வரலாற்றில் இன்று (10.09.2024 )

 வரலாற்றில் இன்று (10.09.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 10 (September 10) கிரிகோரியன் ஆண்டின் 253 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 254 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 112 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
1823 – சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.
1840 – ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
1846 – எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1858 – 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.
1931 – பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.
1951 – ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
1967 – கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
1974 – கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.
2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

பிறப்புகள்

1971 – மேஜர் காந்தரூபன், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (இ. 1990)
1974 – பென் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1980 – ஜெயம் ரவி, தமிழ்த் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1975 – ஜோர்ஜ் தொம்சன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
1983 – ஏ. கே. செட்டியார், காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன் முதலில் தயாரித்தவர் (பி. 1911)
1983 – பீலிக்ஸ் புளொக், சுவிசில் பிறந்த இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
2008 – வி. கே. கானமூர்த்தி, ஈழத்து நாதசுரக் கலைஞர் (பி. 1948)

சிறப்பு நாள்

கிப்ரல்டார் – தேசிய நாள் (1967)
சீனா – ஆசிரியர் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...