அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1)

 அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1)

அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1)

சஷ்டி முன்னிட்டு, இன்று முதல் ஆறு நாட்கள்,முருகனின் திருவருள் பெற திருமுருகாற்றுப்படையில் சில பதிவுகள்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை எழுதியவர் நல்லிசை புலமை வல்லுனர் நக்கீரர்.

திருவிளையாடலில், இறையனாரின் பாடலின் பொருளில் குற்றமென்று சிவபெருமானிடம் நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று வாதாடியவர்.

கடலளவு கொடுத்த திருமுருகாற்றுப்படையிலிருந்து கடுகளவு வரையில் அளிக்க முற்பட்டு ரத்ன சுருக்கமாக பதிவிடுகிறேன்.

” உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாஅங்கு ஓவற இமைக்குஞ் சேண் விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றான் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணு தல் கணவன் (1-6).

உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு ஒளிக் கதிர்கள் மூலம் கதிரவன் உலகை வலம் வருவதும், இக்கதிரவன் கடலில் உழுவது போல இக்காட்சியின் அழகை பலரும் கண்டு களிக்கின்றனர். அதைப்போல முருகன் இமைக்கிறான் அருட்பார்வை வழங்குகிறான். முருகனது அருள் ஒளி கண்ணுக்கும், அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்தும் கால வெளிச்சத்தில் பாய்கிறது. துன்புறுவோரை தாங்குவதே முருகனது கொள்கையாகும். அவனது செயல்களை எதிர்த்தவர்களை அத்திருவடிகள் மிதித்து தேய்க்கும். மழை போன்று உதவுவது அவனது கைகள். களங்கமில்லாத கற்பு நெறியினளாகிய தெய்வயானைக்கு அவன் கணவன்|

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...