வரலாற்றில் இன்று (ஜனவரி 23)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 23 (January 23) கிரிகோரியன் ஆண்டின் 23 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 342 (நெட்டாண்டுகளில் 343) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

393 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார்.

1368 – சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.

1556 – சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

1570 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1579 – நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது.

1719 – புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது.

1750 – அழகுமுத்துக்கோன் கட்டாலங்குள மன்னராக முடிசூட்டிக்கொண்டு எட்டயபுரம் பாளையத்தை ஆட்சி செய்தார்.

1789 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1793 – உருசியாவும் புருசியாவும் போலந்தைப் பிரித்தன.

1816 – கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கனும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[1]

1833 – போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.

1846 – தூனிசியாவில் அடிமை வணிகம் ஒழிக்கப்படட்து.

1870 – அமெரிக்கா, மொன்ட்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 அமெரிக்கப் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர்.

1874 – விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் உருசியாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.

1899 – முதலாவது பிலிப்பீன் குடியரசு நிறுவப்பட்டது. எமிலியோ அகுயினால்டோ அதன் முதலாவது அரசுத்தலைவராகத் தெரிவானார்.

1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகளுக்கு எதிரான சமரில் தென்னாபிரிக்கக் குடியரசு, ஆரஞ்சு விடுதலைப் படைகள் வென்றன.

1924 – விளாதிமிர் லெனின் சனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1937 – லியோன் திரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஆட்சிக்குட்பட்ட நியூ கினி மீதான சப்பானிய முற்றுகை ஆரம்பமானது.

1943 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாட்சிகளிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது.

1950 – இசுரேலின் சட்டசபை எருசலேமை இசுரேலின் தலைநகராக அறிவித்தது.

1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1958 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அதன் அரசுத்தலைவர் மார்க்கோசு சிமேனசு நாட்டை விட்டு வெளியேறினார்.

1963 – கினி-பிசாவு விடுதலைப் போர் ஆரம்பமானது.

1973 – வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.

1996 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1998 – யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

2003 – பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசித் தடவையாக மிகவும் மெலிதான சமிக்கை கிடைத்தது.

2005 – திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.

2018 – அலாஸ்கா வளைகுடாவில் 7.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது. ஆனாலும் பெரும் சேதம் ஏற்படவில்லை.

பிறப்புகள்

1814 – அலெக்சாண்டர் கன்னிங்காம், பிரித்தானியத் தொல்லியலாளர், படைத்துறைப் பொறியாளர் (இ. 1893)
1832 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (இ. 1883)
1833 – முத்து குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1879)
1838 – மேரியான் கோப், செருமானிய-அமெரிக்கக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1918)
1862 – டேவிடு இல்பேர்ட்டு, உருசிய-செருமானியக் கணிதவியலாளர் (இ. 1943)
1869 – எர்பெர்ட்டு குரோலி, அமெரிக்க கல்வியாளர், இதழாளர் (இ. 1930)
1893 – ஆர். அனந்த கிருஷ்ணர், ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (இ. 1979)
1894 – ஜோதிர்மாயி தேவி, இந்திய எழுத்தாளர் (இ. 1988)
1897 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1945)
1907 – ஹிடேகி யுகாவா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர் (இ. 1981)
1926 – பால் தாக்கரே, இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 2012)
1930 – டெரெக் வால்காட், நோபல் பரிசு பெற்ற செயிண்ட் லூசிய எழுத்தாளர் (இ. 2017)
1971 – நிரோஷா, தென்னிந்திய திரைப்பட நடிகை
1983 – நாரா லோகேசு, இந்திய அரசியல்வாதி
1984 – விமலா ராமன், தெனிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1622 – வில்லியம் பாஃபின், ஆங்கிலேய நாடுகாண் பயணி (பி. 1584)
1744 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1668)
1791 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய கிறித்தவ மதப் போதகர், தமிழறிஞர் (பி. 1711)
1944 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (பி. 1863)
1966 – த. மு. சபாரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, சட்டவறிஞர் (பி. 1895)
1967 – அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், கருநாடக இசை வித்துவான் (பி. 1890)
1975 – தியடோர் சாமர்வெல், ஆங்கிலேய மருத்துவர், மலை ஏற்ற வீரர், ஓவியர் (பி. 1890)
1975 – பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார், இலங்கையில் வீரகேசரி நாளிதழைத் தொடங்கியவர். (பி. 1901)
1989 – சால்வதோர் தாலீ, எசுப்பானிய ஓவியர் (பி. 1904)
2002 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மானிடவியலாளர் (பி. 1930)
2002 – ரோபேர்ட் நோசிக், அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1938)
2014 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (பி. 1953)
2015 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (பி. 1924)
2015 – இரா. இளவரசு, தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1939)
2017 – யாரொசுலாவ் வாச்செக், செக் தமிழறிஞர், இந்தியவியலாளர் (பி. 1943)

சிறப்பு நாள்

சுபாசு சந்திர போசு ஜெயந்தி (ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்காளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!