நடிகர் ராகவா லாரன்ஸின் ‘கால பைரவா’ முதல் பார்வை போஸ்டர் வெளியானது..!
நடிகர் ராகவா லாரன்ஸ் தான் நடிக்கவுள்ள 25வது படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
நடன இயக்குநராக திரையுலகில் அறிமுகமான நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். திரை உலகில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார். பல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்தாண்டிற்கான சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இயக்கத்தில் தனது 25ஆவது படமான ‘கால பைரவா’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை நீலாத்ரி புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கால பைரவா படம் பான் இந்திய சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது. நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என விரைவில் அறிவிப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.