திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில், கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், 20 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 17 ம் தேதி தொடங்கி, காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இன்று காலை அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.