வரலாற்றில் இன்று (14.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 14 (January 14) கிரிகோரியன் ஆண்டின் 14 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1236 – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார்.
1301 – அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார்.
1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது.
1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1814 – கீல் உடன்பாடு: நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
1858 – பிரான்சு மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1865 – இலங்கையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.[1]
1907 – ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913 – கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1953 – யோசிப் டீட்டோ யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
1969 – அவாயிற்கு அருகில் எண்டர்பிரைசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் தற்செயலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – டென்மார்க் அரசியாக இரண்டாம் மார்கிரெத் முடிசூடினார். 1412 இற்குப் பின்னர் முடிசூடும் முதலாவது டென்மார்க் மகாராணி இவராவார்.
1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1993 – போலந்தில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 55 பேர் உயிரிழந்தனர்.
1994 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
1995 – சந்திரிகா அரசு – விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1998 – ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
2000 – 1993 இல் நூற்றுக்கும் அதிகமான பொசுனிய முசுலிம்களைப் படுகொலை செய்தமைக்காக ஐந்து பொசுனிய பொசுனிய குரொவாசியர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை 25 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
2005 – சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.
2011 – துனீசியப் புரட்சி: தூனிசியாவின் அரசுத்தலைவர் பென் அலி சவூதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். அரேபிய வசந்தம் ஆரம்பமானது.
2015 – திருத்தந்தை பிரான்சிசு யோசப் வாசு அடிகளை கொழும்பில் புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.

பிறப்புகள்

1551 – அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் ஆலோசகர் (இ. 1602)
1741 – பெனடிக்ட் ஆர்னோல்டு, அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளபதி (இ. 1801)
1866 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், ஆர்மீனிய ஆன்மீகவாதி (இ. 1949)
1875 – ஆல்பர்ட் சுவைட்சர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1965)
1887 – கோ. நடேசய்யர், இலங்கை மலையகத் தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 1947)
1915 – ஹொன்னப்ப பாகதவர், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர் (இ. 1992)
1917 – க. வெள்ளைவாரணனார், தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (இ. 1988)
1918 – கே. முத்தையா, தமிழக விடுதலைப் போராட்ட வீரர், இடதுசாரி, எழுத்தாளர் (இ. 2003)
1920 – ஆர். கே. ஸ்ரீகண்டன், தென்னிந்தியக் கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)
1926 – மகாசுவேதா தேவி, வங்காள எழுத்தாளர் (இ. 2016)
1934 – நா. சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
1936 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர் (இ. 2013)
1937 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)
1938 – டி. செல்வராஜ், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
1943 – ரால்ஃப் ஸ்டைன்மன், கனடிய நோய்த்தடுப்பாற்றல் மருத்துவர், உயிரியலாளர் (இ. 2011)
1946 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
1950 – ச. முருகானந்தன், இலங்கை எழுத்தாளர், மருத்துவர்
1950 – ராமபத்ராச்சார்யா, இந்திய மதகுரு
1951 – ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசியல்வாதி, அரசியல்வாதி
1960 – ஜெ. வீரநாதன், தமிழக எழுத்தாளர்
1960 – சு. கமலா, மலேசிய எழுத்தாளர்
1963 – இசுட்டீவன் சோடர்பர்க், அமெரிக்க இயக்குநர்
1965 – ஷமீல் பசாயெவ், செச்சினியப் போராளி (இ. 2006)
1967 – எமிலி வாட்சன், ஆங்கிலேய நடிகை

இறப்புகள்

1742 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1656)
1752 – தேவசகாயம் பிள்ளை , இந்தியக் கத்தோலிக்க அருளாளர் (பி. 1712)
1753 – ஜியார்ஜ் பெர்க்லி, ஆங்கிலேய-ஐரிய மெய்யியலாளர் (பி. 1685)
1867 – ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ், பிரான்சிய ஓவியர் (பி. 1780)
1892 – அப்துல்லா இப்னு உமர் பாதீப் அல்யமானி, யெமனிய-இலங்கை இசுலாமிய சூபி அறிஞர் (பி. 1825)
1898 – லூயிஸ் கரோல், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர், கணிதவியலாளர் (பி. 1832)
1901 – ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1822)
1937 – ஜெய்சங்கர் பிரசாத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1889)
1957 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (பி. 1899)
1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1860)
1976 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (பி. 1922)
1978 – கியேடல், ஆத்திரிய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1906)
2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)
2016 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர் (பி. 1946)
2017 – சூ யூக்வாங், சீன சமூகவியலாளர் (பி. 1906)
2017 – சுர்சித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி (பி. 1925)

சிறப்பு நாள்

தாய்நாட்டைக் காத்தவர்களுக்கான நாள் (உசுபெக்கிசுத்தான்)
புரட்சி மற்றும் இளைஞர் நாள் (தூனிசியா)
தைப்பொங்கல் (சனவரி 14 அல்லது சனவரி 15)
மகி (பஞ்சாப் (இந்தியா), அரியானா, இமாச்சலப் பிரதேசம்)
மகர சங்கராந்தி (இந்தியா), நேபாளம்)
உத்தராயணம் (உத்தராகண்டம், குசராத்து, இராசத்தான்)
விடுதலை நாள் (டோகோ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!