இரான் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா
காசெம் சுலேமானீ: இரான் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.
இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இச்செய்தி வெளியானது. இத்தாக்குதலில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.இந்த நடவடிக்கை “மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது” என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார்.
https://twitter.com/JZarif/status/1212946202280579073
இதனிடையே, ”இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது” என்று இரானின் அதிஉயர் தலைவர் ஆயடூலா அலி காமனேயி எச்சரித்துள்ளார்.இரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். அவரது படைப்பிரிவு நேரடியாக இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயடூலா அலி காமனேயிடம் தொடர்பில் இருக்கும். மேலும் சூலேமானி, அந்நாட்டில் ஹீரோ போல பார்க்கப்பட்டவர்.