வரலாற்றில் இன்று (17.08.2024 )

 வரலாற்றில் இன்று (17.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 17 (August 17) கிரிகோரியன் ஆண்டின் 229 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 230 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1807 – ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.
1862 – லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
1918 – போல்ஷெவிக் புரட்சியாளர் மொயிசேய் யுரீட்ஸ்கி படுகொலை செய்யபட்டார்.
1939 – த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.
1945 – இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.
1947 – இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1958 – பயனியர் 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.
1959 – மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.
1960 – காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1962 – கிழக்கு ஜெர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
1969 – மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
1970 – வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1979 – இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரேன் வான்வெளியில் மோதியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
1982 – முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
1988 – பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா உல் ஹக் மற்றும் பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
1991 – சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
1999 – துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1761 – வில்லியம் கேரி, ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834)
1963 – ஷங்கர், திரைப்பட இயக்குநர்
1986 – ரூடி கே, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1961 – திருமாவளவன், தமிழக அரசியல்வாதி

இறப்புகள்

1786 – பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக், பிரஷ்ய மன்னன் (பி. 1712)
1969 – லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, ஜெர்மனியக் கட்டிடக்கலைஞர் (பி. 1886)
1988 – ஸியா உல் ஹக், பாகிஸ்தான் அதிபர் (பி. 1924)

சிறப்பு நாள்

இந்தோனேசியா – விடுதலை நாள் (1945)
காபோன் – விடுதலை நாள் (1960)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...