மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !

 மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !

மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !

மார்கழி மாதம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு சிறப்பான மாதம் இது. பக்திக்கும், கலைக்கும், பாரம்பரியத்திற்கும் உரிய மாதம் இந்த மாதத்தில் வீடுகளின் முன்பு கோலமிடுவது ஒரு முக்கியமான வழக்கம் . இது பெருமாளுக்கு உகந்த மாதம். மாதங்களில் நான் மார்கழி என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில். அதிகாலையில் எழுந்து பெண்கள் குளித்து கோலமிட்டு காலையில் கோவிலுக்கு செல்வார்கள். கன்னிப்பெண்கள் அனைவரும் கோவிலில் விளக்கேற்றி நல்ல துணைவர் நம் வாழ்க்கை வரனாக வர வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட கோலங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தென்னிந்தியாவில் கோலம் என்பது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் ஒரு கலை இது வெறும் அலங்காரமாக மட்டும் இல்லாமல் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு முக்கியதுவத்தையும் கொண்டு உள்ளது. கோலமிடுவது தொன்று தொட்டு தமிழர் சமுதாயத்துடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம் என்று கருதப்படுகிறது இந்த நேரத்தில் வீட்டில் முன்பு கோலம் இடுவதன் மூலம் தேவர்களை வீட்டிற்குள் வரவேற்கிறோம் என்பது நம்பிக்கை. மேலும் கோலம் என்பது லட்சுமி தேவியின் அம்சம் என்றும் லட்சுமி தேவியின் அருளினால் வீட்டிற்கு செல்வம் மற்றும் செழிப்பை கொண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது.
கோலத்தின் வகைகள் புள்ளிக்கோலம், கோடு கோலம், சிக்கி கோலம், வண்ணக்கோலம்
பெண்கள் ஒன்றாக சேர்ந்து கோலம் இடுவதன் மூலம் சமூக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அமைதியான சுற்றுச்சூழலுக்கு வித்திடுகிறது.
நாம் கோலமிடு மாவில் அரிசி மாவையும் சேர்த்து கோலம் இடுவது பூச்சிகள் எறும்புகள் பறவைகளுக்கு உணவாக அமையும். இது நமது சமுதாயம் பல்லுயிர்களை ஆதரித்து பேணிக்காப்பது புரியும் இந்த செயல் புவி சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
கோலம் பெரும்பாலும் பெண்கள் தான் வாசலில் இடுகிறார்கள் அவர்கள் உட்கார்ந்து வளைந்து குனிந்து வாசல் பெருக்கு நீர் தெளித்து புள்ளி இட்டு கோலம் இடுவது அவர்களின் உடலுக்கு ஒரு வித யோக பயிற்சியாகும் அமைகிறது. அவர்களின் மனதையும் அறிவையும் ஒருநிலைப்படுத்தவும் செய்கிறது கோலமிடுவது மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.
காலையில் குளிர்ந்த பனிப்பொழிவினால் அரிசி மாவு தரையில் நன்கு ஓட்டும் எதனால் கோலம் நீடித்து நிலைத்திருக்கும்.
கிராமங்களில் வாசல் பெருக்கி சாணம் மற்றும் மஞ்சள் கலந்து தெளித்து அதன் மீது கோலமிடுவர் அதனால் குளிர்ச்சியான பனிப்பொழிவின்பொழுது நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் முடியும்.இன்றளவும் கிராமங்களிலும் நகர்ப்புறங்களில் சிலரும் கோலமிடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.
நாம் அனைத்து சுப காரியங்களுக்கும் விநாயகரை முதல் கடவுளாக வைத்து வணங்குவது போல் எல்லா சுப காரியங்களுக்கும் வாசலில் கோலம் விடுவதும் நமது வழக்கம். அதுபோல தினமும் நம் வாசலில் கோலமிட்டு வருவதால் நம் வீடு எப்பொழுதும் செல்வ செழிப்போடு மற்றும் வளத்துடன் இருக்கும்.
மார்கழி மாதம் என்பது கோலத்தின் மாதம் இது நம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் ஒரு அழகான கலை இந்த நவீன காலத்திலும் பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கோலப்போட்டி நடத்தி கோலம் சம்பந்தமான விழிப்புணர்வுகளை இளைய தலைமுறைகளுக்கு உண்டாகுகிறார்கள்.
-திவன்யா பிரபாகரன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...