உலகப் புகழ் பெற்ற ‘பாரடைஸ் லாஸ்ட்‘ காவியத்தின் பதிப்புரிமையை, கண் பார்வையை இழந்து, ஏழ்மையில் இருந்த கவிஞர் ஜான் மில்ட்டன், வெறும் 5 பவுண்டுகளுக்கு, சாமுவேல் சிம்மன்ஸ் என்ற பதிப்பாளருக்கு விற்ற தினம் 1300 பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையானால் மேலும் 5 பவுண்டுகள் தருவதாக பதிப்பாளர் ஒப்புக்கொண்டார். உலகின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்படும் மில்ட்டன், கிரேக்கம், லத்தீன், இத்தாலி உள்ளிட்ட மொழிகளிலும் எழுதி உலகக் கவிஞராக அறியப்பட்டவர். ஷேக்ஸ்பியர்மீது அளவற்ற மதிப்புக் கொண்டிருந்த இவர், பாதிரியாராக வேண்டுமென்றுதான் விரும்பினார். ஆனால், பாரடைஸ் லாஸ்ட் காப்பியத்தில், கடவுளை எதிர்க்கும் சாத்தானை நாயகனாக்குமளவுக்கு, முடியாட்சியின்மீது எதிர்ப்பு உணர்வு கொண்டிருந்தார். மன்னராட்சிக்கு எதிராக இங்கிலாந்தில் 1642-51 காலகட்டத்தில் உள்நாட்டுப்போர் நடந்தது. அதாவது, மன்னரைவிட பாராளுமன்றம் அதிகாரம் படைத்ததாக இருக்கும் வண்ணம் உள்ள ஓர் ஆட்சிக்காக நடந்த போராட்டம் அது. அக்காலகட்டத்தில் மில்டனின் நூல்களை, தணிக்கை செய்தபின்னரே அச்சிட அனுமதிக்க முடியும் என்று அரசு சொல்லுமளவுக்கு அவரது எழுத்துக்கள் அரசுக்கும், மதத்தலைமையின் ஆதிக்கத்துக்கும் எதிராக இருந்தன. அதனால் தன் எழுத்துக்களைத் துண்டுப் பிரசுரங்களாக வெளியிட்டுப் புரட்சிக்கு உதவிய புரட்சிக்கவி மில்ட்டன். அவ்வாறு அவர் வெளியிட்ட ஏரோபேஜிட்டிகா என்ற 30 பக்கப் பிரசுரம், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு ஆதரவாக வரலாற்றிலேயே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தனிமனிதனின் சுதந்திரத்தை வலியுறுத்தும் அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தில், இதன் தாக்கத்தைக் காண முடியும்! உதாரணங்களைப் பயன்படுத்தி, எதையும் எளிதில் புரியும்வண்ணம் எழுதுவதில் வல்லவர் மில்ட்டன். 1654இல் மில்ட்டனின் பார்வை பறிபோன நிலையில், 1658இல் தொடங்கி, 1663 வரை அவர் சொல்லச்சொல்ல அவர் மகள்கள் பாரடைஸ் லாஸ்ட் காவியத்தை எழுதினர். பாரடைஸ் ரீகெய்ன்ட் காவியத்தை 1671இல் வெளியிட்ட மில்டன், கவிதைகள் மட்டுமின்றி மிகச்சிறந்த நாடகங்கள், உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.
போர்ச்சுக்கல் பயணி மகல்லன் பிலிப்பன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்ட தினம் கடல் வழியாக முதன் முதலில் உலகத்தைச் சுற்றிவந்த நாடாய்வுச் குழுவின் தலைவர் என்ற புகழைப் பெற்றவர் போர்ச்சுக்கீசிய நாடாய்வாளர் ஃபெர்டினாண்டு மகல்லன் (Ferdinand Magellan) ஆவார்.இவருடைய இந்தப் பயணம் மனித வரலாற்றிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தது எனலாம். இந்தப் பயணத்தை முழுமையாக முடிப்பதற்கு மூன்றாண்டுகளுக்குக் குறைவான காலமே பிடித்தது. மகல்லன், மிகச் சிறிய அலங்கோலமான, கசிவுடைய ஐந்து கப்பல்களுடன் ஸ்பெயினிலிருந்து தமது பயணத்தைத் தொடங்கினார். அவற்றில் ஒரு கப்பல் மட்டுமே பாதுகாப்பாக ஐரோப்பா மீண்டது. அவருடன் மொத்தம் 265 ஆட்கள் சென்றனர். அவர்களில் 18 பேர் மட்டுமே உயிரோடு திரும்பினர். இந்தப் பயணத்தின்போது இறந்தவர்களில் மகல்லனும் ஒருவர். (இந்தப் பயணத்தின் மிகக் கடினமான பகுதியில் குழுவுக்கு இவரே தலைமை தாங்கினார். ஃபிலிப்பைன் தீவில் இவருடைய ஆட்களுக்கும் தீவு மக்களுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மகல்லனும், அவருடைய ஆட்களில் பலரும் இறந்தனர்.) எனினும், இறுதியில் அந்தப் பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. உயிர் பிழைத்த சிலர் எஞ்சியிருந்த ஒரே கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து ஸ்பெயினை அடைந்தனர். இப்பயணத்தால் பூமி உருண்டையாக இருக்கிறது என்ற உண்மை ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டது. மகல்லனின் திறமையான தலைமையும் இரும்பு போன்ற உரம் வாய்ந்த மன உறுதியும்தான் இந்தப் பயணத்தின் வெற்றிக்கு மூலம் காரணம் என்பது மிகத் தெளிவு. இவருடைய மாலுமிகளில் பெரும்பாலோர், புறப்பட்ட சில மாதங்களிலேயே நாடு திரும்ப விரும்பினர். பயணத்தை தொடர்வதற்காக மகல்லன் அவர்களின் ஒரு கலகத்தையும் அடக்க வேண்டியிருந்தது. அவருடைய அபாரத் துணிவும், திறமையும், விடாமுயற்சியும் அவரை மீகாமர்கள், நாடாய்வாளர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் என்ற பெருமைக்கு உரியவராக்குகின்றன. ஆனால் உள்ளபடிக்கு அவருடைய சாதனையின் செல்வாக்கு மிகச் சொற்பமேயாகும். படித்த ஐரோப்பியர்கள், பூமி உருண்டையானது என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தனர். மேலும், மகல்லன் பயணம் செய்த கடல்வழி, ஒரு முக்கியமான வாணிகத் தடமாக ஆகிவிடவில்லை. வாஸ்கோட காமாவின் பயணத்தைப் போலன்றி, மகல்லன் பயணம் ஐரோப்பாவிலோ கிழக்கு நாடுகளிலே பெருஞ்செல்வாக்கைப் பெறவில்லை. எனவேதான், அவருடைய பயணம் அவருக்கு இறவாப் புகழை ஈட்டிக் கொடுத்த போதிலும், அது, அவரை வரலாற்றில் மிக்க செல்வாக்குப் பெற்ற நூறு பேரில் ஒருவராகச் சேர்ப்பதற்கு அவருக்குத் தகுதியைக் பெற்றுத் தரவில்லை, அவ்வளவுதான். இனி நம்மிடம் இருப்பது இரண்டே கப்பல்கள்தான். சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் நிச்சயமாக சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றை நான் தொலைத்துவிட்டேன். இழந்துவிட்டேன்’ – மனத்தளவில் அந்த முடிவுக்கு வந்திருந்தார் மெகல்லன். இருக்கும் இரண்டு கப்பல்களையாவது காப்பாற்றியாக வேண்டிய சூழல். ஆனால் அதற்கும் சோதனை தொடங்கியது. அடுத்ததாக ஒரு சூறாவளி வீச ஆரம்பித்தது. டிரினாடாடையும் விக்டோரியாவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதேதோ திசைகளில் எல்லாம் அவை கொண்டு செல்லப்பட்டன. அந்தச் சூறாவளியும் ஓரளவுக்கு ஓய்ந்தது. டிரினிடாடில் இருந்தபடி கடலைப் பார்த்தார் மெகல்லன். கண்பார்வை தூரத்தில்தான் விக்டோரியா இருந்தது. மனத்துக்குள் மெல்லியதாக ஒரு நிம்மதி படர்ந்தது. ஆனால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாதபடி விக்டோரியாவின் பாய்மரத் துணிகள் கிழிந்து தொங்கின. சூறாவளி கொடுத்துவிட்டுப் போன பரிசு. சில மணி நேரங்கள்கூட மெகல்லனின் நிம்மதி நீடிக்கவில்லை. அடுத்த சூறாவளி தாக்க ஆரம்பித்தது. கப்பல்களைப் புரட்டிப் போடும் அளவுக்குப் பேரலைகல் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன. கடல், பேரலைகளால் அந்த இரண்டு கப்பல்களையும் பந்துகள் போல எடுத்து, தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பாறையில் மோதி கப்பல் துண்டு துண்டாகிப் போகலாம் என்ற நிலை. கப்பல்களில் இருந்த எல்லோரும் இறுக்கமாக எதையாவது பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும் அலைகளில் ருத்ர தாண்டவம், சிலரை கடலுக்குள் விழ வைத்தது. கடலுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் தவறி விழுந்தார்கள். அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது. ஒவ்வொரு நொடியையும் மரண பயமின்றிக் கழிக்க முடியவில்லை. இந்த நிலை இரண்டு நாள்கள் தொடர்ந்தது. அதுவரை ஆடிய ஆட்டத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்பதுபோல அமைதியாக இருந்தது கடல். ‘இந்த நிமிடம் வரை உயிரோடு இருப்பதே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது. எப்படியோ விக்டோரியாவும் தப்பித்து விட்டது. ஆனால் சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவை நிச்சயமாக ஏதாவது ஒரு பாறையிலோ, குன்றிலோ மோதி சிதைந்து போயிருக்கும். யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா? சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.’ உடலெல்லாம் வலி. மனத்தில் அதைவிட. கடல் அமைதியடைந்திருந்தாலும் மெகல்லனால் அந்த இரவில் தூங்க முடியவில்லை. இருளை தின்றபடியே மெள்ள மெள்ள ஒளி ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த அதிகாலை நேரம். யாரோ தன்னைக் கூப்பிடுவது போல உணர்ந்த மெகல்லன் படாரென எழுந்து உட்கார்ந்தார். ‘கேப்டன்.. கேப்டன்..’ வெளியே ஹென்றியின் குரல் கேட்டது. அவசர அவசரமாக எழுந்து நொண்டியபடியே வெளியே சென்றார். முகம் முழுக்க உற்சாகம் வழிய நின்று கொண்டிருந்தான் ஹென்றி. அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவன் கைகாட்டிய திசையில் மெகல்லனின் பார்வை சென்றது. நம்பவே முடியாத ஆச்சரியம். தன் கண்களை மீண்டும் ஒருமுறை துடைத்துவிட்டு அதே திசையில் நோக்கினார். மெகல்லனின் முகத்தில் புன்னகை, சூரியன் போல உதயமானது. கைகள் கூப்பி ஜெபம் செய்ய ஆரம்பித்தார். தூரத்தில் சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் வந்து கொண்டிருந்தன. பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். பாய்மரக் கப்பல்கள்தான் இருந்தன. கடலில் சுழலோ, சூறாவளியோ, பெரும் பாறைகளோ, எதிரி நாட்டுப் படையோ – எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கப்பலைச் சீரழிக்கக் காத்திருக்கும். நிலப்பரப்பே இன்றி, பயணம் மாதக் கணக்கில் நீண்டு கொண்டே செல்லும். உணவோ , நீரோ கிடைக்காத அவலநிலையால் மரணம் சகஜம். இம்மாதிரியான சூழலில்தான் பயணி மெகல்லன், கடல் வழியாக உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். ஐந்து கப்பல்கள். 241 பேர். 69,800 கி.மீ. பயண தூரம். மூன்று வருடப் பயணம். எத்தனை பேர் பிழைத்து வந்தார்கள்? அது சரி உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் மகல்லன் என்பது உண்மைதானா?
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: ஏப்ரல் 27, 1840 வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை லண்டனில் தேம்ஸ் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்கின்ற இடமாகும். வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனை லண்டனில் தேம்ஸ் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மையில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமர்கின்ற இடமாகும். 1834-ஆம் எரிந்து போன பழைய கட்டிடத்திற்கு மாற்றாக 1840-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு இந்த புதிய அரண்மனை அமைக்கப்பட்டது. இந்த அரண்மனை அரசாங்க சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தை தக்க வைத்துள்ளது.
வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே (Edouard Albert Roche) அக்டோபர் 17, 1820ல் மோண்ட்பெல்லியர் பிரெஞ்சில் பிறந்தார். மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, 1844ல் தனறிவியல் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். பிறகு அங்கேயே 1849ல் அறிவியல் புலத்தில் பேராசிரியர் ஆனார். இவர் பியேர் சைமொன் இலாப்லாசின் ஒண்முகில் கருதுகோளைக் கணிதவியாகப் பகுப்பாய்வு செய்தார். இம்முடிவுகளை 1847 வரை பல ஆய்வுக் கட்டுரைகளாகத் தான் பணியில் சேர்ந்த்தில் இருந்து மோண்ட்பெல்லியர் கல்விக்கழகத்துக்கு அனுப்பினார். இவற்றில் மிக முதன்மையானவை இவர் எழுதிய வால்வெள்ளி(1860), ஒண்முகில் கருதுகோள்(1873) பற்றியவையாகும். இவரது ஆய்வுகள் துகள் சூறைகளின் பாலான வலிய ஈர்ப்பின் விளைவுகளை ஓர்ந்து பார்த்தன. ஆல்பெர்த் ரோச்சே காரிக்கோளின் வலயங்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாட்டுக்காகப் பெயர்பெற்றவர். இவர் இயல்பான நிலாவொன்று காரிக்கொளை நெருங்கும்போது ஈர்ப்பு அலைகளால் அந்நிலா தனித்தனிப் பகுதிகளாகப் பிரிந்து அதன் வலயங்கள் ஆகின என்றார். ஈர்ப்பால் கட்டுண்ட இரு பொருள்கள் ஓதவிசைகளால் பிரிவதற்கான தொலைவை கணக்கிட்டார். இந்தத் தொலைவு ரோச்சே வரம்பு எனப்படுகிறது. இவரது பிற ஆய்வுகளும் வட்டணை இயக்கவியலைச் சார்ந்தவையாகும். இரு பொருள்களிடையே வட்டணையில் சுற்றிவரும் ஒரு பொருள் அதில் ஒன்றால் கைப்பற்றப்படு வரம்புகளின் இருப்புவரையே ரோச்சே இதழ் என வழங்குகிறது. மற்றொரு பெரிய வான்பொருளைச் சுற்றிவரும் சிறிய வான்பொருளின் தக்கம் விளைவிக்கும் ஈர்ப்புக் கோளமே ரோச்சே கோளம் என வழங்குகிறது. ஆல்பெர்த் ரோச்சே ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வான்கோள இயக்கவியல் ஆய்வுக்காகப் பெயர் பெற்றவர். இவரது நினைவாக, ரோச்சே கோளம், ரோச்சே வரம்பு, ரோச்செ இதழ் ஆகிய அறிவியல் கருத்துப் படிமங்கள் குறிக்கப்படுகின்றன. இவர் வானிலையியல் நூலாசிரியரும் ஆவார்.
உலகின் முதல் மவுஸ் பொருத்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டரான ஜெராக்ஸ் 8010 ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் மவுஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் நடைமுறையில் பயன்பாட்டுக்கு வர 12 ஆண்டுகள் ஆனது.இரண்டு பட்டன்கள்கொண்ட மவுசுடன், பின்னாளில் பர்சனல் கம்ப்யூட்டர்களின் முக்கியக் கூறுகளாக மாறிய பிட்மேப் டிஸ்ப்ளே, விண்டோ அடிப்படையிலான கிராஃபிக்கல் யூசர் இண்ட்டர்ஃபேஸ், ஐகன்கள், ஃபோல்டர்கள், ஈத்தர்நெட் நெட்வொர்க்கிங், ஃபைல் சர்வர், பிரிண்ட் சர்வர் உள்ளிட்டவை இந்தக் கணினியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை உருவாக்கிய ஜெராக்ஸ் பிஏஆர்சி நிறுவனம், ஜெராக்சின் ஆய்வும், மேம்பாடும் (ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்) நிறுவனமாகும். மேற்குறிப்பிட்டவைதவிர, லேசர் பிரிண்ட்டர், திரையில் காண்பதையே அச்சில் தரும் விசிவிக்(வாட் யூ சீ ஈஸ் வாட் யூ கெட்) டெக்ஸ்ட் எடிட்டர் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியும், மேலும் பல உருவாவதற்கு அடிப்படையாகவும் இருந்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏராளமான முன்னேற்றங்களுக்கு இந்த நிறுவனமே தொடக்கமாக இருந்தது. 1979இல் இந்நிறுவனத்திற்கு வந்த ஸ்டீவ் ஜாப்சுக்கு, ஆப்ஜெக்ட் ஓரியண்ட்டட் ப்ரொக்ராம்மிங், நெட்வொர்க்கிங், விசிவிக் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் காட்டப்பட்டபோது, மற்றவற்றின் முக்கியத்துவத்தை உணராத அவர், மவுசால் இயக்கப்படும் கிராஃபிக்கல் யூசர் இண்ட்டர்ஃபேஸ் அமைப்பைக்கண்டு வியந்துபோனதுடன், தங்கள் நிறுவனத்தின் லிசா இயங்குதளத்தில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். பிஏஆர்சி உருவாக்கியிருந்த இந்தத் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவமும், எதிர்காலமும் உண்மையில், ஜெராக்ஸ் நிறுவத்திற்கே தொடக்க காலத்தில் தெரியவில்லை என்பதால்தான், மெயின்ஃப்ரேம் கணினிகள் கோலோச்சிய 1970கள் காலத்திலேயே சிறிய கணினிகளை உருவாக்க முயற்சித்த பிஏஆர்சிக்கு ஒத்துழைக்கவில்லை. 1980களில் ஆப்பிள் நிறுவனத்தின் மெஷிண்ட்டோஷ் கணினிகள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியபின்னர்தான் ஜெராக்ஸ் தன் தவறை உணர்ந்தது. ஆனால், ஏற்கெனவே காலூன்றியிருந்த நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல், கணினிச் சந்தையைவிட்டே வெளியேறுவதைத்தவிர, ஜெராக்சுக்கு வேறு வழியின்றிப்போனது!
சாமுவெல் மோர்ஸ் பிறந்த தினம் (Samuel Morse Birth Day) மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்பதை நிரூபித்தவர். ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். 1844ஆம் ஆண்டு மே 24 அன்று உலகின் முதல் தந்திச் செய்தியை வாஷிங்டன் டிசிஇலிருந்து பால்டிமோருக்கு அனுப்பி புரட்சியை ஏற்படுத்தினார்.
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரும், “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்பட்டவருமானவரின் நினைவு தினம் கு.ப. ராஜகோபாலன் அவர்களைப் பற்றி இன்னும் சில விவரங்கள் இங்கே: பிறப்பு மற்றும் இளமை: கு.ப.ரா ஜனவரி 1902-ல் கும்பகோணத்தில் பிறந்தார். அவருடைய குடும்பம் தெலுங்கு மொழி
பேசும் பிராமணக் குடும்பம். தந்தை தென்னிந்திய ரயில்வேயில் வேலை பார்த்ததால், குடும்பம் திருச்சியில் வசித்து வந்தது.திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் வடமொழியைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். பணி மற்றும் இலக்கிய வாழ்க்கை: மதுரை மாவட்டம் மேலூரில் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார்.கண்பார்வை குறைந்ததால் வேலையை விட்டு விலக நேரிட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் கண் பார்வை திரும்பியதும் சென்னைக்கு வந்து முழுநேர எழுத்தாளரானார். “மணிக்கொடி”, “கலைமகள்”, “சுதந்திர சங்கு”, “சூறாவளி”, “ஹனுமான்”, “ஹிந்துஸ்தான்” போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. வ. ராமசாமி ஆசிரியராக இருந்த “பாரத தேவி” இதழிலும் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது கும்பகோணத்தில் “மறுமலர்ச்சி நிலையம்” என்ற பெயரில் புத்தக நிலையம் நடத்தினார். 1943-ஆம் ஆண்டு “கிராம ஊழியன்” இதழின் சிறப்பாசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார். கு.ப.ரா தனது இயற்பெயரிலும், “பாரத்வாஜன்”, “கரிச்சான்”, “சதயம்” போன்ற புனைப்பெயர்களிலும் எழுதினார். இலக்கியப் பங்களிப்பு: கு.ப.ரா சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், வசன கவிதைகள், ஓரங்க நாடகங்கள், திறனாய்வுகள், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் எனப் பல துறைகளில் முத்திரை பதித்தார். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சில: சிறுகதைத் தொகுப்புகள்: ஆற்றாமை, கனகாம்பரம் முதலிய கதைகள், காணாமலே காதல், புனர்ஜன்மம் சிறுகதைகள். நாவல்கள்: கோதை சிரித்தாள். கட்டுரைத் தொகுப்புகள்: கண்ணன் என் கவி, எதிர்கால உலகம், ஸ்ரீ அரவிந்த யோகி. மொழிபெயர்ப்புகள்: அனுராதா (சரத்சந்திரர்), ஆறு நவயுக நாவல்கள், டால்ஸ்டாய் சிறுகதைகள். ஆண்-பெண் உறவுகளை மையப்படுத்தி சொற்சிக்கனத்துடனும், வடிவ ஒருமையுடனும் கதைகளை எழுதியதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். குடும்ப வாழ்க்கையை உரிப்பொருளாகக் கொண்டு கதைகள் படைப்பதில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். சொந்த வாழ்க்கை: 1926-ல் சுப்புலட்சுமி என்கிற அம்மணி அம்மாளை மணந்தார். அவர்களுக்கு பட்டாபிராமன், ராஜாராமன், கிருஷ்ணமூர்த்தி என மூன்று மகன்கள். இறப்பு: கு.ப. ராஜகோபாலன் 1944 ஏப்ரல் 27-ஆம் தேதி காலமானார். அவருக்கு இழைய அழுகல் நோய் தாக்கியிருந்தது. கு.ப. ராஜகோபாலன் அவர்கள் குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும், தமிழ் இலக்கியத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு மிகவும் significantமானது. அவருடைய படைப்புகள் இன்றும் பலராலும் வாசிக்கப்பட்டு போற்றப்படுகின்றன.
ரஷ்யப் பேரரசின் நாடாளுமன்றமான டூமா முதன்முறையாகக் கூடிய நாள். ஐரோப்பிய நாடுகள் பலவும், அரசியலமைப்பு சார்ந்த, நாடாளுமன்ற முடியாட்சியாக மாற்றம் பெற்றாலும், ரஷ்யப் பேரரசின் ஜார்கள், தங்கள் அதிகாரத்தின் சிறுபகுதியைக்கூட விட்டுத்தரத் தயாராக இல்லை. 1700களின் தொடக்கத்தில் முதலாம் பீட்டரால் சீக்ரெட் கவுன்சில், 1762இல் மூன்றாம் பீட்டரால் இம்ப்பீரியல் கவுன்சில் ஆகியவை தொடங்கப்பட்டாலும், விரைவில் கலைக்கப்பட்டுவிட்டன. இவையும், 1810இல் முதலாம் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்டு, 1906இல் மேலவையாகிய ஸ்டேட் கவுன்சிலும், அரசர் தனக்கு வேண்டியவர்களை நியமித்துக்கொள்ளும், அதிகாரமற்ற ஆலோசனை அவைகளாகவே இருந்தன. மிகப்பெரும்பான்மையாக இருந்த விவசாயிகளின் மிகக்குறைவான வருவாய் உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாக்கியிருந்த எதிர்ப்புணர்வினை, 1904-05இல் நிகழ்ந்த ஜப்பானுடனான போரில் ஏற்பட்ட தோல்வி, ‘1905 புரட்சியாக’ வெடிக்கச் செய்தது. அமைச்சரவையின் தலைவரான செர்ஜெய் விட்-டின் வற்புறுத்தலினால், அடிப்படை மனித உரிமைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் ‘அக்டோபர் பிரகடனத்தை’, விருப்பமின்றி ஜார் ஏற்றார். அதன்படி 1906 மார்ச்-ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட்டு 497 உறுப்பினர்களுடன் இந்த முதல் டூமா தேர்ந்தெடுக்கப்பட்டது. 1870களில் உள்ளாட்சி அவைகளுக்குச் சூட்டப்பட்ட பெயரான இந்த டூமா என்பது, ‘சிந்தித்தல்’ என்ற பொருளுடைய ஜெர்மானியச் சொல்லிலிருந்து உருவானது. அதன்படியே, இதற்கு செயல்படும் அதிகாரங்கள் அளிக்க ஜார் தயாராக இல்லாததால், 73 நாட்களில் கலைத்துவிட்டார். புரட்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வேறு வழியின்றி 1907 ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட்டு, 518 உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்ட இரண்டாவது டூமாவையும், 103 நாட்களில் ஜார் கலைத்தார். 1907 அக்டோபரில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, 509 உறுப்பினர்களுடன் மூன்றாவது டூமா தேர்ந்தெடுக்கப்பட்டது, முந்தைய இரண்டிலும், ரஷ்யப் பேரரசின் ரஷ்யர்கள் அல்லாத பகுதிகளிலிருந்து அதிக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த டூமாவில் மிகப்பெரும்பகுதி ரஷ்யர்களாக இருந்ததுடன், பிரபுக்கள், பெரும் நிலவுடைமையாளர்கள், பெருவணிகர்கள் ஆகியோரால் நிரம்பியிருந்ததால், ‘ஆண்டைகளின் டூமா’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஜார் விருப்பப்படி இயங்கியதால் இதுவும், நான்காவது டூமாவும் ஐந்தாண்டுகள் தொடர முடிந்தது. உலகெங்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த பொருளாதார, சமூக மாற்றங்களைநோக்கி 1905இன் புரட்சி வழிநடத்தியபோதும், ஜார் அதை ஏற்காமல் கைப்பாவை நாடாளுமன்றத்தை உருவாக்கியதாலேயே, 1917இல் புரட்சி ஏற்பட்டு, முடியாட்சி முற்றிலுமாக ஒழிந்தது.
கொரியப்போரின்போது ‘ஆப்பரேஷன் மூலா’ என்பதை அமெரிக்க வான்படை தொடங்கிய நாள் மூலா என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பணம் என்று பொருள். ஃபிஜி மொழியில் பணம் என்ற பொருளிலேயே மூலா என்ற சொல் இருந்தாலும், ஆங்கிலச் சொல்லுக்கான வரலாறு உறுதியாகத் தெரியவில்லை. கொரியப்போரில் வடகொரியாவால் பயன்படுத்தப்பட்ட, சோவியத் தயாரிப்பான மிக்-15 ரக போர் விமானங்களால் நடுங்கிப் போயிருந்த அமெரிக்க விமானப்படை, முழுமையாகச் செயல்படும் நிலையிலான அந்த விமானத்துடன் சரணடையும் கொரிய அணியின் விமானிகள் ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் டாலர்(இன்றைய இந்திய மதிப்பில் சுமார் மூன்றே முக்கால் கோடி ரூபாய்!) வெகுமதியும்(லஞ்சம்!), அரசியல் அடைக்கலமும் தரப்படும் என்றும், முதலில் வருபவருக்கு ஒரு லட்சம் டாலர் அளிக்கப்படும் என்றும் அறிவித்ததுதான் இந்த ஆப்பரேஷன் மூலா! வடகொரியாவுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவிய நிலையில், தென்கொரியாவில் ஐநா கூட்டுப்படை என்ற பெயரில் 90% அமெரிக்கப் படைகள்தான் போரிட்டுக்கொண்டிருந்தன. நாய்ச்சண்டை(டாக்-ஃபைட்) என்றழைக்கப்படும், நடுவானில் போர் விமானங்கள் அருகருகே மோதிக்கொள்ளும் யுத்தத்தில், தங்களிடமிருந்ததிலேயே சக்திவாய்ந்ததான எஃப்-86 போர் விமானங்களைவிட, சோவியத்தின் மிக்-15 விமானங்கள் சக்திவாய்ந்தவையாக இருந்ததை உணர்ந்து அச்சமுற்றது அமெரிக்கா. செயல்படும் நிலையில் அந்த விமானம் கிடைத்தால் அந்தத் தொழில்நுட்பத்தைத் திருடலாம் என்று திட்டமிட்டு இந்த ‘பேக்கேஜை(!)’ அறிவித்தது. கொரிய, மண்டாரின், கண்ட்டோனிய, ரஷ்ய மொழிகளில் வானொலி அறிவிப்புகளுடன், லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களும் வடகொரியப் பகுதியில் வீசப்பட்டாலும், ஒருவரும் வரவில்லை. ஜூலை 27இல் போர் நிறுத்தமும் கையெழுத்தாகி, போரும் முடிந்துபோனாலும், அமெரிக்கர்களால் ஒரு மிக்-15ஐக்கூட நெருங்கக்கூட முடியவில்லை. கொரியப் படையில் சேரும்போதே பொய் சொல்லி சேர்ந்து, பல முறைகேடுகளில் ஈடுபட்டிருந்த நோ-கும்-சோக் என்ற வீரர், செப்டெம்பர் 21இல் தென்கொரியாவுக்கு ஒரு மிக்-15ஐ (திருடி!)கொண்டுவந்து ஒப்படைத்தார். அவரும்கூட ஆப்பரேஷன் மூலா குறித்தோ, பரிசுத்தொகை குறித்தோ தெரியாமல் ஓடிவந்தவர்தான் என்றாலும், ஆப்பரேஷன் மூலா வெற்றிபெற்றுவிட்டதாக அமெரிக்கா கூறிக்கொண்டது. ஆனால், தொழில் தர்மம்(எத்திக்ஸ்) இல்லையென்று அவருக்கு ஒரு லட்சம் டாலரை அளிக்க அமெரிக்கா மறுத்து, அடைக்கலம், கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை மட்டும் அளித்தது. வியட்னாம் போரின்போதும், சோவியத்தின் மிக்-21 விமானம், மில் எம்ஐ-6 ஹூக்கர் ஹெலிக்காப்பட்டர் ஆகியவற்றால் அச்சமுற்று, திருட்டுத்தனமாக அவற்றைப்பெற ஆப்பரேஷன் ஃபாஸ்ட் பக்(விரைவாகப் பணம்!) என்பதை அமெரிக்கா அறிவித்தது தனிக்கதை!
சென்னை நகரின் உருவாக்கத்திற்குத் திட்டம் வகுத்தவர்களில் முதன்மையானவரான பிட்டி தியாகராயர் பிறந்த நாளின்று. சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கியது நீங்களா? நாங்களா? என அரசியல் கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதன்முதலில் 1892லேயே மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியவர். பிரிட்டிஷ் அரசரை ஆங்கிலேய உடையில் வரவேற்க வேண்டும் என்ற மரபை மீறி வெள்ளை ஆடையில்தான் வரவேற்பேன் என்றதால் ‘வெள்ளுடை வேந்தர்’ என்றழைக்கப்பட்டவர். சென்னை மாநகர் முழுமைக்கும் விளக்கு ஒளியையும், குடிநீர்க் குழாயையும் கொண்டு வந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கப்பல்களுக்குச் சொந்தக்காரர். இப்படிப் பல சிறப்புகளுக்கு உரிய சென்னை நகரத்தின் தந்தையாகத் திகழ்ந்தவர் பிட்டி தியாகராயர் சென்னை நகர வீதி அமைப்புகள், நகர உருவாக்கம் ஆகியவற்றிற்காகப் பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்கி அதனைக் கருவாக்கி, சென்னை என்ற சொல்லாட்சியின் வேர் இன்று உலகளவில் நிலைத்து நிற்க அடித்தளமிட்டவர் பிட்டி தியாகராயர். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்னர் வந்த நாட்களில் ‘நீதிக்கட்சி’ என மாற்றம் பெற்று தமிழகத்தின் முதல் தேர்தலில் போட்டியிட்டது. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தமிழகத்தின் முதல் முதலமைச்சராகும் வாய்ப்பு பிட்டி தியாகராயருக்குத் தேடி வந்தது. ஆங்கில அரசின் கவர்னர், நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பிட்டி தியாகராயரை முதலமைச்சர் பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பிட்டி தியாகராயர் அந்தப் பதவியை மறுத்து சுப்பராயலு என்பவரை முதலமைச்சராகப் பதவி ஏற்க வைத்தார். பதவி தேடி வந்த போதும் ஏற்க மறுத்து மக்கள் பணிகளில் எப்போதும் போல முன் நின்றார். அதன் பின்னர் பலரின் வற்புறுத்தலுக்குப் பின்னர் இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக பிட்டி தியாகராயர் பதவி ஏற்றார். பதவி ஏற்று சில மாதங்களில் பிரிட்டிஷ் அரசர் சென்னை வருவதாக இருந்தது. ஆங்கிலேய ஆளுநர் பிட்டி தியாகராயரிடம், ‘சென்னை மாநகர மேயர் என்னும் முறையில் ஆங்கிலேய பாணி உடை அணிந்துதான் நீங்கள் வரவேற்க வேண்டும்’ என்று கூற, தியாகராயரோ, ‘என் நாட்டின் கதராடை அணிந்துதான் வரவேற்பேன். ஆங்கிலேய உடை அணிந்துதான் வரவேற்க வேண்டுமெனில், நான் நிகழ்வுக்கே வரவில்லை’ என உறுதியாகக் கூறினார். வேறு வழியின்றி ஆங்கிலேய அரசு அவரை வெள்ளை ஆடை அணிந்து வரவேற்கச் சொன்னது. அதுபோல மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்து ஆங்கில அரசாங்கம் பிறப்பித்த உத்தரவுகளை தியாகராயர் போராடித் திரும்பப் பெற வைத்தார். இந்தியர்கள் அவர்கள் விரும்பிய ஆடையில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். சென்னை மாநகராட்சியின் மேயராக தியாகராயர் திகழ்ந்த போது ஒரு சில குறிப்பிட்ட பிரிவினரே கல்வி கற்க இயலும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி சென்னையின் பல இடங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அனைவருக்கும் கல்வி உரிமையைக் கட்டணமின்றி வழங்கி அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி கற்கலாம் என்ற நிலையை உருவாக்கினார். சில இடங்களில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க 1892 ல் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே முதன் முறையாக அனைவருக்கும் கல்வி உரிமை, பள்ளிகளில் மதிய உணவு என்று பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவர் தொடங்கிய பள்ளி பின்னாளில் தியாகராயர் கல்லூரி என வளர்ச்சி பெற்றது. அன்றைய காலங்களில் கோயில்களுக்கும், குளங்களுக்கும் மாநகராட்சி சார்பில் வரி விதிக்கப்பட்டு வந்தது. வரியை உயர்த்த வேண்டும் என்ற தீர்மானம் நீதிக்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது கொண்டு வரப்பட்ட போது கடுமையான வாதங்களை எடுத்து வைத்து கோயில் குளங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வைத்தவர் தியாகராயர். அதுபோல சென்னை பார்த்தசாரதி திருக்கோயிலின் தெப்பக் குளம் பாசி படர்ந்து கொசுக்கள் பெருகி மக்களின் சுகாதாரத்திற்குப் பெரிதும் சிக்கலாக இருந்து வந்தது. அப்போது மாநகராட்சியின் உறுப்பினராக இருந்த டாக்டர் டி.எம். நாயர் என்பவர், பார்த்தசாரதி கோயிலின் குளத்தை மண் கொண்டு மூடிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் கொண்டு வந்தார். அதனைத் தியாகராயர் கடுமையாக எதிர்த்து, குளங்களை மூடுவதற்காகவா நம் மன்னர்களும், முன்னோர்களும் உருவாக்கினார்கள். குளத்தைத் தூய்மை செய்தாலே போதும் என்று தன் வாதத்தை வைத்து, தன் சொந்தச் செலவில் கோயிலின் குளத்தைச் சீரமைக்கிறேன் என்று கூறி தீர்மானத்தைத் தோற்கடித்து, குளம் தொட்டு வளம் பெருக்கினார். அதன்படியே குளத்தைச் சீரமைத்தும் தந்தார். டி.எம். நாயர் தியாகராயரின் நெருங்கிய நண்பரில் ஒருவர் என்பதும், பொதுச்சேவையில் நண்பரையும் எதிர்த்து நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகராயரின் முயற்சி மட்டும் இல்லையெனில் இன்று சிறப்புடன் விளங்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் குளம் ஏதேனும் ஓர் அரசியல் தலைவரின் பெயரில் பூங்காவாக அமைக்கப்பட்டிருக்கும். அக்காலங்களில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் சமஸ்கிருதம் படித்தாக வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தது. இதனால் அந்தணர்கள் அல்லாத மற்றவர்கள் மருத்துவம் படிக்க இயலாத நிலை நீடித்து வந்தது. சட்டமன்றத்திலும் ஆங்கில அரசிடமும் போராடி அந்த விதியை மாற்றி அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற நடைமுறையை உருவாக்கிய செயல்வழி வேந்தர் தியாகராயர் என்பது குறிப்பிட வேண்டிய உண்மை. அன்றைய காலத்தில் நாட்டு மருத்துவம் மூலம் சரியான விழிப்புணர்வு இன்றி அதிகமான சிசு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. அதனை மாற்ற ஆங்கிலேய மருத்துவமுறையைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்து செயலாக்கினார். தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவராகத் திகழ்ந்த போதிலும், அரசுக்கு இணையாகத் தன்னுடைய சொந்தச் செல்வங்களைக் கொண்டு சென்னை முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். சென்னையில் தென் சென்னை மக்கள் மட்டுமே டிராம் என்று அழைக்கப்படும் பொதுப் போக்குவரத்து வசதியைப் பெற்று வந்தனர். சென்னையின் பிற பகுதி மக்களுக்கு அந்த வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பின்னர் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கக் காரணமாகத் திகழ்ந்தவர் தியாகராயர். அதுபோல சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டுமே மண்ணெண்ணெய் விளக்கு எரியும் திட்டம் நடைமுறையில் இருந்தது. அதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. தனது சொந்த நிதியைப் பாதி வழங்கி சுமார் சில லட்சம் மதிப்பில் ஏற்றத்தாழ்வின்றி சென்னையின் அனைத்து வீதிகளிலும் மண்ணெண்ணெய் விளக்குகள் அமைத்து வெளிச்சம் ஏற்படுத்தினார். சென்னை மாநகராட்சியின் மேயராகத் தியாகராயர் இருந்தபோது சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவியது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் அப்போது நடைமுறையில் இருந்தது. ஆங்கிலேய அரசிடம் வலியுறுத்திச் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கி சென்னையின் பல பகுதிகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கும் பணியைப் பல மாதங்கள் முன்னின்று தொடங்கி வைத்தார். அன்றைய காலத்தில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களின் மூலம் கள் இறக்கப்பட்டு வந்தது. அதன்மூலம் வருவாயும் மாநகராட்சிக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் மது அருந்துவதால் பலரும் பாதிக்கப்படுவதை உணர்ந்த தியாகராயர், மாநகராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதைத் தடுத்து 9.5.1922ல் தீர்மானம் கொண்டு வந்தார்
