ஐபோன் விற்பனை சரிவு… ஆப்பிள் CEOவின் வருவாய் குறைந்தது
ஐபோன் விற்பனை சரிவை சந்தித்ததன் எதிரொலியாக, ஆப்பிள் நிறுவன சி இ ஓவின் கடந்த ஆண்டு வருமானத்தில் சுமார் 78 கோடி ரூபாய் குறைந்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை 2019ம் ஆண்டில் போதிய இலக்கை எட்டவில்லை எனவும், ஆப்பிள் நிறுவனத்தில் சம்பளம் வழங்கும் முறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 2018ம் ஆண்டிற்காக ஒட்டுமொத்தமாக சுமார் 975 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற டிம் குக், 2019ம் ஆண்டில் 897 கோடி ரூபாய் மட்டுமே மொத்த சம்பளமாக பெற்றுள்ளார்.2018ல் போனசாக மட்டுமே சுமார் 86 கோடி ரூபாய் பெற்ற டிம் குக், சென்ற ஆண்டில் 55 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளார். டிம் குக் தனது சம்பளத்திலிருந்து சுமார் 14 கோடி ரூபாயை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.