166 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய ரயில்வே புதிய சாதனை!

 166 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய ரயில்வே புதிய சாதனை!

   புதுதில்லி: இந்திய ரயில்வே நடப்பு நிதியாண்டில் (2019-20) எந்த விபத்திலும் ஒரு பயணியையும் உயிரிழக்காமல், 166 ஆண்டுகளில் முதல்முறையாக புதிய சாதனை புரிந்துள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
   கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வரையிலான காலத்தில் நிகழ்ந்த எந்த ரயில் விபத்துகளிலும் பயணிகள் உயிரிழப்பு பூஜ்ஜியமாகவே இருந்துள்ளது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

   ரயில்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கள், மோதல்கள், தடம் புரண்டது, லெவல் கிராசிங் விபத்துக்கள் ஆகியவை கடந்த 38 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ரயில்வேயின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1853 ஆம் ஆண்டு முதல் ரயில்வே சேவை அமலுக்கு வந்ததில் இருந்து 166 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

   ரயில்வே துறை 1960-61 இல் 2,131 விபத்துக்களைப் பதிவுசெய்திருந்தது, பின்னர் 1970-71 இல் 840 ஆக குறைந்தது. 1980-81 இல் நடந்த மொத்த விபத்துக்களின் எண்ணிக்கை 1,013 ஆக பதிவானது, இது 1990-91 இல் 532 ஆகவும், 2010-11 இல் 141 ஆகவும் குறைந்தது.

   1990 மற்றும் 1995-க்கு இடையில் ஆண்டுதோறும் 500 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 4,300 பேர் காயமடைந்தமனர்,  2,400 பேர் உயிரிழந்ததகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013 முதல் 2018 வரை சராசரியாக 110 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 990 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017-18 ஆம் நிதியாண்டில், இந்திய ரயில்வே 73 சதவீத விபத்துக்களையும், 19 நிதியாண்டில் 59 சதவீத விபத்துக்களையும் சந்தித்துள்ளது. 

  தண்டவாளம் புதுபித்தல், தண்டவாள பராமரிப்பு, சிக்னல்கள் பராமரிப்பு, பழைய பெட்டிகளை அகற்றி விட்டு, நவீன பெட்டிகளை இணைத்தது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் என எல்ல நிலைகளிலும் விபத்துக்களைத் தடுக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளால்தான் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து இந்த மைல்கள் சாதனை சாத்தியமானதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...