குடிசை வீட்டிலிருந்து மருத்துவம்
குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்
குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான
ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும். கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் தேர்வான மாணவர்களே, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில்தான் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். அந்த வகையில், அடுத்த வருடம்தான் முஸாதிகா பல்கலைக்கழகம் செல்ல முடியும்.
ஆனால், இவ்வருடம் தேர்வான மாணவர்கள் ஜூன் மாதமளவில் பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ்வருடம் தேர்வான மாணவர்கள் ஜூன் மாதமளவில் பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி நகர்
எனும் கிராமத்தில் வசிக்கிறார் முஸாதிகா. அவரின் தந்தை மீராஸா – செங்கல் உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளி. தாய் – உம்மு சல்மா.முஸாதிகாவின் தந்தை மீராஸாவுக்கு 60 வயதாகிறது. தனது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான வறுமைக்கு மத்தியில்தான் அவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால், தனது பிள்ளைகள் பற்றிய அவரின் கனவு – மிகப் பெரிதாக இருக்கிறது. சாபி நகரிலுள்ள முஸாதிகாவின் வீட்டுக்கு, அந்த மாணவியை கண்டு வாழ்த்துவதற்காக நிறையப் பேர் வந்து – போய்க் கொண்டிருந்தார்கள். முஸாதிகாவின் குடும்பத்தவர்களும், உறவினர்களும் அங்கு கூடியிருந்தார்கள். அதற்கிடையில்தான் பிபிசி தமிழுக்காக அவர்களுடன் உரையாடினோம். முஸாதிகாவின் தந்தை தனது கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார். “அரச உத்தியோகத்தில் எனக்கு மிகவும் விருப்பம். எனது பிள்ளைகளில் ஒருவரை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பது எனது பெருங்கனவாக இருந்தது. எனது ஒவ்வொரு பிள்ளையையும் மருத்துவராக்க வேண்டும் என்கிற ஆசையுடன்தான் படிப்பித்தேன்.