பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த சரியான புரிதலையும் உருவாக்கும் வகையில் உலகப் புவி நாள் (World Earth day), ஏப்ரல் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 1969-ம் ஆண்டில் அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான எண்ணெய் சிதறலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன், சாண்டா பார்பராவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே எண்ணெய் சிதறலை நேரில் கண்ட பிறகு, மனம் கொதிப்படைந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அவர் திரும்பினார். அதற்குப் பிறகு ஏப்ரல் 22-ம் தேதியைத் தேசியச் சுற்றுச்சூழல் நாளாக அறிவிக்கும் மசோதாவை அவர் சமர்ப்பித்தார். 1970 முதல் அமெரிக்காவில் அது அனுசரிக்கப்பட்டது. நவீன சுற்றுச்சூழல் போராட் டத்தின் தொடக்கம் என்று இந்த நாளைக் கூறலாம். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் இருக்கும்.இதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் ‘எர்த் டே’ எனப்படும் புவி நாளைக் கொண்டாடுவது பற்றி அமைதிக்காகப் போராடிய ஜான் மெக்கோநெல் அறிவித்தார். 1972-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் புவி நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தொடர்கின்றன. இந்த பூமியின் முதல் எதிரி யார் ?என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் என்று சொல்லி விடலாம். . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .
புனிதரும் மனிதரே : திருத்தந்தை புனித காயுஸ் மறைந்த தினமின்று.. திருஅவையின் 28ம் திருத்தந்தையாக கி.பி. 283 டிசம்பர் 17 முதல் கி.பி. 296 ஏப்ரல் 22 வரை ஆட்சி செய்தவர் திருத்தந்தை புனித காயுஸ். இலத்தீன் மொழியில் காயுஸ் என்னும் பெயருக்கு “மகிழ்ச்சி நிறைந்தவர்” என்பது பொருள். கிறித்தவ மரபுப்படி, திருத்தந்தை காயுஸ், இத்தாலி நாட்டுக்குக் கிழக்கே அட்ரியாட்டிக் கடலோரமாக உள்ள தல்மாசியாப் பகுதியில் சலோனா நகரில் பிறந்தவர். திருத்தந்தை காயுஸ், உரோமைப் பேரரசன் தியோக்ளேசியனின் உறவினர் என்று கூறப்படுகிறது. “திருத்தந்தையர் நூல்” என்னும் பண்டைக்கால ஏடு தரும் குறிப்பின்படி, திருத்தந்தை காயுஸ், புனித சூசன்னா, புனித திபூர்சியுஸ் ஆகியோரால் மனமாற்றம் பெற்ற பலருக்குத் திருமுழுக்கு கொடுத்தவர் எனத் தெரிகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரலாற்று ஏடு ஒன்று தரும் தகவல்படி, புனித சூசன்னாவின் தந்தையின் சகோதரர் திருத்தந்தை காயுஸ் ஆவார். திருத்தந்தை காயுஸ் உரோமை மறைமாவட்டத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, திருத்தொண்டர்களின் பொறுப்பில் ஒப்படைத்தார். அவரது ஆட்சிக்காலத்தில் புதிய கோவில்கள் கட்டப்பட்டன. கல்லறைத் தோட்டங்களும் உருவாக்கப்பட்டன. அவரது ஆட்சியின்போது உரோமையை ஆண்ட பேரரசர் தியோக்ளேசியன் ஆவார். அம்மன்னரது ஆட்சியின் பிற்பகுதியில் கி.பி. 303 இல் கிறித்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். திருத்தந்தை காயுஸ் கி.பி. 296ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் இறந்தார். 1854ல் ஜொவான்னி பத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாய்வாளர் திருத்தந்தை காயுசின் கல்லறையில் இருந்த கல்லெழுத்தைக் கண்டுபிடித்தார். அப்போது புனித காயுசின் முத்திரை மோதிரமும் கிடைத்தது. திருத்தந்தை எட்டாம் உர்பான், காயுசின் உடலை 1631ல் உரோமை புனித காயுஸ் கோவிலுக்கு மாற்றினார். அக்கோவில் 1880களில் அழிந்ததைத் தொடர்ந்து அவ்வுடல் பார்பெரீனி சிறுகோவிலில் வைக்கப்பட்டதுபுனிதரும் மனிதரே : திருத்தந்தை புனித காயுஸ் மறைந்த தினமின்று.. திருஅவையின் 28ம் திருத்தந்தையாக கி.பி. 283 டிசம்பர் 17 முதல் கி.பி. 296 ஏப்ரல் 22 வரை ஆட்சி செய்தவர் திருத்தந்தை புனித காயுஸ். இலத்தீன் மொழியில் காயுஸ் என்னும் பெயருக்கு “மகிழ்ச்சி நிறைந்தவர்” என்பது பொருள். கிறித்தவ மரபுப்படி, திருத்தந்தை காயுஸ், இத்தாலி நாட்டுக்குக் கிழக்கே அட்ரியாட்டிக் கடலோரமாக உள்ள தல்மாசியாப் பகுதியில் சலோனா நகரில் பிறந்தவர். திருத்தந்தை காயுஸ், உரோமைப் பேரரசன் தியோக்ளேசியனின் உறவினர் என்று கூறப்படுகிறது. “திருத்தந்தையர் நூல்” என்னும் பண்டைக்கால ஏடு தரும் குறிப்பின்படி, திருத்தந்தை காயுஸ், புனித சூசன்னா, புனித திபூர்சியுஸ் ஆகியோரால் மனமாற்றம் பெற்ற பலருக்குத் திருமுழுக்கு கொடுத்தவர் எனத் தெரிகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரலாற்று ஏடு ஒன்று தரும் தகவல்படி, புனித சூசன்னாவின் தந்தையின் சகோதரர் திருத்தந்தை காயுஸ் ஆவார். திருத்தந்தை காயுஸ் உரோமை மறைமாவட்டத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, திருத்தொண்டர்களின் பொறுப்பில் ஒப்படைத்தார். அவரது ஆட்சிக்காலத்தில் புதிய கோவில்கள் கட்டப்பட்டன. கல்லறைத் தோட்டங்களும் உருவாக்கப்பட்டன. அவரது ஆட்சியின்போது உரோமையை ஆண்ட பேரரசர் தியோக்ளேசியன் ஆவார். அம்மன்னரது ஆட்சியின் பிற்பகுதியில் கி.பி. 303 இல் கிறித்தவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். திருத்தந்தை காயுஸ் கி.பி. 296ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் இறந்தார். 1854ல் ஜொவான்னி பத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாய்வாளர் திருத்தந்தை காயுசின் கல்லறையில் இருந்த கல்லெழுத்தைக் கண்டுபிடித்தார். அப்போது புனித காயுசின் முத்திரை மோதிரமும் கிடைத்தது. திருத்தந்தை எட்டாம் உர்பான், காயுசின் உடலை 1631ல் உரோமை புனித காயுஸ் கோவிலுக்கு மாற்றினார். அக்கோவில் 1880களில் அழிந்ததைத் தொடர்ந்து அவ்வுடல் பார்பெரீனி சிறுகோயிலில் வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் முதல் நில வேட்டை நடைபெற்ற நாள் ஆம்! தங்க வேட்டை மாதிரி, நில வேட்டை. அமெரிக்க மண்ணைப் பிடித்துக்கொண்டு, அதைத் தங்கள் நாடாக்கி, ஆட்சியும் அமைத்துவிட்டபின், அந்த மண்ணைப் பங்கு போட்டுக்கொண்ட நிகழ்வு இது. பொது நிலத்தை, அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து, அவர்கள் பிடிக்கும் பகுதியை அவர்களுக்கே சொந்தமாக்கினார்கள். அவர்கள் எப்படி அந்த நிலப்பகுதியைப் பிடித்துக்கொண்டார்கள் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள், எவ்வளவு இடத்தைப் பிடிக்கிறார்களோ அது இலவசமாகவோ, அல்லது மிகச்சிறிய தொகைக்கோ அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். தொடக்க நேரத்திற்கு முன்பாகவே வந்து, ஒதுக்கீடு செய்யப்படவிருக்கும் பகுதிக்குள் ஒளிந்திருந்தும் ஏராளமானோர் நிலத்தைக் கைப்பற்றினர். ஏழுமுறை இவ்வாறு நடந்த நில வேட்டைகளில் இது முதலாவதாகும். இந்த முதல் நில வேட்டையில் சுமார் 20 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு நடந்த நில வேட்டைகளில் 1893 செப்டம்பர் 16 அன்று நடந்ததே மிகப்பெரிய நில வேட்டையாகக் குறிப்பிடப்படுகிறது. அதில் சுமார் 60 லட்சம் ஏக்கர் நிலம் இவ்வாறு வழங்கப்பட்டது. இந்த ஏழு நிலவேட்டைகளிலும் மொத்தம் சுமார் 2 கோடி ஏக்கர் நிலம், ஏக்கருக்கு 1.40 – 2.50 டாலர் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. சரியாகச் சொன்னால், அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்களான செவ்விந்தியப் பூர்வகுடிகளை விரட்டிவிட்டு (எதிர்த்தால் கூட்டம் கூட்டமாகக் கொன்றுவிட்டு) கைப்பற்றி வைத்திருந்த நிலத்தையே, ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே என்று அந்த விலைக்கு வழங்கினார்கள். அதிலும், எந்த இடத்தை யார் முதலில் பிடித்தது என்பதில் ஏராளமான வழக்குகள் ஏற்பட்டு, உள்ளூர் நில அலுவலகங்களிலும், முடியாதவை பின்னர் அமெரிக்க உள்துறையாலும் தீர்க்கப்படவேண்டிவந்தது. கடைசி நில வேட்டை, 1895இல் அப்போது கிக்காப்பூ என்றழைக்கப்பட்ட, தற்போது ஓக்லஹாமாவில் உள்ள பகுதியில் நடந்தது.
நிரூபிக்கப்பட்ட கொலைகளின் எண்ணிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய தொடர்கொலைகாரராக இன்றுவரை இருக்கிற கொலம்பியயா நாட்டைச் சேர்ந்த லூயிஸ் க்ராவிட்டோ கைதுசெய்யப்பட்ட நாள் 1992-99 காலகட்டத்தில், 8இலிருந்து 16 வயதுவரையுள்ள 140 சிறுவர்களை, தன்பாலினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியபின் கொலை செய்ததாக அவன் வாக்குமூலம் அளித்ததில், 138 கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆனாலும், 300க்கும் அதிகமான சிறுவர்களை இவன் கொலை செய்திருப்பதாகவும், 138க்குத்தான் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதே கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ லோப்பஸ், 1969-79 காலகட்டத்தில், 8இலிருந்து 12 வயது வரையுள்ள 110 சிறுமிகளை, வன்புணர்வுக்குள்ளாக்கிக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது. உண்மையில் 300க்கும் அதிகமான சிறுமிகளை அவ்வாறு கொலை செய்ததாக அவனே கூறினாலும், 110க்கு மட்டுமே ஆதாரங்கள் இருந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, பின் 14 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, 1994இல் விடுதலையும் செய்யப்பட்டுவிட்டார் .ஸாரி ன். தொடர்கொலைகளைச் செய்த தனிப்பட்ட மனிதர்களில் இவர்கள் முதலிடங்களைப் பிடித்தாலும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹரோல்ட் ஷிப்மேன் என்ற மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 218 நோயாளிகளைக் கொலை செய்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளான். தவறுதலான சிகிச்சையாக அன்றி, தெரிந்தே தவறான மருந்து கொடுக்கப்பட்டு, இவனால் கொலை செய்யப்பட்டவர்கள் 250க்கும் அதிகம் என்று செய்திகள் கூறுகின்றன. வாழ்நாள் முழுவதும் விடுதலையாக முடியாத சிறைத்தண்டனை வழங்கப்பட்ட இவன், தன் 58ஆவது பிறந்தநாளில், சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான். சுமார் 400 நோயாளிகளைக் கொலை செய்ததாகக் கூறப்பட்டு, 29 கொலைகள் நிரூபிக்கப்பட்ட அமெரிக்க ஆண் செவிலியர் சார்லஸ் குல்லன் என்பவனுக்கு, 2403இல்தான் விடுப்பில் வரும் தகுதிபெறும்படி, 18 தொடர் ஆயுள்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. 1920-40களில் அமெரிக்காவில் செயல்பட்ட ‘கொலை நிறுவனம்(மர்டர் இன்க்!)’ என்பது(கூலிப்படை?!) ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கொலை செய்து, சுமார் 400 கொலைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. தொடங்கிய இடத்திற்கு வருவோம்! க்ராவிட்டோவுக்கு 1,853 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, 22 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. 1,853 ஆண்டுகளென்றாலும் அது உலகின் மிகநீண்ட சிறைத்தண்டனையல்ல! ஆம்! தாய்லாந்தில் பிரமிட்(எம்எல்எம்) திட்டம் நடத்தி 16,000 பேரை ஏமாற்றிய சாமோய் திப்யாசோ என்ற பெண்மணிக்கு 1989இல் அளிக்கப்பட்ட 1,41,078 ஆண்டுகள்தான் உலகின் மிகநீண்ட சிறைத்தண்டனை! அமெரிக்காவில் டெர்ரி நிக்கோலஸ் என்ற கொலைகாரருக்கு 1995இல் அளிக்கப்பட்ட 161 ஆயுள்தண்டனையுடன், 9,300 ஆண்டுகள் சிறைதான் உலகின் மிகநீண்ட ஆயுள் தண்டனை!
மேக்சிமினஸ், முதலாம் கோர்டியன், இரண்டாம் கோர்டியன், புப்பியனஸ், பால்பினஸ், மூன்றாம் கோர்டியன் என்று ஆறு பேரரசர்களை ரோமப் பேரரசு கண்ட இந்த ஆணடின் ஏப்ரல் 22இல் மூத்த செனட்டர்களான புப்பியனஸ், பால்பினஸ் ஆகிய இருவரும் பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் குடியரசாக இருந்து முடியரசாக மாறிய ரோமில் வழக்கமான முடியரசுகளைப் போலன்றி, செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராணுவத்தின் ஆதரவையும் பெறுபவர்தான் பேரரசராக ஆக முடியும். ரோமின் செல்வமிக்க உயர்குடியான செனட்டோரியல் வர்க்கம், அதற்கடுத்த செல்வந்தர்களான ஈக்வெஸ்ட்ரியன் வர்க்கம் ஆகிய இரண்டுமல்லாமல், பேரரசரான முதல் சாதாரண மனிதர் மேக்சிமினஸ் த்ராக்ஸ்-தான். ஜெர்மானிக் மக்களான கோத்திய இனத் தந்தைக்கும், இரானிய நாடோடிகளான அலானிய இனத் தாய்க்கும் பிறந்தவரான மேக்சிமினஸ், பார்பேரியன்(கிரேக்கர் அல்லாதவர்) என்று வகைப்படுத்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர். இடையராகவும், சட்டத்தை மீறுபவர்களின் தலைவராகவுமிருந்த மேக்சிமினஸ், பின்னர் ராணுவத்தில் சேர்ந்து, நான்காம் இட்டாலிக்கா பிரிவின் தளபதியானார். போரைத் தவிர்ப்பதற்காக, ஜெர்மானிக் பழங்குடியினரான அலெமான்னி-களுக்கு, அப்போதைய ரோமப் பேரரசர் சிவிரஸ் அலெக்சாண்டர் செல்வம் வழங்கியதை ஏற்க முடியாத அவரது படையினரே அவரைக் கொலைசெய்துவிட்டு, ரோமையே பார்த்திராத மேக்சிமினசை 235இல் பேரரசராகத் தேர்ந்தெடுத்தனர். இவ்வாறு, ராணுவத்தின் துணைமட்டுமே கொண்டு ரோமப் பேரரசரானவர்கள் ‘படைவீட்டு பேரரசர்கள்’ என்றழைக்கப்பட்டனர். மேக்சிமினசைப் பிடிக்காத செனட்டர்கள் 238இல், மண்டல ஆளுனரான கோர்டியனைப் பேரரசராகத் தேர்ந்தெடுத்தனர். 80 வயதான அவர் விருப்பமின்றி பொறுப்பேற்றுக்கொண்டு, தன் மகன் இரண்டாம் கோர்டியனை இணைப் பேரரசராக்கினார். 20 நாட்களிலேயே ஒரு போரில் இரண்டாம் கோர்டியன் உயிரிழக்க, முதலாம் கோர்டியன் தற்கொலை செய்துகொண்டார். செனட்டர்களான புப்பியனஸ், பால்பினஸ் ஆகியோரை பேரரசர்களாக செனட் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் ஏற்கவில்லை. அதனால், முதலாம் கோர்டியனின் 13 வயதுப் பேரன் மூன்றாம் கோர்டியன் மற்றோர் இணைப் பேரரசராக்கப்பட்டார். ரோமின் எதிரியாக அறிவிக்கப்பட்ட மேக்சிமினஸ் ரோமை முற்றுகையிட்டபோது படையினராலேயே கொல்லப்பட்டார். 236இல் இணைப் பேரரசராக ஆக்கப்பட்டிருந்த அவர் மகனும் கொல்லப்பட்டார். புப்பியனஸ், பால்பினஸ் இருவரையும் அரண்மனையிலிருந்து நிர்வாணமாக்கி இழுத்து வந்து மக்கள் கொன்றுவிட, 99 நாட்களில் அவர்களது ஆட்சி முடிந்து போனதைத் தொடர்ந்து, முழுப் பேரரசரான மூன்றாம் கோர்டியன் 244வரை ஆட்சியிலிருந்தார்.
மிகெல் தே செர்வாந்தேஸ் காலமான நாள் மிகெல் தே செர்வாந்தேஸ் (Miguel de Cervantes), உலகப் புகழ்பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளரும், ‘டான் கிக்ஸோட்’ (Don Quixote) நாவலின் ஆசிரியருமானவர், அவர் கவிதைகளும் எழுதியுள்ளார். அவரது கவிதைகள், ஸ்பானிஷ் மறுமலர்ச்சி காலத்தின் பாணியில், காதல், வீரம், மற்றும் தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவை. இருப்பினும், அவரது கவிதைகள் அவரது நாவல்களைப் போல பரவலாக அறியப்படவில்லை. மிகெல் தே செர்வாந்தேஸ், தனது அற்புதமான படைப்புகளால் மனித மனங்களை வசீகரித்தவர். ‘டான் கிக்ஸோட்’ நாவல், நவீன இலக்கியத்தின் முதல் முழுமையான படைப்பாகவும், கற்பனையும் யதார்த்தமும் கலந்த ஒரு காவியமாகவும் விளங்குகிறது. அவரது எழுத்துகள், மனித உணர்வுகளையும், சமூகத்தின் நகைமுரண்களையும் ஆழமாக வெளிப்படுத்தின. இன்று, அவரது மறைவு நாளில், செர்வாந்தேஸின் இலக்கியப் பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவரது படைப்புகளை மீண்டும் வாசித்து, அவரது புரட்சிகரமான சிந்தனைகளைப் போற்றுவோம்.
தமிழ் சினிமாவின் தந்தை – சாமிக்கண்ணு வின்சென்ட் நினைவு நாளின்று! இன்று சினிமாவில் கமல், ரஜினி படம் வெளிவருகிறது என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். காரணம், போட்ட பணத்தை ஒரு வாரத்தில் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை. ஆனால், சினிமா என்பது வியாபாரமாக இல்லாத காலத்தில், வியாபாரம் தெரியாதவர்கள் மத்தியில் மக்களிடம் எப்படி சினிமாவை கொண்டு சென்று இருப்பார்கள் என்பதை ஆராய வேண்டிய ஒன்று. 3டி, அரோ 3டி, டிஜிட்டல் என்று பல வகை திரையரங்குகள் இருக்கிறது. ஆனால், ஆரம்பக்காலத்தில் படங்கள் ஓடியது டென்ட் திரையரங்குகளில் தான். அந்த டென்ட் கொட்டையில் படங்களை எடுத்து மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள். ஒவ்வொரு மொழியின் திரைப்படங்களுக்கு ஒரு தந்தையிருக்கிறார். ஆனால், தென்னிந்தியாவில் சினிமாவை திரையரங்கு மூலம் கொண்டு சேர்த்த ஒரு தந்தை இருக்கிறார். அவர் தான் ”சாமிகண்ணு வின்செண்ட்.
எதிர் புரோட்டானைக் (Anti-proton) கண்டறிந்ததற்காக நோபல் பரிசினைப் பெற்ற எமிலியோ ஜி.சேக்ரே நினைவு தினம் எமிலியோ ஜி.சேக்ரே (Emilio Gino Segre) பிப்ரவரி 1, 1905ல் ரோம் நகருக்கு அருகிலுள்ள டிவோலியில் ஒரு செபார்டிக் யூத குடும்பத்தில் பிறந்தார். ஒரு காகித ஆலை வைத்திருந்த தொழிலதிபர் கியூசெப் செக்ரே மற்றும் அமெலியா சுசன்னா ட்ரெவ்ஸ் ஆகியோரின் மகனாவார். அவருக்கு ஏஞ்சலோ மற்றும் மார்கோ என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். அவர் டிவோலியில் உள்ள ஜின்னாசியோவில் கல்வி பயின்றார். மேலும் 1917 ஆம் ஆண்டில் குடும்பம் ரோம் நகருக்குச் சென்ற பிறகு, ஜூலை 1922ல் ரோமில் ஜின்னசியோ மற்றும் லைசோ பட்டம் பெற்றார். ரோம் லா சபீன்சா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவராக சேர்ந்தார். 1927 ஆம் ஆண்டில், செக்ரே ஃபிராங்கோ ராசெட்டியைச் சந்தித்தார். அவரை என்ரிகோ ஃபெர்மிக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டு இளம் இயற்பியல் பேராசிரியர்களும் திறமையான மாணவர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். செப்டம்பர் 1927ல் கோமோவில் நடந்த வோல்டா மாநாட்டில் அவர்கள் கலந்து கொண்டனர். அங்கு நீல்ஸ் போர், வெர்னர் ஹைசன்பெர்க், ராபர்ட் மில்லிகன், வொல்ப்காங் பவுலி, மேக்ஸ் பிளாங்க் மற்றும் எர்னஸ்ட் ரதர்ஃபோர்ட் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க இயற்பியலாளர்களிடமிருந்து செக்ரே சொற்பொழிவுகளைக் கேட்டார். செக்ரே பின்னர் ஃபெர்மி மற்றும் ராசெட்டியுடன் ரோமில் உள்ள ஆய்வகத்தில் சேர்ந்தார். இயற்பியல் நிறுவனத்தின் இயக்குனர், ஓர்சோ மரியோ கார்பினோவின் உதவியுடன், செக்ரே இயற்பியலுக்கு மாற்ற முடிந்தது, மற்றும், ஃபெர்மியின் கீழ் படித்து, ஜூலை 1928ல் ஒழுங்கின்மை சிதறல் மற்றும் காந்த சுழற்சில் தனது லாரியா பட்டத்தைப் பெற்றார். 1928 முதல் 1929 வரை இத்தாலிய இராணுவத்தில் பணியாற்றிய பின்னர், ஆண்டிஆர்கிராஃப்ட் பீரங்கிகளில் இரண்டாவது லெப்டினெண்டாக நியமிக்கப்பட்டார். செக்ரே பாதரசத்திலும் லித்தியத்திலும் ஒழுங்கற்ற சிதறல் குறித்து, தனது முதல் கட்டுரையை வெளியிட்டார். 1930 ஆம் ஆண்டில், செக்ரே சில கார உலோகங்களில் ஜீமன் விளைவைப் படிக்கத் தொடங்கினார். அவர் தொடர வேண்டிய டிஃப்ராஃப்ரக்ஷன் கிரேட்டிங் இத்தாலியில் கிடைக்காததால், அவரது முன்னேற்றம் ஸ்தம்பித்தபோது, அவர் ஐரோப்பாவின் பிற இடங்களில் நான்கு ஆய்வகங்களுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். மேலும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஜீமானின் ஆய்வகத்தில் தனது வேலையை முடிக்க பீட்டர் ஜீமனிடமிருந்து அழைப்பைப் பெற்றார். செக்ரேவுக்கு ராக்ஃபெல்லர் அறக்கட்டளை பெல்லோஷிப் வழங்கப்பட்டது. மேலும் ஃபெர்மியின் ஆலோசனையின் பேரில், ஹாம்பர்க்கில் ஓட்டோ ஸ்டெர்னின் கீழ் படிக்க இதைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளி அளவீட்டில் ஓட்டோ ஃபிரிஷ்சுடன் பணிபுரிவது தற்போதைய கோட்பாட்டுடன் உடன்படாத முடிவுகளை உருவாக்கியது. ஆனால் பொட்டாசியத்தின் அணுசக்தி சுழல் +1/2 ஆக இருந்தால் கோட்பாடு மற்றும் சோதனை ஆகியவை உடன்படுவதாக ஐசிடோர் ஐசக் ரபி காட்டினார். 1943 முதல் 1946 வரை லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் மன்ஹாட்டன் திட்டத்திற்கான குழுத் தலைவராக பணியாற்றினார். புளூட்டோனியம்-240 அசுத்தங்கள் இருப்பதால், முன்மொழியப்பட்ட புளூட்டோனியம் துப்பாக்கி வகை அணு ஆயுதமான தின் மேன் இயங்காது என்பதை ஏப்ரல் 1944 இல் அவர் கண்டறிந்தார். 1946 ஆம் ஆண்டில் பெர்க்லிக்குத் திரும்பிய அவர், 1972 வரை பணியாற்றிய இயற்பியல் மற்றும் அறிவியல் வரலாற்றின் பேராசிரியரானார். செக்ரே மற்றும் ஓவன் சேம்பர்லெய்ன் ஆகியோர் லாரன்ஸ் கதிர்வீச்சு ஆய்வகத்தில் ஒரு ஆய்வுக் குழுவின் இணைத் தலைவர்களாக இருந்தனர். டிசம்பர் 11, 1959ல் எதிர் புரோட்டானைக் (ஆண்டி புரோட்டானை) கண்டறிந்ததற்காக ஓவென் சேம்பர்லெயின் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார். எதிர் புரோட்டானைக் கண்டறிந்த எமிலியோ ஜி. சேக்ரே ஏப்ரல் 22, 1989ல், தனது 84வது அகவையில் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். செக்ரே ஒரு புகைப்படக் கலைஞராகவும் தீவிரமாக இருந்தார். மேலும் நவீன அறிவியல் வரலாற்றில் நிகழ்வுகள் மற்றும் நபர்களை ஆவணப்படுத்தும் பல புகைப்படங்களை எடுத்தார். அவை அவரது மரணத்திற்குப் பிறகு அமெரிக்க இயற்பியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. அமெரிக்க இயற்பியல் நிறுவனம் அதன் நினைவாக இயற்பியல் வரலாற்றின் புகைப்படக் காப்பகத்திற்கு பெயரிட்டது.
லால்குடி ஜெயராமன் காலமான தினமின்று திருச்சி மாவட்டம் லால்குடியில் செப்டம்பர் 17, 1930ல் பிறந்தவர். தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசை அறிஞர் இவர். வயலின் கலைஞர், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர், இசை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். கர்நாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார். லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்க வாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார். அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் ‘லால்குடி பாணி’ எனும் முறையை ஏற்படுத்தினார். அவரது வயலின் வாசிப்பு பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள். அனைத்துவித இசைக்கருவிகளின் தனித் தன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தார். தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள், தில்லானாக்களை இயற்றியுள்ளார். தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா – வேணு – வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார். எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். லால்குடியின் பிரபலமான தில்லானாக்களுக்கு முன்னணி நடன கலைஞர்கள் பலரும் முத்திரை பதிக்கும் அபிநயங்களை விரும்பி வழங்கி நடனக் கச்சேரிகள் செய்துள்ளனர். நாகஸ்வர இசைக் கலைஞர்கள் பலரும்கூட லால்குடியின் தில்லானாக்களை விரும்பி இசைத்துள்ளனர். லால்குடி ஜெயராமனை ‘தில்லானா சக்ரவர்த்தி’ என்றும் அழைத்தனர். பாரத அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். இசையுலகில் பல்வேறு பெருமைக்குரிய லால்குடி ஜெயராமன் 2013 இதே ஏப்ரல் 22ல் காலமானார்.
விளாதிமிர் லெனின் ■ (BIRTHDAY) ● “லெனின்” என்ற பெயரிலேயே உலகம் நன்கறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். இவர் கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக மக்களுக்காக போராடத் தீர்மானித்தார். மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கினார். 1917ல் மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் தனது 54-ம் வயதில் (1924) மறைந்தார். அவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோலியம் என்று பெயர்.
