தேர்தல் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவின் ஜெயலட்சுமி தேர்வு. திமுக கூட்டணி (13) அதிக உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் திடீர் திருப்பம்.
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் பணிகள் தொடங்கின. கமுதி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற
கடும் போட்டி: அதிமுக, திமுகவிற்கு தலா 7 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக, தேமுதிக தலா ஒரு உறுப்பினர்களும், சுயேட்சை 3 பேரும் உள்ளனர்.தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது. பெரும்பான்மைக்கு, 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைப்பு.சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.
நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வான திமுகவின் பொன்தோஸ்.தோடர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒருவர், தலைவராவது இதுவே முதன்முறையாகும்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 8, திமுக 8 இடங்களில் வெற்றி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 57, திமுக 31 இடங்களில் வெற்றி, கன்னியாகுமரி: குருந்தன்கோடு ஒன்றியத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜகவின் அனுஷியா தேவி வெற்றி. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு.
“27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்று கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கவில்லை””கூட்டணி தர்மத்துக்கு புறம்பான செயல்” என கேஎஸ் அழகிரி வேதனை, “303 ஒன்றிய தலைவர் பதவிகளில் 2 மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது”.”மாவட்ட அளவில் திமுக உடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை”. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி, திமுக வழங்கிய ஒதுக்கீடு குறித்து அறிக்கை.
திருச்சியை கைப்பற்றியது திமுக: ஒரு மாவட்ட ஊராட்சி, 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது.
கரூரை கைப்பற்றியது அதிமுக. மாவட்ட ஊராட்சி தலைவர், 8 ஒன்றியங்களையும் கைப்பற்றியது அதிமுக.