‘தினம் தினம் திருநாளே!‘ தினப்பலன் மார்ச் 09–ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். திறம்பட அறிந்து உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும். தியானம் மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இன்று பணியில் வெற்றி காண்பீர்கள். சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.அதனை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று வரவும் செலவும் இனைந்து காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். தேக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். இதனால் சிறந்த ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.
ரிஷப ராசி அன்பர்களே!
முன்னுரிமைப்படி செயல்களை செய்வதற்கு மனதில் தெளிவு கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்களைச் செய்து வளர்ச்சி காண்பீர்கள். பணியில் புதிய வாய்ப்புகள் உற்சாகத்தை அளிக்கும். உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள். நிதி விஷயங்கள் இன்று சிறப்பாக காணப்படும். உங்களால் சேமிக்க இயலும். இன்று ஆரோக்கியப் பிரச்சனை காணப்படாது. இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
மிதுன ராசி அன்பர்களே!
நீங்கள் வெளிப்படையாகவும் விஷயங்களை லேசாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அனுசரனையான போக்கை மேற்கொள்ள வேண்டும்.அமைதியாக இருங்கள்.அனைத்தும் நல்லபடியாக நடக்கும். இன்று கவனமுடன் பணியாற்றுங்கள். கவனச் சிதறலுக்கு இடம் அளிக்காதீர்கள். அதிகப்படியான செலவுகள் கவலையை அளிக்கும். நீங்கள் சிறப்பாக சேமிக்க ஒரு திட்டத்தை அமைத்துப் பின்பற்ற வேண்டும். இன்று வயிறு உப்பசம் ஏற்படலாம். உங்கள் உணவில் கவனம் செலுத்தவும்.
கடக ராசி அன்பர்களே!
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்று, நீங்கள் நெருங்கிய ஒருவருடன் சண்டையிடலாம் மற்றும் விஷயம் நீதிமன்றத்திற்கு செல்லலாம். இதன் காரணமாக உங்கள் பணம் செலவாகக்கூடும். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். இன்று, உங்கள் ஓய்வு நேரத்தை தேவையற்ற சிக்கல்களிலிருந்து விலகி எந்த கோவிலிலும், குருத்வாராவிலும் அல்லது எந்த மத இடத்திலும் செலவிடலாம். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். கடிகாரத்தின் ஊசிகள் மிக மெதுவாக நகர்ந்து நீங்கள் நீண்ட நேரம் படுக்கையில் இருக்கும் அந்த சில நாட்களைப் போன்றது இன்று. ஆனால் இதற்குப் பிறகு நீங்கள் புத்துணர்ச்சி அடைவீர்கள், உங்களுக்கு இது நிறைய தேவை.
சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் முடிவுகளை செயலாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள், மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி விடுங்கள்.உங்கள் முடிவுகளை, கவனமாக திட்டமிட்டு செயலாற்றுவது நன்மை தரும். உங்கள் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். இன்று நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். உங்கள் துணையை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. இன்று அதிர்ஷ்டமான நிதிநிலைமை இருக்காது. அது உங்களுக்கு கவலையாக இருக்கும். மனதில் காணப்படும் உற்சாகம் காரணமாக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
கன்னி ராசி அன்பர்களே!
இன்று உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.பிறரிடம் உரையாடும் போது கவனித்து உரையாட வேண்டும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிக்கலான பணிகளையும் கவனமாகவும் எளிதாகவும் கையாள்வீர்கள். இன்று உங்கள் வளர்ச்சி உறுதி. உங்களிடம் காணப்படும் பணம் போதுமானதாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். அவநம்பிக்கை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இதனால் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
துலா ராசி அன்பர்களே!
உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். அதற்கான நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் பணியில் மாறுதல்கள் நேரலாம். இன்று பணிகள் அதிகமாக இருக்கும். நீங்கள் பணியில் மும்மரமாக செயல்படுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள். உங்களின் சிறந்த உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். நிதி சம்பந்தமான பிரச்சினைகள் பாதிப்பை ஏற்படுத்தாது. நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. கால் வலியால் அவதிப்பட நேரும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். உங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை பாதிக்கும் பதட்டத்தை கைவிடுங்கள். இலக்குகளை அடைவதற்கும் வெற்றியைப் பெறுவதற்கும் முறையாக திட்டமிடவேண்டியது அவசியம். .திருமண திட்டங்கள் பற்றிய உரையாடல்களை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப்போடுங்கள். இன்று காதலுக்கு ஏற்ற நாள் அல்ல. பணத்தை கவனமாக கையாள வேண்டும். பண இழப்பு அல்லது பணம் திருடு போகலாம். உங்கள் தாயின் உடல் நிலை பற்றி கவலைப்படுவீர்கள். அந்த வகையில் செலவுகள் ஏற்படலாம்.
தனுசு ராசி அன்பர்களே!
இன்று சிறந்த நாளாக இருக்காது. அசௌகரியங்கள் காணப்படும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியில் உங்கள் நேர்மை பாராட்டைப் பெரும். உங்கள் துணையுடன் தேவையற்ற மோதல்கள் ஏற்படலாம். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும் இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. தேவையற்ற செலவுகளை கண்காணிக்கவும். இன்று அஜீரணம் மற்றும் வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உண்ணும் உணவில் கவனம் கொள்ளுங்கள்.
மகர ராசி அன்பர்களே!
இன்று வளர்ச்சி காணப்படும் நாள். உங்கள் சுய முயற்சி மூலம் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சூழ்நிலையை திறமையாக கையாண்டு சவால்களை சமாளிக்க வேண்டும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டு மகிழ்வீர்கள். உங்கள் அணுகுமுறை உங்கள் பிரியமானவரின் பாராட்டைப் பெறும். நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படுகின்றது. நீங்கள் கணிசமாக சேமிப்பீர்கள். கால் வலி மற்றும் தொடை வலி தவிர வேறு எந்த ஆரோக்கியப் பிரச்சினையும் இருக்காது. என்றாலும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பராசி அன்பர்களே!
விரக்தியான மன நிலையை தவிர்த்துவிட்டு மனதை மகிழ்ச்சியாக, அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள் பணியில் கூடுதல் சுமைகள் காணப்படும். பணியிடச் சூழல் மகிழ்ச்சியை அளிக்காது. இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பண வளர்ச்சி குறைந்து காணப்படும். பணம் சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள். பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மியை தவிர்த்திடுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
மீனராசி அன்பர்களே!
இன்று விவேகத்துடன் யோசித்து செயல்பட வேண்டும். கடந்த காலத்தைப் பற்றிய யோசனையைத் தவிர்க்க வேண்டும். சாதகமற்ற சூழ்நிலையையும் சமாளித்து அதனை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம். எனவே திட்டமிட்டு பணியாற்றுங்கள். அதிகரிக்கும் பணிச்சுமை காரணமாக வேறு வேலை தேடுவீர்கள். இன்று நீங்கள் காதலை எளிதாக எடுத்துக்கொள்வீர்கள். இதனால் உங்கள் துணையுடன் சுமுகமான உறவு காணப்படும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம். இன்று ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். என்றாலும், ஆரோக்கியத்தில் சில அசௌகரியங்கள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.