வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 03)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 3 கிரிகோரியன் ஆண்டின் 93 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 94 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

801 – பிரான்சிய மன்னர் லூயி பயசு மன்னர் பார்செலோனாவை பல ஆண்டுகள் முற்றுகையின் பின்னர் முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.
1505 – இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர்.[1]
1834 – கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.
1885 – விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.
1888 – இலண்டன் ஈஸ்ட் என்ட் பகுதியில் பதினொரு பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1895 – ஆஸ்கார் வைல்டு தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை ஆரம்பமானது, இறுதியில் தற்பால்சேர்க்கை குற்றத்திற்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1917 – வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாதிமிர் லெனின் உருசியா திரும்பினார்.
1922 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
1933 – நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் சப்பானியப் படை அமெரிக்க மற்றும் பிலிப்பீன்சு படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
1948 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் 16 நாடுகளுக்கு $5 பில்லியன் உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டார்.
1948 – தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958 – பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 – உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பவருக்கு மேற்கொண்டார்.
1974 – 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் உயிரிழந்தனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
1975 – அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1981 – உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1982 – போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1996 – ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.
1997 – அல்ஜீரியாவில் தாலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – 2004 மத்ரித் தொடருந்து குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இசுலாமியத் தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
2009 – நியூயார்க்கில் பிங்காம்ப்டன் என்ற இடத்தில் இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.
2016 – 214,488 வணிக நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்டது.
2017 – உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர்.
2018 – கலிபோர்னியா, சான் புரூனோ நகரில் உள்ள யூடியூப் தலைமையலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பிறப்புகள்

1781 – சுவாமிநாராயண், இந்திய மதகுரு (இ. 1830)
1783 – வாசிங்டன் இர்விங், அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1859)
1841 – எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர் (இ. 1907)
1903 – கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1988)
1904 – ராம்நாத் கோயங்கா, இந்தியப் பத்திரிகையாளர் (இ. 1991)
1907 – சிதம்பரநாதன் செட்டியார், தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (இ. 1967)
1914 – சாம் மானேக்சா, இந்தியப் படைத்துறை உயர் தளபதி (இ. 2008)
1924 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (இ. 2004)
1929 – பச்லுர் ரகுமான் கான், வங்காளதேசக் கட்டிடக் கலைஞர் (இ. 1982)
1930 – எல்முட் கோல், செருமனிய அரசுத்தலைவர் (இ. 2017)
1934 – குட்டால், ஆங்கிலேய முதனியியலாளர், மானிடவியலாளர்
1949 – ராம நாராயணன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2014)
1950 – இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் பொருளியலாளர், மத்திய வங்கி ஆளுநர்
1951 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (இ. 2015)
1954 – க. கிருஷ்ணசாமி, இந்திய மருத்துவர், அரசியல்வாதி
1955 – அரிகரன், இந்தியப் பாடகர்
1956 – மோகன் ராமன், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
1961 – எடி மர்பி, அமெரிக்க நடிகர்
1962 – ஜெயபிரதா, இந்திய நடிகை, அரசியல்வாதி
1973 – ஆடம் ஸ்காட், அமெரிக்க நடிகர்
1973 – பிரபுதேவா, தென்னிந்திய நடிகர், நடன அமைப்பாளர்
1976 – உல்ரிகா பாபியாகோவா, சுலோவாக்கிய வானியலாளர், சிறுகோள் கண்டுபிடிப்பாளர் (இ. 2002)
1982 – கோபி ஸ்மல்டேர்ஸ், கனடிய நடிகை
1983 – சிரேயா ரெட்டி, தென்னிந்திய நடிகை
1986 – அமாண்டா பைன்ஸ், அமெரிக்க நடிகை

இறப்புகள்

1325 – ஹசரத் நிஜாமுதீன், சூஃபி அறிஞர் (பி. 1238)
1680 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1630)
1897 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1833)
1981 – ஔவை துரைசாமி, தமிழகத் தமிழறிஞர் (பி. 1903)
1991 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1904)
1992 – எஸ். எஸ். ராமசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1918)
1998 – மேரி கார்ட்ரைட், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1900)
2013 – ரூத் பிராவர் ஜாப்வாலா, செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1927)
2017 – கிஷோரி அமோன்கர், இந்தியப் பாடகர் (பி. 1931)

சிறப்பு நாள்

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!