இன்றைய முக்கிய நிகழ்வுகள் (10.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (10.12.2024)

மனித உரிமைகள் தினம்

உலகம் முழுவதும் மனித உரிமைகள் பாதுகாப்புக்குத் தரமான அளவுகோலைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, 1948-ல் ஐநா பொதுச்சபை அனைவருக்குமான மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்று வெளியிட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று ‘மனித உரிமைகள் தினம்’ கொண்டாடப் படுது. 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டே இந்நாள் கடைப்பிடிக்கப்படுது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்.

சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகளின் உரிமைக்காக விலங்குகள் போராட முடியாது. விலங்குகளின் நலன் காக்க அவைகளின் உரிமைக்காக மனிதர்கள்தான் போராட வேண்டும் என விலங்குகளின் நலன் கருதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஆல்பிரட் நோபல் நினைவு தினம்

சுவீடன் நாட்டில் 1833-ம் ஆண்டு அக்டோபர் 21-ம்தேதி பிறந்து, 1896-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி மறைந்தவர் ஆல்பிரட் நோபல். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசை உருவாக்கியவர். இவர் டைனமைட்டை கண்டுபிடித்தார். ஆல்பிரட் நோபல் இளம் வயதில் வெடிபொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார்.

கடந்த 1863-ல் வெடி ஒன்றை கண்டுபிடித்தார். மேலும் 1865-ல் வெடிக்கும் தொப்பியையும் வடிவமைத்தார். தொழிற்சாலை விபத்தில் இவரது சகோதரர் எமில் மரணமடைந்தார். ஆனால், ஆல்பிரட் இறந்ததாக நினைத்து, ‘மரண வியாபாரி இறந்துவிட்டார்’ என்று செய்தி வெளியானது. அதனால் மனம் உடைந்த ஆல்பிரட் நோபல் தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தை வைத்து நோபல் பரிசை நிறுவினார்.

வா. செ. குழந்தைசாமி காலமான நாள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் (1929). கரக்பூர் ஐஐடி-யில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். l நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு ‘குழந்தைசாமி மாதிரியம்’ எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். l தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர். l சர்வதேச தொலைநிலைக் கல்விக் குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத் தலைவராக பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர். l நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். l சிறந்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்களாக மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002-ல் வெளிவந்தது. l தனது சில கவிதைகள், நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரது நூல்கள், கட்டுரைகள் பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. l தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்ம, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். l கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது இவரது உறுதியான கருத்து. l தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவர், சென்னை தமிழ் அகாடமி தலைவர், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவர், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தார்.

‘என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா’வின் முதல் பதிப்பு விற்பனைக்கு வந்த நாள்

கலைக்களஞ்சியம் என்றதும் முதலில் நினைவுக்கு வரக்கூடியதும், உலகில் மிகநீண்ட காலமாக (244 ஆண்டுகளுக்கு) அச்சிலிருந்ததுமான ‘என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா’வின் முதல் பதிப்பு விற்பனைக்கு வந்த நாள் டிசம்பர் 10. 15 பதிப்புகள் வெளியான நிலையில், தாக்குப்பிடிக்க முடியாத அளவு இழப்பு காரணமாக, 2012இலிருந்து அச்சு வடிவம் நிறுத்தப்பட்டு, இணையத்தில் மட்டுமே தொடர்கிறது. பண்டைய ரோமின் கி.மு.முதல் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த மார்க்கஸ் டெரண்ஷியஸ் வேரோ என்பவர் எழுதிய 620 நூல்களே பின்னாளில் தோன்றிய கiலைக்களஞ்சியங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்ததால், கலைக்களஞ்சியத்தின் வரலாறு கிறிஸ்த்துவுக்கும் முற்பட்டது! இவருக்குச் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பல்வேறு செய்திகள் குறித்து அரிஸ்ட்டாட்டில் எழுதியிருந்தாலும், வேரோவின் ‘துறைகள் குறித்த 9 நூல்கள்’ என்பதே, துறைகளாகப் பிரிக்கப்பட்ட தலைப்புகளில் எழுதப்பட்டு, கலைக்களஞ்சியத்தின் வடிவத்தைத் தொடக்கி வைத்தது. இந்த வடிவத்தைப் பின்பற்றி, கி.பி.முதல் நூற்றாண்டில் மூத்த பிளினி, 2493 கட்டுரைகளுடன் எழுதிய நேச்சுரலிஸ் ஹிஸ்டரியா என்பது இடைக்காலம்வரை தாக்கம் செலுத்திய கலைக்களஞ்சியம் என்பதுடன், பிரதி கிடைக்கக்கூடிய மிகப்பழைய கலைக்களஞ்சியமுமாகும். இதற்குப்பின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தகவல் தொகுப்பு நூல்கள் வெளியாகியிருந்தாலும், 1728இல் லண்டனில் வெளியான சேம்பர்’ஸ் சைக்ளோப்பீடியா, 1751இல் ஃப்ரான்சில் வெளியான என்சைக்ளோப்பீடி, 1768இல் வெளியான என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா ஆகியவையே தற்போது நாம் அறிந்துள்ள கலைக்களஞ்சிய வடிவம் உருவாகக் காரணமாயின. 15ஆம் நூற்றாண்டுவரை வெளியான கலைக்களஞ்சியங்கள் பல்வேறு பெயர்களில் வெளியாயின. 1408இல் சீனாவில் உருவான 37 கோடிச் சீன எழுத்துகளுடன், 11,095 தொகுதிகள் கொண்ட(1400 சதுர அடிக்கு அடுக்கப்பட்டிருந்த!) யாங்கிள் டாடிஸ் என்ற கலைக்களஞ்சியமே உலகின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக விளங்கியது. ஆறு நூற்றாண்டுகளுக்குப்பின் 2007 செப்டம்பர் 9இல் விக்கிப்பீடியா இச்சாதனையை முறியடித்தது! வட்டம், பொது என்பதான பொருள்கொண்ட என்கைக்கிளோஸ், கல்வி என்ற பொருள்கொண்ட பீடியா ஆகிய கிரேக்கச் சொற்களை முழுமையான அல்லது பொது கல்வி என்ற பொருளில் கி.பி.முதல் நூற்றாண்டைச்சேர்ந்த ரோமானியக் கல்வியாளர் க்விண்ட்டிலியன் பயன்படுத்தியிருந்தார். 1470இல் இவரது கையெழுத்துப் பிரதிகளைப் படியெடுத்தவர்கள், தவறுதலாக என்சைக்ளோப்பீடியா என்று சேர்த்து எழுதிவிட, ஒரே லத்தீன் சொல்லாக இது உருவாகி, 16ஆம் நூற்றாண்டில் பொதுவான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஜப்பானில் மிகப்பெரிய கொள்ளை நடந்த நாள்

300 மில்லியன் யென் கொள்ளை என்றழைக்கப்படும், இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத மிகப்பெரிய கொள்ளை ஜப்பானில் நடந்த நாள் நிகோன் ஷிண்டாக்கு கிங்க்கோ என்ற ஜப்பானிய வங்கியின், கொக்குபுஞ்சி கிளை ஊழியர்கள், வங்கிக்குச் சொந்தமான கார் ஒன்றில், உலோகப் பெட்டிகளில் வைத்து 29,43,07,500 யென்களை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 38 கோடி), தோஷிபா நிறுவனத்தின் ஃபுகு தொழிற்சாலை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக எடுத்துச் சென்றனர். டோக்கியோவின் ஃபுகு சிறைச்சாலைக்கு அருகில் அவர்களை நிறுத்திய ஒரு காவல்துறை அதிகாரி, வங்கி மேலாளரின் வீடு தகர்க்கப்பட்டதுடன், வங்கியின் கார் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளதாகக் கூறி, காருக்கு அடியில் சென்று சோதனையிடத்துவங்கினார். சில நிமிடங்களில், காருக்கு அடியிலிருந்து புகை வரத்துவங்க, அவசரமாக வெளியே வந்த அவர், கார் வெடிக்கப்போவதாகக் கூறினார். ஊழியர்கள் ஓடத்தொடங்கியதும், அவர் காரில் ஏறிச் சென்றுவிட்டார். அதன்பிறகு, அதிலிருந்த பணம், ஏற்கெனவே திருடப்பட்ட வெ வ்வேறு கார்களுக்கு மாற்றி எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. 120 தடயங்கள் கிடைத்தாலும், எதுவும் கொள்ளையனையோ, பணத்தையோ கண்டுபிடிக்க உதவவில்லை. சந்தேகத்துக்குரியவர்கள் என்று காவல்துறை தயாரித்த பட்டியலில் 1,10,000 பெயர்கள் இருந்தன. அந்த அளவுக்கு அவர்களைக் குழப்பிய இந்தத் திருட்டைக் கண்டுபிடிப்பதில் 1,70,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வங்கி ஊழியர்கள் தெரிவித்த தகவல்களின்படி உருவாக்கப்பட்ட கொள்ளையன் படத்தின் 7,80,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. ஏழு ஆண்டுகள் தொடர்ந்த விசாரணையில் உருப்படியாக எதையும் கண்டுபிடிக்க முடியவே இல்லை. ஜப்பானின் சட்டப்படி, குற்றவாளியை 7 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்ய முடியாது என்பதால் விசாரணை முடிவுக்கு வந்தது. அதேபோல, 20 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றத்திற்கு தண்டனை வழங்க முடியாது என்பதால், 1988க்குப்பின் கொள்ளையன் தானாகவே வெளியே வருவான் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்றுவரை அதுவும் நடக்கவில்லை.

ஆயிரம் மருத்துவ மாணவர்களும், 400 காவலர்களும் மோதிக்கொண்ட நாள்

1907 – லண்டனில் நடைபெற்ற பழுப்பு நாய் வன்முறைகளின் உச்சகட்டமாக, ஆயிரம் மருத்துவ மாணவர்களும், 400 காவலர்களும் மோதிக்கொண்ட நாள் 1903 ஃபிப்ரவரியில், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வில்லியம் பேலிஸ், 60 மாணவர்கள் முன்னிலையில் ஒரு பழுப்பு நாயை உயிருடன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்தான் ஹார்மோன் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. செரிமானத்தைத் தூண்ட நரம்பு மண்டலம் செய்தியை அனுப்புவதாக நம்பப்பட்டு வந்தது தவறு என்றும், மாறாக, செக்ரிட்டின் என்பது (ஹார்மோன்) சுரப்பதனால்தான், கணையம் செரிமானத்துக்குத் தூண்டப்படுகிறது என்பதையும் இந்த ஆய்வுதான் வெளிப்படுத்தியது. இதே கல்லூரியின் உடற்கூறியல் பேராசிரியரும், பேலிசின் மைத்துனருமான, எர்னஸ்ட் ஸ்டெர்லிங், 1905இல், தூண்டுதல் என்ற பொருளுடைய கிரேக்க மொழிச்சொல்லான ஹார்மனோ என்பதிலிருந்து ஹார்மோன் என்ற பெயரை உருவாக்கினார். உடலின் இத்தகைய செயல்பாடுகளை, உயிருள்ள மிருகங்களின்மீது ஆய்வு மேற்கொண்டுதான் கண்டறிய முடியும் என்றாலும் அதற்கு எதிர்ப்புகளும் நிலவின. இதனால், 1876இல் இயற்றப்பட்ட மிருகங்களின்மீதான துன்புறுத்தல் சட்டம், ஆய்வின்போது மிருகத்திற்கு மயக்க மருந்து அளிக்கப்படவேண்டும், ஒரே மிருகத்தை ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வுகளுக்குப் பயன்படுத்தக்கூடாது, ஆய்விற்குப்பின் கொன்றுவிட வேண்டும் முதலான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இந்தப் பழுப்பு நாயின்மீது, இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, மிருகங்களின்மீது ஆய்வு மேற்கொள்ளாத மற்றொரு கல்லூரியிலிருந்து, இந்த ஆய்வைப் பார்க்க வந்த இரு பெண்கள் தெரிவித்ததையடுத்து, பேலிஸ்மீது வழக்குத் தொடரப்பட்டு, தோற்றும் போனது. ஆனால், மிருகவதை எதிர்ப்பாளர்கள் 1906 செப்டம்பரில் அந்த நாய்க்கு ஒரு சிலை அமைத்தது மருத்துவ மாணவர்களை சினங்கொள்ளச் செய்தது. 1907 நவம்பர் 20இலிருந்து தொடர்ந்த மாணவர் போராட்டம், டிசம்பர் 10இல் வன்முறையானதில், மாணவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டாலும், சிலையைப் பாதுகாக்க செலவிட முடியாது என்று நகர நிர்வாகம் 1910இல் சிலையை அகற்றி, அழித்துவிட்டது. 1985இல் மீண்டும் ஒரு சிலை அமைக்கப்பட்டு, 1992இல் அகற்றப்பட்டு, 1994இல் மீண்டும் நிறுவப்பட்டது.

உலகின் முதலாவது சமிக்கை_விளக்குகள்(சிக்னல்) நிறுவப்பட்ட நாள்

1868ஆம் ஆண்டு உலகின் முதலாவது சமிக்கை_விளக்குகள்(சிக்னல்) லண்டனிலுள்ள நாடாளுமன்றத்துக்கு வெளியே நிறுவப்பட்ட நாள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...