சுவையானா பொங்கல் ஸ்பெஷல்

 சுவையானா பொங்கல் ஸ்பெஷல்

தேவையானவை:-
ஏதேனும் 3 வகையான சிறு தானியங்கள் -250 கிராம்.
பாசி பருப்பு -100 கிராம்
கரும்பு சர்க்கரை -200 கிராம்
முந்திரிப்பருப்பு – 10
உலர் திராட்சை -10
ஏலக்காய் -3
நெய் -50 கிராம்
கரும்பு சாறு -500 ஒரு கப்
குங்குமப் பூ- ஒரு சிட்டிகை

செய்முறை :-

பாசி பருப்பு மற்றும் சிறு தானியங்களை தனித்தனியாக சிவக்க வறுத்துக்கொள்ளவும் ஏலக்காய் , முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து வறுத்து பாசி பருப்பு சிறு தானியத்திற்கு 1 க்கு 3 -(1:3 ), கரும்பு சாறு தண்ணீரும் சேர்த்து அத்துடன் கரும்பு சர்க்கரை , அனைத்தையும் ஒன்றாக கலந்து மிதமான தீயில் கட்டி சேராமல் கிளரவும் .
பின் 4 விசில் வரும் வரை வேக விடவும் . இதில் வறுத்த முந்திரி கலவை சேர்த்து கிளறவும். நிறைவாக குங்குமப்பூ , மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை அடி பிடிக்காமல் கிளறி இறக்கவும்.
சுவையுடன் கூடிய சத்தான பொங்கல் தயார்.

2.ஜவ்வரிசி பொங்கல்

தேவையானவை:-

அவல்- 2 கப்
ஜவ்வரிசி-1 கப்
பாசிபருப்பு-1/2 கப்
தேங்காய் துருவியது-1 கப்
நெய்- 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு-10
உப்பு-ஒரு சிட்டிகை
கடுகு- 1/3 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
மிளகு-1 ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை-தேவையான அளவு
துருவிய இஞ்சி-1/2ஸ்பூன்

செய்முறை : –

முதலில் பாசிபருப்பை வேக வைத்துகொள்ளவும்.ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை கழுவி நீரை வடித்து ஊறவைத்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு அதில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துகொள்ளவும்

மீதமுள்ள நெய்யில் கடுகு , சீரகம் ,தாளித்து மிளகு ,இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் வேகவைத்த பாசிபருப்பு,ஊறவைத்த ஜவ்வரிசி,அவல் இவற்றை போட்டு நன்கு கிளறவும். கடைசியில் துருவிய தேங்காயை போட்டு நன்கு கிளறி அதில் வறுத்த முந்திரியையும் சேர்த்து இறக்கவும்.

3.ஓட்ஸ் பழ பொங்கல்:-

தேவையானவை :-
ஓட்ஸ்-300 கிராம்
பாசி பருப்பு -150 கிராம்
முந்திரிப்பருப்பு – 10
உலர் திராட்சை -15
ஏலக்காய் -3
நெய் -4ஸ்பூன்
வாழை பழம் -1
பப்பாளி -1கப் சிறியது
மாதுளை-1/2 கப்
கொய்யா-1/2 கப் ( நறுக்கியது)
சப்போட்டா-1/2 கப்
Dragon fruit-5 ஸ்பூன்
அத்தி பழம் -2
ஆரஞ்சு பழம் -1/2
மாம்பழம் – 1/2 கப்
ஆப்பிள். -1/2 கப்
பால் 1/2லிட்டர்

செய்முறை :-
பாசி பருப்பை நன்றாகக் கழுவி விட்டு மூன்று மடங்கு தண்ணீரைச் சேர்த்து வைவக்கவும்.
ஒட்ஸை வறுத்து கொள்ளவும்.
ஏலக்காய் , முந்திரி திராட்சையை நெய்யில் வறுக்கவும்.
எல்லா பழங்களையும் பொடியாக நறுக்கி நெய்யில் நன்கு வேகும் வரை மிதமாக வதக்கவும்.
கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில்
வறுத்த ஒட்ஸ் , கரும்பு சர்க்கரை , வேக வைத்த பாசி பயறு ,பால் அனைத்தையும் ஒன்றாக கலந்து மிதமான தீயில் கட்டி சேராமல் கிளரவும் .
பின் இதில் வறுத்த முந்திரி கலவை மற்றும் வறுத்த பழகலவையை சேர்த்து கிளரி
குங்குமப்பூ , மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை அடி பிடிக்காமல் கிளறி இறக்கவும்.

1.சிறுதானிய பொங்கல்

ஓட்ஸ் பழ பொங்கல்:-

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...