வரலாற்றில் இன்று (மார்ச் 05)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 5 கிரிகோரியன் ஆண்டின் 64 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 65 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

363 – உரோமைப் பேரரசர் யூலியன் அந்தியோக்கியாவில் இருந்து 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான்.
1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.
1616 – 73 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் பரலோகக் கோளங்களின் சுழற்சி என்ற நூல் தடைசெய்யப்பட்ட ஆவணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் அறிவிக்கப்பட்டது.
1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.
1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.
1836 – சாமுவேல் கோல்ட் 34-கேலிபர் சுழல் கைத்துப்பாக்கிக்கான காப்புரிமம் பெற்றார்.
1857 – கொழும்பு கோட்டையில் தற்போதும் இயங்கும் மணிக்கூட்டுக் கோபுரம் (பழைய கலங்கரை விளக்கம்) கட்டி முடிக்கப்பட்டது.[1]
1906 – மோரோ கிளர்ச்சி: அமெரிக்க இராணுவம் பழங்குடி மோரோ மகளின் கிளர்ச்சியை அடக்க பெருமளவு படையினரை புட் டாஜோ பகுதியில் குவித்தது. இத்தாக்குதல்களில் ஆறு பழங்குடியினர் மட்டுமே உயிர் தப்பினர்.
1912 – இத்தாலிய-துருக்கியப் போர்: இத்தாலியப் படையினரே முதன் முதலாக வான்கப்பல்களை படைத்துறைத் தேவைக்காகப் பயன்படுத்தினர்.
1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.
1933 – செருமானியத் தேர்தலில் இட்லரின் நாட்சி கட்சி 43.9% வாக்குகளைப் பெற்றது.
1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் இடச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் தலைநகரான பத்தேவியாவைக் கைப்பற்றினர்.
1946 – பனிப்போர்: வின்ஸ்டன் சர்ச்சில் மிசூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது “இரும்புத் திரை” என்ற பதத்தைப் பயன்படுத்தினார்.
1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.
1960 – இந்தோனேசிய அரசுத்தலைவர் சுகர்ணோ 1955 ஆ ஆண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து, தானே தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றத்தை அறிவித்தார்.
1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
1965 – பகுரைனில் பிரித்தானியக் குடியேற்றவாதிகளுக்கு எதிரான இடதுசாரிக் கிளர்ச்சி இடம்பெற்றது.
1970 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 43 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்தது.
1974 – யோம் கிப்பூர்ப் போர்: இசுரேலியப் படையினர் [[சுயஸ் கால்வாய்|சூயசு கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து பின்வாங்கினர்.
1979 – சோவியத் விண்கலங்கள் வெனேரா 11, வெனேரா 12, மற்றும் செருமனிய-அமெரிக்க விண்கலம் ஈலியோசு II ஆகியவற்றை காமா கதிர் வெடிப்பு தாக்கியது.
1981 – ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.
1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.
1998 – இலங்கை தலைநகர் கொழும்பில் மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பேருந்துக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் வரை கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.[2][3]
2003 – கைஃபா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 இசுரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
2012 – மடகாசுகரை இரீனா என்ற வெப்பவலயச் சூறாவளி தாக்கியதில் 75 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1512 – கிரார்துசு மெர்காதோர், பிளமிய கணிதவியலாளர், நிலப்படவியலாளர், மெய்யியலாளர் (இ. 1594)
1871 – ரோசா லக்சம்பேர்க், போலந்து-உருசியப் பொருளியலாளர், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)
1898 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (இ. 1976)
1913 – கங்குபாய், இந்துத்தானி இசைப் பாடகி (இ. 2009)
1916 – பிஜு பட்நாயக், இந்திய அரசியல்வாதி (இ. 1997)
1931 – கே. ஏ. சுப்பிரமணியம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1989)
1934 – டேனியல் கானமென், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய-அமெரிக்கப் பொருளியலாளர்
1938 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2011)
1958 – நாசர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1959 – சிவ்ராஜ் சிங் சௌஃகான், மத்தியப் பிரதேச முதலமைச்சர்
1976 – செல்வராகவன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
1984 – ஆர்த்தி அகர்வால், இந்திய திரைப்பட நடிகை (இ. 2015)

இறப்புகள்

254 – முதலாம் லூசியஸ் (திருத்தந்தை) (பி. 200)
1827 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1749)
1827 – வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1745)
1903 – உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)
1953 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1878)
1966 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (பி. 1889)
1994 – வ. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1930)
2006 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1926)
2013 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர், தமிழறிஞர் (பி. 1936)
2013 – ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (பி. 1954)
2013 – ராஜசுலோசனா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1935)
2013 – க. பொ. இளம்வழுதி, புதுவை எழுத்தாளர் (பி. 1936)

சிறப்பு நாள்

மர நாள் (ஈரான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!