“கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா!
நேற்று (20.1.2025) சென்னை,கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருமதி ஜெயலட்சுமி அர்ஜுனன் அவர்கள் எழுதிய “கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் அவர்கள், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திரு பி. சந்தோஷ் அவர்கள், தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர்கள் திருமதி யாஸ்மின் பேகம் அவர்கள், திருமதி செந்தில்குமாரி அவர்கள், தொழிலாளர் துறை இணை ஆணையர் திரு ரமேஷ் அவர்கள், கவிஞர்/ எழுத்தாளர்/ பட்டிமன்ற நடுவர் முனைவர் இதயகீதம் ராமானுஜம் அவர்கள்,
எழுத்தாளர்/ பிம்பம் பப்ளிகேஷன் உரிமையாளர் திருமதி லதா சரவணன் அவர்கள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வி ரோஷன் ராஜன் அவர்கள், குழந்தைகள் நலக்குழு தலைவர் பேராசிரியர் மோகன் தாஸ் அவர்கள், பேராசிரியர் கி.ஈஸ்வரி அவர்கள், மருத்துவர் மதிவாணன் அவர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.