மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல்..!

 மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல்..!

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது.ஆண்டின் முதல் தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியாண்டின் முதல் பாதியில் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ப்பட்டதை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...