திருவெம்பாவை பாடல் 1 :
திருவெம்பாவை பாடல் 1 :
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான்
மாதேவன் வார் கழல்கள் பாடிய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்
பொருள் :
ஆரம்பமும் முடிவும் இல்லாத மிகப் பெரிய ஒளியின் வடிவமாக விளங்கக் கூடிய இறைவனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். கூர்மையான வாள் போன்ற கண்களை உடைய பெண்ணே, இந்த பாடலை கேட்ட பிறகும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே. உன்னுடைய காதுகள் என இரும்பால் செய்யப்பட்டதா? நாங்கள் பாடுவது உன்னுடைய காதுகளில் விழவில்லையா? என முதல் தோழி, வீட்டிற்குள் இருக்கும் பெண்ணை பார்த்து பாடுனதாக மாணிக்கவாசகர் பாடி உள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு தோழி, நீ பாடுவது காதில் விழாமல் இல்லை இறைவனின் திருநாமத்தால் உணர்ச்சிவசப்பட்டு, அவள் விம்மி,விம்மி அழுது கொண்டிருக்கிறாள். தன்னையும் மறந்து பக்தி பெருக்காமல் அவள் அழுதை அறியாமல் தவறாக பேசுவது சரிதோனோ என்கிறாள்.
-மஞ்சுளா யுகேஷ்