வரலாற்றில் இன்று (16.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

திசம்பர் 16 (December 16) கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1431 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார்.
1497 – வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
1575 – சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
1598 – கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது.
1653 – சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார்.
1707 – சப்பானின் பூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1761 – ஏழாண்டுப் போர்: நான்கு மாதங்கள் முற்றுகையின் பின்னர் உருசியா புருசியாவின் கொலோபிர்செக் கோட்டையைக் கைப்பற்றியது.
1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் – அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
1811 – அமெரிக்காவின் மிசூரியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
1835 – நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
1857 – இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1880 – முதல் பூவர் போர்: தென்னாப்பிரிக்காவின் பூவர்களுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது.
1918 – இலித்துவேனிய சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது. இது 1919 இல் கலைந்தது.
1920 – சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
1922 – போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் வார்சாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1925 – இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை கொழும்பில் ஆரம்பமானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மீரி நகரைக் கைப்பற்றினர்.
1942 – பெரும் இன அழிப்பு: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிக் இம்லர் ரோமா மக்களை அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை ஆரம்பமானது. ஆர்டென் காட்டில் மூன்று செருமனிய இராணுவப் படைப்பிரிவுகள் திடீர்த் தாக்குதலை நடத்தின.
1947 – வில்லியம் ஷாக்லி, ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் இணைந்து உலகின் முதலாவது செயல் முறை திரிதடையத்தை உருவாக்கினர்.
1950 – கொரியப் போர்: சீனப் படைகள் வட கொரியாவின் கம்யூனிச அரசுக்கு ஆதரவாக போரிட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் டுரூமன் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1960 – அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.
1971 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1971 – பகுரைன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1991 – கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2000 – அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்,
2013 – பிலிப்பீன்சு தலைநகர் மணிலாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
2014 – பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் போராளிகள் பெசாவர் நகரில் இராணுவப் பள்ளுக்கூடம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 145 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள் ஆவர்.

பிறப்புகள்

1485 – அராகனின் கத்தரீன், எசுப்பானிய இளவரசி, இங்கிலாந்து அரசி (இ. 1536)
1770 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், செருமானிய மேற்கத்தைய இசையமைப்பாளர் (இ. 1827)
1775 – ஜேன் ஆஸ்டின், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1817)
1857 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1923)
1866 – வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-பிரான்சிய ஓவியர் (இ. 1944)
1879 – தயாராம் சகானி, இந்தியத் தொல்லியலாளர் (இ. 1939)
1900 – மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1980]])
1901 – மார்கரெட் மீட், அமெரிக்க மானிடவியலாளர் (இ. 1978)
1917 – நபி பக்சு கான் பலோசு, பாக்கித்தானியக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2011)
1917 – ஆர்தர் சி. கிளார்க், ஆங்கிலேய-இலங்கை எழுத்தாளர் (இ. 2008)
1930 – லலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1982)
1933 – அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (இ. 2014)
1957 – எச். டி. குமாரசாமி, கருநாடகாவின் 18வது முதலமைச்சர்
1967 – மிராண்டா ஓட்டோ, ஆத்திரேலிய நடிகை
1969 – ஆடம் இரீசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர்
1969 – கிரேக் வைட், ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர்
1983 – ஹர்ஷவர்தன் ராணே, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1984 – தியோ ஜேம்ஸ், ஆங்கிலேய நடிகர்

இறப்புகள்

1515 – அபோன்சோ டி அல்புகெர்க்கே, போர்த்துகேய இந்தியாவின் 3வது ஆளுநர் (பி. 1453)
1859 – வில்லெம் கிரிம், செருமனிய மொழியியலாளர் (பி. 1786)
1928 – பனகல் அரசர், தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் (பி. 1866)
1981 – ஜோசப் மர்பி, அயர்லாந்து-அமெரிக்க எழுத்தாளர், இறை அறிவியலாளர் (பி. 1898)
2003 – பி. மாதவன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)
2005 – இளையதம்பி தர்சினி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் (பி. 1985)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (பகுரைன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1971)
குடியரசு நாள் (கசக்கஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
வங்காளதேச வெற்றி நாள்
வெற்றி நாள் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!