வரலாற்றில் இன்று (13.08.2024 )

 வரலாற்றில் இன்று (13.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 13 (August 13) கிரிகோரியன் ஆண்டின் 225 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 226 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 3114 – மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.
1415 – நூறு ஆண்டுப் போர்: இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் 8000 பேருடன் பிரான்சை அடைந்தான்.
1516 – புனித ரோமப் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் நேப்பில்சையும் பிரான்சின் முதலாம் பிரான்சிஸ் மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1536 – ஜப்பானில் கியோட்டோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் கியோட்டோவில் இருந்த 21 நிச்சிரன் கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.
1849 – யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.
1913 – ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.
1920 – போலந்து – சோவியத் ஒன்றியம் போர் ஆரம்பமாயிற்று. ஆகஸ்ட் 25 இல் முடிவடைந்த இப்போரில் செம்படையினர் தோற்றனர்.
1937 – ஷங்காய் சமர் ஆரம்பமானது.
1954 – பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.
1960 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1961 – ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு பேர்லினின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை மூடி கிழக்கு ஜேர்மனியினர் தப்பிச் செல்லாவண்ணம் பேர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.
2004 – கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
2004 – புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
2006 – யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1899 – ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் (இ. 1980)
1924 – டி. கே. மூர்த்தி, கருநாடக இசை மிருதங்க வித்துவான்
1926 – ஃபிடெல் காஸ்ட்ரோ, கியூபாவின் புரட்சியாளரும் அதிபரும்
1933 – வைஜயந்திமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.

இறப்புகள்

1910 – புளோரென்ஸ் நைட்டிங்கேல், ஆங்கிலத் தாதி (பி. 1820)
1917 – எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (பி. 1860)
1946 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1866)

சிறப்பு நாள்

மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1960)
அனைத்துலக இடக்கையாளர் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...