வரலாற்றில் இன்று (11.09.2024 )

 வரலாற்றில் இன்று (11.09.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 11 (September 11) கிரிகோரியன் ஆண்டின் 254 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 255 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 111 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1297 – ஸ்டேர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
1541 – சிலியின் சண்டியாகோ நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான பழங்குடிகளினால் அழிக்கப்பட்டது.
1609 – ஹென்றி ஹட்சன் மான்ஹட்டன் தீவைக் கண்ணுற்றார்.
1649 – ஒலிவர் குரொம்வெல்லின் இங்கிலாந்து நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.
1708 – சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்ல்ஸ் மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.
1709 – பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.
1802 – பிரான்ஸ் சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.
1857 – யூட்டாவில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர்.
1889 – யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
1897 – எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னன் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினான்.
1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
1914 – ஆஸ்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகளை வெளியேற்றினர்.
1916 – கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
1919 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசினுள் நுழைந்தனர்.
1926 – பெனிட்டோ முசோலினி மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
1945 – இரண்டாம் உலகப் போர்: போர்ணியோ தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15இல் கொல்லப்படவிருந்தனர்.
1961 – டெக்சாசை 4ம் கட்ட சூறாவளி கார்லா தாக்கியது.
1968 – பிரான்சில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. சனாதிபதி சல்வடோர் அலெண்டே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
1974 – வட கரோலினாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
1978 – அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், எகிப்திய அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் மத்திய கிழக்கு அமைதீ முயற்சிகளை முன்னெடுக்க காம்ப் டேவிட்டில் சந்தித்தனர்.
1982 – பாலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூட் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.

2001 வான் தாக்குதல்களில் உலக வர்த்தக மையம் எரிகிறது

1989 – ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.
1992 – ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
1997 – ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.
2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1862 – ஓ ஹென்றி, ஆங்கில எழுத்தாளர் (இ. 1910)
1917 – பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (இ. 1989)
1982 – ஷ்ரியா சரண், தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1921 – சுப்பிரமணிய பாரதியார், (பி. 1882)
1948 – முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் தாபகர்
1957 – இம்மானுவேல் சேகரன், தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர்.(பி. 1924
1971 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (பி. 1894)
1973 – சல்வடோர் அலெண்டே, சிலியின் அதிபர் (பி. 1908)
2009 – யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (பி. 1927)

சிறப்பு நாள்

புத்தாண்டு நாள் (எதியோப்பிய நாட்காட்டி)
இலத்தீன் அமெரிக்கா – ஆசிரியர் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...