சசிகுமார் நடித்து வரும் புதிய படத்தில் சத்யராஜ் மற்றும் பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
‘உடன்பிறப்பே’ மற்றும் ‘நந்தன்’ ஆகிய படங்களில் இரா.சரவணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் குரு. தற்போது சசிகுமார் நடிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சசிகுமாருடன் சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தை ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர். சதீஷ் குமார், இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.