இன்றைய முக்கிய செய்திகள்
கோலாரில் பதட்டம்! கர்நாடகா மாநிலம் கோலாரில் அனுமதி பெறாமல் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர். காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து அப்புறப்படுத்த முற்பட்ட போது இரு தரப்பிற்கு கடும் மோதல் மூண்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய காவல்துறையினர் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையில்லை. 2வது வெள்ளிக்கிழமையான 10ம் தேதிக்கு பதிலாக, 16ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்! 6ம் தேதி பதவி ஏற்பு உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வரும் 6ம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பார்கள் – தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி. இரண்டு கட்ட தேர்தலில் 77.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன, 100க்கு 100 சதவீதம் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றது – மாநில தேர்தல் ஆணையர். 25 பதவி இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையர். உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில், 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில், ஜல்லிக்கட்டு சுற்றுலா அறிமுகம். வரும் 17ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காணும் வகையில் சுற்றுலாத்துறை ஏற்பாடு. நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு. நீட் தேர்வை கட்டாயமாக்கிய 2017, 2018ம் ஆண்டு இந்திய ருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல். சிவகங்கை சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை,வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.மாநில தேர்தல் ஆணையர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு குடிமகனின் குடியுரிமையையும் குடியுரிமை திருத்தச் சட்டம் பறிக்க போவதில்லை – உள்துறை அமைச்சர் அமித் ஷா.