அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது

 அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் உள்ளிட்ட ஏழு பேரும் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களின் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்காவை பழிக்கு பழி வாங்குவோம் என்று ஈரான் கூறி வருகிறது.

“அப்படி ஏதாவது தாக்குதலை ஈரான் நடத்தினால், உலக வரைப்படத்தில் அந்த நாடே இல்லாமல் போகும் அளவுக்கு பதிலடி தரப்படும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சில தினங்களுக்கு முன் எச்சரித்திருந்தார்.
ஏன்தான் இப்படி செஞ்சோம்னு அமெரிக்காவை ஃபீல் பண்ண வைப்போம் : ஈரான் சபதம், அமெரிக்க அதிபரின் மிரட்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தில்லாக நேற்று தெரிவித்திருந்தது.அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துவிடும் என்ற எச்சரிக்கை வாசகம் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.

இந்நிலையில், ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான கெர்மேனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கோனார் பங்கேற்றிருந்தனர். 
ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் : ட்ரம்ப் எச்சரிக்கை!! அப்போது ஊர்வலத்தில் எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர்.ராணுவ தளபதியின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த இத்துயர சம்பவம் ஈரானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தலைநகர் டெஹ்ரானில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சுலைமானியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சுமார் 10 லட்சம் பேர் (ஒரு மில்லியன்) குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...