சவாலான இலக்கை அசால்ட்டா அடித்த சிட்னி சிக்ஸர்ஸ்
லயன் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் சிக்ஸர்களை விளாசிய ஃபின்ச், அதன்பின்னர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார்.
17வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். 18வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். 19வது ஓவரில் முகமது நபி அவுட்டாக, கடைசி ஓவரில் ஃபின்ச் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 2 ஓவர்களிலும் பெரியளவில் ரன் கிடைக்காமல் போனது. அதிரடியாக ஆடிய ஃபின்ச், 68 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 109 ரன்களை குவித்தார். அவரது சதத்தால் தான் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 20 ஓவரில் 175 ரன்களை அடித்தது.176 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் வெறும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் ஃபிலிப் அதிரடியாக ஆடி 42 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார்.முதல் விக்கெட் விழுந்தபிறகு, ஜோஷ் ஃபிலிப்புடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், அவருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தனர். ஃபிலிப் 61 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து கேப்டன் மாய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் நடையை கட்டினார்.
இதையடுத்து ஸ்மித்துடன் டேனியல் ஹியூக்ஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசினார். ஸ்மித் களத்தில் நின்று சிறப்பாக ஆடியதால் சிட்னி சிக்ஸர்ஸ் அணி, எந்தவித சிரமுமின்றி எளிதாக இலக்கை நெருங்கியது. அரைசதம் அடித்த ஸ்மித், கடைசிவரை களத்தில் நின்று 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.40 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார் ஸ்மித். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி பெற, சதமடித்த ஃபின்ச்சை ஓரங்கட்டி, வெற்றி நாயகனாக ஜொலித்த ஸ்மித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.