பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலையொட்டி சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிக்கை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடைகிறது.
தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13,20,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயிலானது தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
இதேபோல் சென்னை தாம்பரம்- திருச்சி இடையே இன்று மற்றும் நாளையும், 10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளிலும் ஜன் சதாப்தி என பெயரிடப்பட்ட சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருச்சியை நள்ளிரவு 11.35 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோயிலுக்கு வரும் ஜனவரி 12,19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்ட்ரலிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.