அரியும் சிவனும் ஒன்றே!!! அறிந்தால் வாழ்வும் நன்றே

அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னி தொக்குள் உழலும் தூமையுள் அடங்கிடும்
பிள்ளையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!!

தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி அளவே ஆகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே சிசுவாக வளர்ந்து தாயின் வயிற்றுக்குள் உழன்று ஐம்புலன்களுடன் கூடிய உடம்பு உண்டாகி தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பத்து மாதங்கள் தாயின் தூமையின் நீரிலேயே மிதந்து வளர்ந்து அதன் பின்னரே உலகில் உயிர், உடம்பு பிறக்கின்றது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்பதனை உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள் ஏனெனில் அத்தூமையை உடம்பில் ஒட்டியே பிரம்மம் இருக்கின்றது என்பதனைக் கண்டு அச்சிவத்தை சேர தியானியுங்கள்.

அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சொதியோடு அணுகி வாழலாகுமே!!!

அழுக்குப் போகவேண்டும் என்று தினந்தினம் நீரில் குளித்தும் அழுக்கு அகலாத மனிதர்களே! அழுக்கான உடம்பில் அழுக்கான இடம் எது என்பதனை அறிந்தீரா? அவ்விடத்தில் மனதை நிறுத்தி அம்மனத்தில் உள்ள ஆசைகளையும் பாவங்களையும் பக்தி, தொண்டு, யோகம், ஞானம் என்ற சாதனங்களால் அறவே ஒழித்து தியானிக்க வல்லவர்களானால், அழுக்கே இல்லாத பரிசுத்தமான அவ்விடத்தில் சதியாக விளங்கும் ஈசனோடு இணைந்து மரணமிலா பெரு வாழ்வில் வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!