வரலாற்றில் இன்று (பிப்ரவரி 08)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 8 (February 8) கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

421 – மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார்.

1238 – மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர்.

1347 – பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது.

1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.

1601 – முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது.

1785 – வாரன் ஏசுடிங்சு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் பதவியைத் துறந்தார்.[1]

1817 – லாசு எராசு தனது படையுடன் அந்தீசு மலையைக் கடந்து சான் மார்ட்டினுடன் இணைந்து சிலியை எசுப்பானியாவிடம் இருந்து விடுவித்தார்.

1879 – சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது.

1885 – முதலாவது அரச-ஆதரவுடனான சப்பானியக் குடியேற்றம் அவாயில் ஆரம்பமானது.

1904 – அச்சே போர்: டச்சு குடியேற்ற இராணுவம் வடக்கு சுமாத்திராவின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது. இது அங்கு இனப்படுகொலையில் முடிந்தது.

1904 – சப்பானியரின் நீர்மூழ்கிக் குண்டு ஒன்று சீனாவின் லூசென்கோ நகரைத் தாக்கியது. உருசிய-சப்பானியப் போர் ஆரம்பமானது.

1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சிங்கப்பூரை ஊடுருவியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: டச்சு இராணுவத்தினர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் நகரை சப்பானியர் கைப்பற்றுவதைத் தடுக்க அந்நகரை தீயிட்டுக் கொளுத்தினர்.

1942 – செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி செருமனியில் இருந்து தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவும் கனடாவும் ரைன் ஆற்றின் மேற்குக் கரையைக் கைப்பற்றும் நோக்குடன் வெரிடபிள் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தித் தப்பினர்.

1955 – பாக்கித்தானின் சிந்து மாகாண அரசு நில மானிய முறைமையை ஒழித்தது.

1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

1960 – இரண்டாம் எலிசபெத் மகாராணி விடுத்த அறிவிப்பு ஒன்றில், அவரும் அவரது குடும்பமும் வின்சர் மாளிகை என அழைக்கப்படுவர் எனவும், அவரது வழித்தோன்றல்கள் மவுன்ட்பேட்டன்-வின்சர் என அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

1963 – அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்வது, மற்றும் கியூபாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியன சட்டவிரோதம் என ஜான் எஃப். கென்னடியின் நிருவாகம் அறிவித்தது.

1963 – ஈராக்கில் அப்து அல்-கரீம் காசிம் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.

1965 – அமெரிக்காவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்சு விமானம் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 84 பேரும் உயிரிழந்தனர்.

1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1974 – 84 நாட்கள் விண்ணில் பயணம் செய்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

1974 – மேல் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1981 – கிரேக்கத்தில் 21 கால்பந்து விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 21 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 55 பேர் காயமடைந்தனர்.

1983 – ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைப் பெரும் புழுதிப் புயல் தாக்கியதில், 320 மீட்டர் புழுதி மேகம் நகரில் தோன்றியது.

1986 – கனடாவின் இண்டன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் இறந்தனர்.

2005 – இசுரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

2010 – ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர்.

2014 – மதீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 15 எகிப்தியர்கள் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1641 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720)

1700 – டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1782)

1819 – ஜான் ரஸ்கின், ஆங்கிலேய எழுத்தாளர், ஓவியர் (இ. 1900)

1825 – என்றி வால்டர் பேட்ஃசு, ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர், நாடுகாண் பயணி (இ. 1892)

1828 – ழூல் வேர்ண், பிரான்சியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1905)

1834 – திமீத்ரி மெண்டெலீவ், உருசிய வேதியியலாளர் (இ. 1907)

1850 – கேட் சோப்பின், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1904)

1897 – சாகீர் உசேன், இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 1969)

1903 – துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் முதலாவது பிரதமர் (இ. 1990)

1921 – மு. மு. இஸ்மாயில், தமிழக நீதியரசர், தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 2005)

1928 – லூசு மோகன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2012)

1928 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத் உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2009)

1937 – ஏ. எச். எம். அஸ்வர், இலங்கை அரசியல்வாதி (இ. 2017)

1941 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (இ. 2011)

1955 – ஜான் கிரிஷாம், அமெரிக்க எழுத்தாளர்

1960 – பெனிக்னோ அக்கீனோ III, பிலிப்பீன்சின் 15வது அரசுத்தலைவர்

1963 – முகமது அசாருதீன், இந்தியத் துடுப்பாளர், அரசியல்வாதி

1964 – சந்தோஷ் சிவன், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்

1968 – கேரி கோல்மன், அமெரிக்க நடிகர் (இ. 2010)

இறப்புகள்

1265 – உலேகு கான், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1218)

1587 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542)

1725 – முதலாம் பேதுரு, உருசியப் பேரரசர் (பி. 1672)

1957 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1891)

1957 – ஜான் வான் நியுமேன், அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)

1971 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1887)

1974 – பிரிட்சு சுவிக்கி, சுவீடன் வானியலாளர் (பி. 1898)

1979 – டென்னிஸ் கபார், நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1900)

1993 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, இடதுசாரி மாவோயிச அரசியல்வாதி (பி. 1920)

1998 – ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின், நோபல் பரிசு பெற்ற ஐசுலாந்து எழுத்தாளர் (பி. 1902)

2005 – அரியநாயகம் சந்திரநேரு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர்

2007 – ஆன்னா நிக்கோல் இசுமித், அமெரிக்க நடிகை (பி. 1967)

2007 – இயான் ஸ்டீவன்சன், கனடிய-அமெரிக்க உளவியல் மருத்துவர் (பி. 1918)

2014 – பிரேம்ஜி ஞானசுந்தரம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் (பி. 1930)

சிறப்பு நாள்

பரிநிர்வாண நாள் (மகாயான பௌத்தம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!