இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி- 21)
விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் மறைந்த நாளின்று
எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில் வாடிக் கிடப்பார்கள். ரஷியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான் துன்பத்தில் உழன்றனர்.இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில் 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாக தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான் உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது.
மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது. இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரஷ்ய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார். இதனால் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில் அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத் தொழிலாளர்களைக் கண்ணீர் சிந்த வைத்தது.
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமான தினமின்று
’உன்னால் முடியும் தம்பி’ உள்ளிட்ட இளைஞர்களின் சுயமுன்னேற்றத்திற்கு உதவும் பல்வேறு நூல்களை எழுதிய மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 80.
இவர் ‘சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’.உன்னால் முடியும் தம்பி’ உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர். இதன் மூலம் எக்கச் சக்கமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்வியேப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன.
மிருணாளினி சாராபாய் காலமான நாள்
ஜனவரி 21 இந்தியாவின் பிரபலமான ஒரு நடனக் கலைஞர், பயிற்றுனர் மற்றும் நடன இயக்குனர் என்ற பன்முகங்கள் கொண்டவர் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் நடனம், நாடகம், இசை மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றுக்கான “தர்பனா நிகழ்த்துக் கலைக் கழகம்” என்ற இசைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் மிருணாளினி 18,000 நபர்களுக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.. முந்நூறுக்கும் மேற்பட்ட நடன நாடகங்களை நடனம் அமைத்து இயக்கியதை தவிர, மிருணாளினி குழந்தைகளுக்கான பல புதினங்கள், கவிதை, நாடகங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார். குஜராத் மாநில கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். காந்திய கொள்கைகளை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு அமைப்பான சர்வோதயா சர்வதேச அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் மிருணாளினி செயல்பட்டார். மேம்பாட்டுக்கான நேரு அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தார் . மிருணாளினியின் சுயசரிதையானது மிருணாளினி சாரபாய்: இதயத்தின் குரல் என்ற பொருள் கொண்ட “மிருணாளினி சாரபாய்: தி வாய்சு ஆஃப் தி ஆர்ட்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. Her autobiography is titled Mrinalini Sarabhai: The Voice of the Heart. கலைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்மஸ்ரீ , பத்மபூசண் உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன
ராஷ் பிஹாரி போஸ் காலமான நாள்
ஜனவரி 21 நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான வாழ்க்கை. ”டில்லி சலோ” என்ற முழக்கத்துடன் ஆசாத் ஹிந்த் அரசு அமைத்து போர்ப்படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியும் ராஷ் பிஹாரி போஸ் தான். ஜப்பான் அரசு ராஷ் பிஹாரி போஸின் வீரத்தை மெச்சி, அவருக்கு மறைவுக்குப் பிந்தைய ‘ORDER OF RISING SUN ‘ என்ற உயர் விருதை வழங்கி கௌரவித்தது.