‘டைமிங் காமெடியில் எஸ்.வி சேகருக்கு இணை யாருமில்லை’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ஒரே கல்லில் பல ( பலே ) மாங்காய்கள் டைமிங் காமெடியில் எஸ்.வி சேகருக்கு இணை யாருமில்லை
– இதைச் சொன்னவர் நமது தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்
எஸ்.வி.சேகரின் நாடகப்ரியா குழுவின் 7000மாவது நாடக நிகழ்ச்சி, நடிகர் தயாரிப்பாளர் , சமூக சேவகர் , இரத்த தானக் கொடையாளர் திரு எஸ்..வெங்கட்ராமனின் (சேகரின் தந்தை) 100வது பிறந்த தினம் , எஸ்.வி சேகரின் 75வது பிறந்த தினம் ,நாடகப்ரியாவின் 50 ஆவது ஆண்டு விழா அனைத்தையும் ஒரே மேடையில் எளிமையான முறையில் நடத்தி ஆச்சர்யபடுத்தினார் திரு எஸ்.வி.சேகர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை மாண்புமிகு முதல்வர் .
அமைச்சர்கள் திரு துரைமுருகன், திரு சுவாமிநாதன் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு வேலு ஆகியோரும் வந்திருந்தனர்.
பிரம்மாண்டமான மேடை அமைப்போ ,, வண்ண வண்ண சுவரொட்டிகளோ .. பெரிய பெரிய பதாகைகளே இல்லாமல் இயல்பான விழாவாக அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.
குறித்த நேரத்திற்கு முதல்வர் வருகையும் , கெடுபிடிகள் இல்லாத வரவேற்பும் , சபாஷ் போட வைத்தன.
முதல்வர் பார்க்க வேண்டும் என்பதற்காக சில நாட்கங்களில் இருந்து சின்ன சின்ன காட்சிகள்.
ஆனால் அனைத்திலும் இன்றைய அரசியலை நுழைத்ததுதான் சேகரின் டிரேட் மார்க் யுக்தி
நீங்க பி.எம் தான். ஆனா தமிழ்நாட்டிலே எல்லாமே சி.எம் தான் என்ற டயலாக் டாப் .
சின்னம்மா , எடப்பாடி சாட்டையடி ,தேசிய கீதம் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை எல்லாவற்றையும் கிடைத்த 10 நிமிட இடைவெளியில் அசால்டாக அள்ளித் தெளித்து முதல்வர் முகத்தில் புன்னகையைத் தவழவிட்டார்.
வரவேற்புரையில் கலைஞருக்கும் முதல்வருக்கும் அப்படியொரு பாராட்டு ஆனால் .. அதில் செயற்கைத்தனமோ திணிப்போ இல்லாதது எஸ்.வி சேகரின் சாதுர்யம்தான்.
தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் வசித்தத் தெருவிற்கு அவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ரிஷப் பண்ட் ஒற்றைக் கையால் அடிக்கும் சிக்ஸர் மாதிரி அடித்தார்.
முதல்வரும் இன்று எஸ்.வி சேகரின மூடுக்கு (mode) க்கு மாறி .. நாங்க எல்லாம் ஒண்ணு என்று சொல்லி நிறுத்தி .. கலைஞர்களாக நாங்கள் எல்லாம் ஒன்று என்று சொல்லி அரங்கத்தை அதிர வைத்தார். சேகரின் டைமிங் காமெடிக்கு இணை யாருமில்லை .. அவர் எந்தக் கட்சியிலும் இப்போ இல்லை ஆனா இப்போ நம்ம கட்சி .. அதாங்க கலைஞர்களின் கட்சி இவரின் சேவை 2026 க்கு தேவை என்று மீண்டும் சூசகமாக சொன்னார்.
அவரது கோரிக்கையை நான் நிறைவேற்றுகிறேன் .. எனது கோரிக்கையை அவர் கவனிக்க வேண்டும் என்று பொடி வைத்துப் பேசி ரசிக்க வைத்தார்.
விழாவின் ஹைலைட் .. தன்னை மட்டும் பாராட்டிக் கொள்ளாமல் .. தன்னுடன் பயணப் பட்ட அத்தனை கலைஞர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதல்வரின் கையால் விருது வழங்கியது தான்.
எஸ்.வி.சேகரின் மகன் திரு அஸ்வின் சேகர் சொன்னது போல் .. “எஸ்.வி.எஸ் இஸ் ஆல்வேஸ் ஒன் மேன் ஆர்மிதான்.”
நாடகப்ரியாவின் பயணம் தொடர .. எஸ்.வி” சேகரின் அடுத்தக் கட்ட பணிகளும் வெற்றி பெற உரத்த சிந்தனையுடன் வாழ்த்துகள்