடைக்கும் புகழ் பெற்ற டீயின் பெயர்கள். •உலகத்தில் ஜப்பானியர் மட்டுமே சா நோ ஹூ என்ற டீ விழா எடுக்கிறார்கள். தேநீர் உடல் நலத்துக்கு மட்டுமல்ல, ஆன்மீக நலனுக்கும் உகந்தது என்பது அவர்களுடைய நம்பிக்கை. •தேநீரைப் பற்றியும், தேயிலைத் தொழிலைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கென்றே ஓர் இதழ் வெளிவருகிறது. பெயர்: டீ தி மகஸின். இந்த ஆங்கில இதழின் நிறுவனரான பேர்ஸ் டெக்ஸ்டர் என்ற பெண்மணி ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். அதற்குப் பெயர்: தி டீ ஸ்கூல்.
உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக தினமின்று(World Day for Cultural Diversity for Dialogue and Development) இது 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நாள், கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவிப்பதற்கும், அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தினத்தின் முக்கிய நோக்கங்கள்: கலாச்சார பன்முகத்தன்மையை கொண்டாடுதல்: உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களின் செழுமையை அங்கீகரித்து மதிப்பளித்தல். உரையாடலை மேம்படுத்துதல்: கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதலை வளர்க்க, பயனுள்ள உரையாடல்களை ஊக்குவித்தல். நிலையான வளர்ச்சி: கலாச்சார பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி, உள்ளடக்கிய மற்றும் நீதியான சமூகங்களை உருவாக்குதல். யுனெஸ்கோவின் கூற்றுப்படி, கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தின் ஆன்மீக, பொருளாதார, அறிவுசார் மற்றும் உணர்வு ரீதியான அம்சங்களின் தொகுப்பாகும், இதில் கலை, இலக்கியம், வாழ்க்கை முறை, பாரம்பரியங்கள் மற்றும் நம்பிக்கைகள் அடங்கும். இன்றைய நாளில், பல்வேறு நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடைபெறுகின்றன, இவை கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, X இல் உள்ள பதிவுகள் இந்த நாளை உலகளாவிய கலாச்சாரங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாகக் குறிப்பிடுகின்றன, மேலும் இந்தியாவில் “வசுதைவ குடும்பகம்” (உலகம் ஒரு குடும்பம்) என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. இந்த நாள், உலகமயமாக்கலால் ஏற்படும் கலாச்சார ஒருமைப்படுத்தலுக்கு எதிராக, உள்ளூர் மரபுகள் மற்றும் தனித்துவமான கலாச்சாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.
லண்டன் நகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பிக் பென் கடிகாரம் இயங்கத்துவங்கிய நாள் இன்று (1859 மே மாதம் 21ம் நாள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்துள்ள இந்த மணிக்கூண்டு, அதன் துல்லியமான நேரக் கணக்கீடு மற்றும் கம்பீரமான மணிக்கோபுரம் ஆகியவற்றால் உலகப் புகழ்பெற்றது. உண்மையில், “பிக் பென்” என்பது பெரிய மணி ஓசையை எழுப்பும் மணியின் பெயர்தான். ஆனால் காலப்போக்கில், முழு மணிக்கோபுரத்தையும் குறிக்க இந்த பெயர் பயன்படுத்தப்பட தொடங்கியது. 2012 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் வைர விழாவைக் குறிக்கும் வகையில், இந்த கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது. இது உலகின் மிகப் பெரிய நான்கு-பக்க மணிக்கூண்டுக் கடிகாரங்களில் ஒன்றாகும், மேலும் இதன் மணி ஓசை லண்டன் நகரத்தின் பல மைல்களுக்கு அப்பால் கேட்கக்கூடியது. இரண்டாம் உலகப் போரின் போதும், ஜெர்மனியின் குண்டு வீச்சு முயற்சிகளுக்கு மத்தியிலும், பிக் பென் அதன் கடிகாரத்தை தொடர்ந்து இயக்கி, லண்டன் மக்களின் மன உறுதியை நிலைநிறுத்தியது ஒரு குறிப்பிடத்தக்க வரலாறாகும். இன்று, பிக் பென் லண்டனின் மட்டுமல்ல, ஐக்கிய ராஜ்ஜியத்தின் அடையாளமாகவும், உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியச் சின்னமாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்: இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று 165 ஆண்டுகளாக (2024 நிலவரப்படி) இயங்கிவரும் இக்கடிகாரம், நேரத்தின் நம்பகமான அடையாளமாகவும், லண்டனின் பெருமையாகவும் திகழ்கிறது!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பேரன், இந்தியாவின் இரும்புப் பெண்மணி மற்றும் மறக்க முடியாத பிரதமரான இந்திரா காந்தியின் மகன் என்ற பெருமையை பிறக்கும் போதே கொண்டவர் ராஜீவ் காந்தி. இவரது சகோதரர் சஞ்சய் காந்தி. அரசியலில் இருந்து தூரமாக இருந்த ராஜீவ், இத்தாலியில் தன்னுடன் படித்த சோனியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 1980ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் சஞ்சய் காந்தி மரணமடைந்தார். இதையடுத்து தாய்க்கு உதவியாக அரசியலில் காலெடுத்து வைத்தார் ராஜீவ். 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற பொறுப்பை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார் ராஜீவ் காந்தி. அதன்பிறகு இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவில் கணினித்துவம் அதிகரித்து, நவீன வளர்ச்சி கண்டது. தொழில்நுட்ப வசதிகளை இந்தியாவில் அதிகரிக்கச் செய்ய பல நடவடிக்கைகளை ராஜீவ் தொடர்ந்து மேற்கொண்டார். 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
