வேறென்ன வேண்டும்
கதிரவன் கண்டதும் கவிபாடும் பறவைகள்
உதயத்தைக் கண்டிட உள்ளங்கள் தயங்கி
கணக்கும் மனதின் கறைகள் கரைந்திட
இயற்கை தரும் தணியாத இனிமை
மேகங்களின் இடையே ஒளிரும் சூரியன்
நீரோடை ஓரம் மரங்களின் நிழலும்
மனம் கவர் பறவைகளின் ஓசை
மேனி தழுவும் குளிர் தென்றல்
பனித் துளியில் முகம் சிலிா்த்து
மொட்டு அவிழும் வண்ணப் பூக்கள்
பொன் நினைவுகளை தீண்டும் தருணம்
இவை போதுமே வேறென்ன வேண்டும்
மனதின்ஓசைகள்
மஞ்சுளாயுகேஷ்.