வரலாற்றில் இன்று (27.12.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

திசம்பர் 27 (December 27) கிரிகோரியன் ஆண்டின் 361 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 362 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் நான்கு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

36 – பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான்.
537 – துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது.
1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1836 – இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் உயிரிழந்தனர்.
1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.
1915 – யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் “நகுலேசுவரா நூல்நிலையம்” கீரிமலையில் திறக்கப்பட்டது.[2]
1918 – செருமனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922 – உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சப்பானின் ஓஷோ சேவைக்கு விடப்பட்டது.
1939 – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் 7.8 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,700 பேர் உயிரிழந்தனர்.
1945 – 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.
1949 – இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1966 – உலகின் மிகப் பெரும் குகை மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978 – எசுப்பானியா 40 ஆண்டுகால பாசிச சர்வாதிகார ஆட்சியின் பின்னர் சனநாயக நாடானது.
1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1985 – உரோம், வியன்னா விமான நிலையங்களில் பாலத்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – உருமேனியப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1996 – தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
1997 – வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2000 – யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2002 – செச்சினியாவின் குரோசுனி நகரில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
2004 – எஸ்ஜிஆர் 1806-20 என்ற காந்த விண்மீனில் நிகழ்ந்த வெடிப்பினால் அதன் கதிர்வீச்சு புவியை அடைந்தது.
2007 – பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
2008 – இசுரேல் காசா மீது மூன்று வாரத் தாக்குதலை ஆரம்பித்தது.

பிறப்புகள்

1571 – யோகான்னசு கெப்லர், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1630)
1773 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலேயப் பொறியியலாளர், அரசியல்வாதி (இ. 1857)
1797 – கலிப், இந்தியப் புலவர் (இ. 1869)
1822 – லூயி பாஸ்ச்சர், பிரான்சிய வேதியியலாளர், நுண்ணுயிரியலாளர் (இ. 1895)
1895 – சர்தார் உஜ்ஜல் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 1983)
1901 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)
1913 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்டவர் (இ. 1965)
1945 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (இ. 2013)
1948 – செரார்டு தெபர்டியு, பிரான்சிய-உருசிய நடிகர்
1965 – சல்மான் கான், இந்திய நடிகர்

இறப்புகள்

1834 – சார்லஸ் லாம், ஆங்கிலேயக் கட்டுரையாளர் (பி. 1775)
1914 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1863)
1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானிய பாளி அறிஞர் (பி. 1843)
1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (பி. 1832)
1976 – வ. நல்லையா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1909)
1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானித்தானின் 2வது அரசுத்தலைவர் (பி. 1929)
2007 – பெனசீர் பூட்டோ, பாக்கித்தானின் 11வது பிரதமர் (பி. 1953)
2016 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)
2018 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (பி. 1956)

சிறப்பு நாள்

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!