வரலாற்றில் இன்று (12.09.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 12 (September 12) கிரிகோரியன் ஆண்டின் 255 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 256 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 110 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 490 – கிரேக்கம் மரதன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்தது. பிடிப்பிடஸ் என்ற கிரேக்க வீரன் இவ்வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க நெடுந்தூரம் ஓடினான். மரதன் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
1609 – ஹென்றி ஹட்சன் ஹட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.
1683 – ஒட்டோமான் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.
1759 – பிரித்தானியப் படையினர் கியூபெக் நகரைக் கைப்பற்றினர்.
1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
1857 – வட கரொலைனாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426 பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில் 13-15 தொன் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
1890 – ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.
1933 – அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.
1940 – நியூ ஜேர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் ஜெர்மனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜெர்மனிய படைத்தளபதி “ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.
1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1974 – எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1977 – தென்னாபிரிக்காவின் நிறக்கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.
1980 – துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் கருப்பு-அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2001 – ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான ஆன்செட் ஆஸ்திரேலியா மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.
2005 – இஸ்ரேல் காசாப் பகுதியில் இருந்து தனது படைகளை முற்றாக விலக்கியது.
2005 – ஹொங்கொங்கில் ஹொங்கொங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.
2006- திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது “தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்” என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.

பிறப்புகள்

1832 – சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி, (இ. 1901)
1913 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்க தட கள ஆட்டக்காரர் (இ. 1980)
1943 – மைக்கல் ஒண்டாச்சி, இலங்கையில் பிறந்த எழுத்தாளர்
1969 – கப்டன் மொறிஸ், விடுதலைப் புலிகளின் போராளி (இ. 1989)
1980 – யாவ் மிங், சீனக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1612 – நான்காம் வசீலி, ரஷ்யப் பேரரசன் (பி. 1552)
2009 – நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)

சிறப்பு நாள்

கேப் வேர்ட் – தேசிய நாள்
எதியோப்பியா – தேசியப் புரட்சி நாள் (1974)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!